சென்ற பகுதியின் தொடர்ச்சி…
நான் இருக்கும் நிலையை பார்த்து மனசாட்சி என் முன்னால் வந்து நின்று சிரித்தது.. மனசாட்சி சிரிப்பதை பார்த்ததும்
“உனக்கென்ன எனக்கு பிரச்சனையில மண்ட காஞ்சி இருக்குறப்ப எல்லாம் உனக்கு சிரிப்பா தான் இருக்கும்.. பிரச்சனை எனக்கு தானே.. உனக்கா?”
“என்னப்பா இப்படி எல்லாம் நம்மள பிரிச்சு வச்சு பேசுற” மனசாட்சி கேட்க
“வேற எப்படி பேச சொல்ற.. நானே என் பொண்ணு சொல்றத செய்றதா இல்ல மதி போய் பாக்குறத தெரியாம குழப்பதுல இருக்கேன்.. இது புரியாம என் முன்னாடி நின்னு சிரிச்சு கடுப்பேத்துற..”
“என்னப்பா இதுக்கு எல்லாம் போய் குழம்பினா எப்படி.? உன் காதல் இத விட இன்னும் எவ்வளவோ கஷ்டங்கள், சோதனைகள் வரலாம். அப்ப எல்லாம் என்ன பண்ணுவ? இடிஞ்சி போய் என்ன செய்றது தெரியாம உட்காந்திருப்பியா?”
“அதெல்லாம் வரும் போது பாத்துக்கலாம்.. இப்ப நா என்ன பண்றது தெரியல. அதுக்கு வழி எதாவது இருந்தா சொல்லு.?”
“இது யோசிக்க என்ன இருக்கு.? உன் பொண்ணு சொன்னத போய் முடிச்சிட்டு வந்து உன் மதிய பாரு.. இவ்வளவு தான.”
“என்ன இவ்வளவு சாதாரணமா சொல்ற.. நா இன்னிக்கு வருவேன் எதிர்பாத்திட்டு இருப்பாள? ந வரலேனா அவ மனசு கஷ்டபடும்ல.”
“ஆமா.. அப்ப உன் மதிய போய் பாரு.. உன் பொண்ணு சொன்னத அடுத்து பண்ணு.”
“என் பொண்ணு கேட்டா காரணம் என்ன சொல்ல? நீ தான் ஏதாவது சொல்லி சமாளிக்கனும்.”
“நானா?”
“பின்னா நானா சொல்ல முடியும்?” மனசாட்சி நக்கலடிக்க
“நா தான் சொல்லனும்.. ஆனா என்ன சொல்றது தான் தெரியல.. உனக்கு எதாவது தெரிஞ்சா சொல்லு.”
“என்ன சொல்ல?”
“என்ன நக்கலா?” நான் திரும்பி மனசாட்சியிடம் கேட்க
“என் பொண்ணு ஏன் போய் லேண்ட் பாக்கலேனு கேட்டா என்ன ரீசன் சொல்றது. அத தான் உனக்கு தெரிஞ்சா சொல்ல சொன்னேன்.”
“என்னைய கேட்டா நீ மொத உன் பொண்ணு சொன்னத பண்ணிட்டு இந்த டப்பாவ போய் குடுக்கலாம் தோணுது..”
“ஹலோ மிஸ்டர் மனசாட்சி என்ன விளையாடுறியா? என் மனச்சாட்சியா இருந்திட்டு எனக்கு சப்போர்ட் பண்ணுவ பாத்தா நீயும் என் பொண்ணு மாதிரியே பேசுற.”
“ஏன் அத மொதல பண்ணினா என்ன ஆகிட போகுது?”
“நீ தான சொன்ன மதியே அடுத்த தடவ வந்து பாக்குறதுக்கு சான்ஸ் குடுத்திருக்கா. நீ நல்லா யூஸ் பண்ணிக்கோ சொன்ன”
“ஆமா இல்லைனு யார் சொன்னா? இப்பவும் அந்த சான்ஸ் இருக்கும்.. எங்கையும் ஓடி எல்லாம் போய்டாது.”
“ஓடாது தெரியும்.. பட் அத கரெக்ட் டைம்ல கரெக்டா யூஸ் பண்ணனும்ல”
“ம்ம்.. ஆமா.. பட் உன் மதி உனக்கு சான்ஸ் மறைமுக கொடுத்தாலும் நேரடியா அடிக்கடி பாக்க வேணாம் சொல்லியிருக்காளா? இந்த தடவ போய் பாக்கும் போது அத சொன்ன நீ என்ன பண்ணுவ?” மனசாட்சி கேட்டதும் அதுவும் சரியென பட்டது.
“சரி இப்ப என்னைய என்ன பண்ண சொல்ற?”
“ம்ம்.. உன் பொண்ணு சொன்ன வேலைய முதல்ல பண்ண சொல்றேன்.”
“சரி என் பொண்ண சொன்ன மாதிரி லேண்ட் பாத்திட்டு வந்து போன மதி கோவிச்சுக்கமாட்டாளா? அவ மனசு கஷ்டபடாம இருக்கும்ல”
“அது எப்படி இருக்கும்.? உன் மேல கொஞ்சம் கோபம், வருத்தம் எல்லாம் இருக்க தான் செய்யும்.. உன்ன எதிர்பாத்து வரலேனு ஏமாற்றம் கூட அடையலாம்.”
“உன்ன.. சரி அப்படி இருந்தா நா என்ன பண்ண? அதையாவது சொல்லு”
“நீ தான் பேசி கன்வின்ஸ் பண்ணனும்?”
“நா கன்வின்ஸ் பண்ணனுமா?”
“கன்வின்ஸ் தான பண்ண சொன்னேன். ஏதோ கற்பழிக்க சொன்ன மாதிரி பயப்படுற.”
“இல்ல.. பொதுவா அவ சைலைண்ட் டைம் தான். ஆனா கொஞ்சம் பிடிவாதக்காரி.. எதையும் உடனே ஏத்துக்கமாட்டா.. அதான் எப்படி கன்வின்ஸ் பண்றது யோசிக்கிறேன்.”
“இதெல்லாம் ஒரு மேட்டரா? பேசினார் பேசினால் எந்த பொண்ணும் மனம் மாறி
பேசுவாள்.”
“அதெல்லாம் சொல்ல நல்லா தான் இருக்கு.. பட் நடக்கனும்ல.. அதிக முக்கியம்.”
“அதெல்லாம் நடக்கும்.. மொத காதலுக்கு தேவை நம்பிக்கை.. அதுவே உன்கிட்ட கம்மியா தான் இருக்கு.”
“ஏன் அப்படி சொல்ற..?”
“பின்ன என்ன ஏதாவது சொன்ன நடக்குமா? நடக்காதா? யோசிச்சிட்டே இருந்தா எப்படி நடக்கும்.. எல்லாமே முயற்சி செய்து பண்ணினா தான் நடக்கும்..”
“ம்ம்.. என்னமோ சொல்ற.. இது மாதிரி அப்ப அப்ப வந்து தரிசனம் குடுத்து ஐடியா சொன்ன இந்த முறையாவது என் காதல் சக்கஸஸ் ஆகட்டும்.”
“டோன்ட் வொரி.. திஸ் டைம் கண்டிப்பா உன் மதி உனக்கு கெடைப்பா.. நீ தாராளமா உன் பொண்ணு சொன்னத செஞ்சிட்டு வா.”
“ம்ம் சரி.. உன்ன நம்பி போறேன்.”
“ஓகே குட் லக்” சொல்லி மனசாட்சி மறைந்தது.. அதன் பின் எழுந்து முகம் கழுவி ஆன்லைனில் இன்று செல்வதற்கு பாஸ் ரெடி செய்துவிட்டு அன்றைக்கான காலை வேலைகளை செய்தேன். என்ன தான் மதியை பற்றி நினைக்காமல் இருக்க முயற்சி செய்தாலும் என்னால் அவளை சந்தித்த பின் அப்படி இருக்க முடியவில்லை. இடையிடையே அவளை பற்றி எண்ணங்கள் நினைவுகள் வந்துக் கொண்டே தான் இருந்தன.
அதையெல்லாம் மீறி அன்றைக்கு மதியம் என்னுடைய கிராமத்திற்கு டிரெயில் சென்றேன்.. நான் பிறந்து வளர்ந்த அந்த சாந்தமங்கலம் என்னும் கிராமம். மதுரை மாவட்டத்தில் இருக்க கூடிய அழகான கிராமம்.. அப்போது எல்லாம் அங்கு நிலம் வைத்திருக்கும் பெரும்பாலனோர் விவசாயம் பார்த்தனர்.
அதனாலே பச்சை பசேலென்று இருக்கும்.. ஊருக்குள் நுழைந்ததும் இருக்கும் பனைமரங்கள், தென்னைமரங்கள் அன்றைக்கு வெயிலுக்கான குடைகள்.. அது மட்டுமில்ல என்னை போன்ற காதல் செய்தவருக்கு தன் காதலியை யாருக்கும் தெரியாமல் மறைவாக சந்திக்க உதவியது இந்த மரங்கள் தான்..
நான் பணியில் இருக்கும் போது என் பெற்றோரை பார்க்க நான்கைந்து முறை வந்திருக்கிறேன். கடைசியாக அவர்கள் இறந்ததற்கு வந்து காரியம் எல்லாம் செய்துவிட்டது போனது தான்.. அதன் பின் பன்னிரண்டு வருடங்கள் கழித்து இப்போது தான் செல்கிறேன்.
கடைசி முறை சென்ற போதே நிறைய விஷயங்கள் சூழல் எல்லாம் மாறியிருந்தன. நிறைய வீடுகள் வர ஆரம்பித்திருந்தன. இப்போது வீடுகள் எல்லாம் நிறைய வந்திருக்கும் என பலவற்றையும் நினைத்துக் கொண்டே கிராமத்தை நோக்கி பயணித்தேன்..
இது மாதிரி இனியும் எத்தனை நினைவுகள் வந்தாலும் மதியுடனான அந்த காதல் நினைவுகள் என்றுமே பசுமையானது.. இனிமையானது.. சுகமானது.. இங்கு சென்னையில் மதியை பார்த்துமே பழைய காதல் நினைவுகள் எல்லாம் அந்த சூழலில் நடக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ற மாதிரி நினைவில் வந்து வந்து செல்ல தவறவில்லை..
அப்படி இருக்கும் போது மதியை ஐந்து வருடமாக காதலித்த இடத்திற்கு செல்லும் போது வராமல் இருக்குமா? இப்போதும் எங்களின் காதல் நினைவுகள் எல்லாம் பயோஸ்கோப் படம் போல் கண் முன்னால் ஓடிக் கொண்டேயிருக்கிறது. அந்த சுகமான நினைவுகளுடனே இரவு மதுரை வந்து சேர்ந்தேன். அன்று இரவு ஒரு லார்ட்ஜில் ரூம் எடுத்து தங்கி அன்றைய இரவு பொழுதை கழித்தேன்.
மறுநாள் காலையில் கிழம்பி என்னுடைய கிராமத்திற்கு சென்றேன். அங்கு இறங்கி கால் வைத்ததுமே இதற்கு முன் இல்லாத ஒரு சிலிர்ப்பு உடம்பில் ஏற்பட்டு கையில் இருந்த முடிகள் எல்லாம் சிலிர்த்து உற்சாகமாகி எழுந்து நின்றன. இந்த 12வருடத்தில் முன்பை விட நிறைய மாற்றங்கள் வந்திருந்தன..
அதை எல்லாம் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றேன்… ஏற்கெனவே முந்தைய நாள் இரவு பேசிய சந்திரனிடம் நான் வரும் தகவலை சொல்லிவிட்டேன்.. இருந்தாலும் வீட்டை பார்க்க வேண்டும் என்றால் அவர் இல்லாமல் போக முடியாது என்பதால் இப்போது திரும்பி கால் செய்ய ரிங் போய்க் கொண்டே தான் இருந்தது. எடுக்கவில்லை. அவர் கால் ஐ எடுக்கவில்லை என்றதுமே உள்ளுக்குள் ஒருவித கோவம் வந்தது..
“இவர நம்பி வந்தா கால் பண்ணா கூட எந்த ரெஸ்பான்ஸ் இல்லாம இருக்கே..
இந்த ஊர்ல இப்ப நமக்கு தெரிஞ்ச ஆள் யாரும் அப்படி இருக்கமாட்டாங்களே.. இங்க வந்ததுக்கு நேத்தே மதி பாக்க போய் இருந்திருக்கலாம்” என நானாக மனதிற்குள் நினைத்துக் கொண்டே ஊருக்குள் செல்லும் வழியில் ஒரு ஓரமாக நிற்க என்னுடைய போன் அடித்தது.. இந்த கடுப்பான நேரத்தில் யார் என எடுத்து பார்த்தேன்.. அந்த சந்திரன் தான் பண்ணியிருந்தான்..
“ஹலோ சார் என்ன நேத்தே வரதா சொன்னிங்க.” என்றான்..
“நேத்து நைட் தான் மதுர வந்தேன். அதான் வரமுடியல.. இப்ப உன் ஊர் எல்லையில தான் நிக்குறேன்.. இப்ப வர முடியுமா?” கேட்க
“இதோ வரேன் சார்.. அஞ்சே அஞ்சு நிமிஷம் அங்கேயே செத்த நில்லுங்க.. வந்திடுறேன்” என்றான்..
அவன் வரும் வரை அங்கே இருந்த டீக்கடையில் ஒரு டீ வாங்கி குடித்துக் கொண்டே அங்கே இருந்த பேப்பரை புரட்டிக் கொண்டிருந்தேன்.. அந்த சமயம் பார்த்து என் முன்னால் இருந்து
“டே வெங்கடேசா உன்ன பாத்து எத்தன வருசம் ஆச்சு” குரல் கேட்க நானும் ஒரு ஆரவத்துடன்
“அது யார்டா நம்மள பேர் சொன்னதும் இல்லாம டே போட்டு கூப்பிடுறது” பார்க்க அந்த ஆளை பார்த்ததும் சில வினாடிகளிலே அடையாளம் கண்டுக் கொண்டேன். என்னை கூப்பிட்டது வேற யாரும் இல்லை. என்னுடைய பள்ளி கல்லூரி கால தோழன் சந்திரசேகர் தான்.. அவனை பார்த்ததும் மகிழ்ச்சியாக தான் இருந்தது..
“டே சேகர்.. நீ இன்னும் இங்க தான் இருக்கியா?” கேட்க
“ஆமா.. பின்ன நா படிச்ச படிப்புக்கு வேற எங்க போக முடியும். இங்கையே இருந்துட்டு தான் வாழ்க்கை ஓட்ட முடியும்..”
“சரி நீ எப்படி இருக்க.? ஆளே மாறி போயிட்ட.? என்ன விசயம் ஊர தேடி வந்திருக்க.?” அடுக்கடுக்காக கேள்வி கேட்க
“நா நல்லா இருக்கேன். பின்ன வயசான ஆன ஆள் மாறாம அப்படியேவா இருப்பாங்க.. இங்க வீடு இருக்குனு ஒரு புரோக்கர் போன் பண்ணான்.. அதான் வீட்டையும் ஊரையும் பாத்துட்டு போலாம் வந்தேன்.”
“அட என்ன மாப்பிள்ளை.. நா தான் உனக்கு கால் பண்ணேன்.”
“அட அப்படியா..? போன்ல பேசும் போதே இந்த குரல்ல எங்கையோ கேட்ட மாதிரி இருக்கு நெனச்சேன்.. அந்த சமயம் பாத்து என் பொண்ணு போன் பண்ணால.. அப்படியே அவ கூட பேச போய்ட்டேன்.”
“அப்படியா.. சரி.. சரி.. ஒன்னுமில்ல.. வா வீட்டுக்கு சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்திட்டு சாய்ங்காலமா போய் வீட்ட பாக்கலாம்.”
“நீ இப்ப காட்டுடா.. நா பாத்திட்டு ஊருக்கு போகனும்.”
“என்னது ஊருக்கு போகனுமா? ஏன் ஊருல யாரும் தனியா இருக்காங்களா?”
“இல்ல.”
“இல்லைல.. பின்ன ஏன் வந்ததும் போகனும் குதிக்குற.. இருந்துட்டு நாளைக்கு போலாம் வா” சொல்லி கை பிடித்து இழுத்து கொண்டு போக நானும் வேறு வழியில்லாமல் அவன் பின்னால் சென்றேன்.. அவனுடைய டிவிஎஸ் எக்ஸ் எலில் வீட்டிற்கு போகும் வழியில் அவனைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் சொன்னான்.. என்னை பற்றியும் சில விஷயங்கள் கேட்டுக் கொண்டே வந்தான்.
அவன் வீட்டிற்கு சென்றதும் அங்கே அவனுடைய மனைவி கீதா, மகள் சஞ்சனா மகள் சஞ்ஜெய் என வீட்டில் இருப்பவர்களை பற்றி சொன்னான்.. அவனுடைய மகன் வேலைக்கு போயிருப்பதாகவும் மகளுக்கு வரன் பார்த்துட்டு இருப்பதாகவும் சொன்னான்..
நானாக எதுவும் அவனுடைய சொந்த வாழ்க்கை பற்றி கேட்கவில்லை. அவனாக தான் சில விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தான்.. நேரம் மதியம் ஆனதால் ஏற்கெனவே வற்புறுத்தி கொண்டே இருந்ததால் கொஞ்சமாக சாப்பிட்டு எழுந்தேன்.. மதியம் மீண்டும் சிறிது நேரம் ஊரில் நடந்தவற்றை பேசிவிட்டு மாலை ஆனதும் வீட்டை பார்க்க சென்றோம்..
சேகர் அந்த ஏரியாவில் இருந்த வீட்டை எல்லாம் காட்டினான். எல்லா வீடும் பார்க்க அழகாக அம்சமாகவும் தான் இருந்தது. ஆனால் ஏனோ தெரியவில்லை அவை எல்லாம் மனதிற்கு ஒட்டவே இல்லை. அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வரவேயில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. அவனிடம் பேசிக் கொண்டு வரும் போது கடைசியாக தனியாக இருந்த வீட்டை பார்த்தேன்.
அந்த வீட்டின் பின்னால் மூன்று பனைமரங்கள் இருந்தன. அந்த பனைமரத்தை பார்த்ததுமே அது நானிருந்த காலத்தில் இருந்தே இருக்கின்ற பனைமரம் தான் என்பது தெரிந்துவிட்டது.. சேகரை கொஞ்சம் நிற்க சொல்லிவிட்டு அந்த வீட்டின் பின்னால் ரோட்டை ஓட்டி இருந்த அந்த பனைமரத்தை போய் பார்த்தேன்..
அது கொஞ்சம் பாலடைந்து போய் இருந்தது. அதில் இருந்த தூசியை எல்லாம் தட்டி விட்டு பார்த்தேன். நான் நினைத்தது இருக்கிறதா என பார்த்தேன். முதல் இரு மரங்களில் இல்லை. கடைசியாக இருந்த மரத்திலும் இருந்த தூசியை தட்டிவிட்டு பார்த்தேன். நான் நினைத்தது நினைத்த மாதிரியே இன்னும் இருக்கிறது என்பதை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சியில் சிலாகித்து போனது.. அந்த மகிழ்ச்சியோடு..
மீண்டும் அவளோடு வருவேன்…