ஒரு அழகிய காதல் கதை!

Posted on

என் அப்பாவும் ஷியாமும் சிறிது நேரம் பேசிய பபடி நிக்க பஸ் வந்தது நான் பஸ்சில் ஏறும் போது ஷியாம் ரகசிய மாக ஏதோ என் கையில் தினித்தார் நான் பஸ்சில் ஏறி அமர்ந்த பின்னர் கையில் அவர் தினித்ததை பார்த்தேன் அதில் I Love you என்று எழுதிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது.

எனது சந் தோஷங்கள் மறைந்து சோகத்தை நோக்கிய பயணம் துவங்கியது….

நான்: குளியலறையில் வீனா குளிக்கும் சப்சம் கேட்க்க துவங்கியது. என் நினைவலைகள் பின்னோக்கி சென்றது

எனக்கு சமிப நாட்களாகவே நிற்க்காமல் வாந்தி வரத்துவங்கியது நானும் பல ட்ரீட்மென்ட் எடுத்து பார்த்துவிட்டேன் எதுவும் உபயோகம் இல்லை.

அன்று கம்பெனி ஆடிட் விஷயமாக நான் வெளி ஊருக்கு போய் இருந்தேன். வழியிலேயே மீண்டும் வாந்தி வர துவங்கியது. என்ன செய்தும் நிறுத்த முடியவில்லை.

அந்த ஊரில் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் என்னை அங்கிருந்த ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார்.

நான் பாதி மயங்கிய நிலையில் எனக்கு ட்ரீட்மென்ட் நடைபெற்றது. என்னை யாரோ தட்டுகிறார்கள் உன் பெயர் என்ன என்று. நான் கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்தேன்

தேவதைப்போல ஒரு பெண். அவளை அழகு என்று ஒரு வரியில் கூற முடியாது. அவள் அழகிற்கு ஓர் இலக்கணமாக இருந்தால்.
மீண்டும் பெயர் கேட்டபோது ஷியாம் என்றேன். அவள் மீதிலிருந்து கண்ணேடுக்க தோன்றவில்லை.

குடித்திருக்கிறாயா? என்றால் இல்லை என்றேன். எந்த ஊர் என்றால் பதிலலித்தேன்.
பின்னர் அவள் எந்த குடிகாரன் குடித்தி இருப்பதை ஒப்பக் கொள்வான் என்றால்.

நான் தினமும் நூற்றுக்கணக்கான பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஏன் எனது கம்பெனியிலேயே நூற்றுக்கணக்கான பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் யாரிடமும் இல்லாத ஓர் அழகு இவள்.

பின்னர் டாக்டர் வந்து அவளை எனக்கு அறிமுகம் செய்யும் போது தெரிந்தது அவளது பெயர் வீனா என்று.

நிற்க்காத வாந்தி காரணமாக என்னால் தொழிலை நல்ல முறையில் கொண்டு போக முடியாது தினறினேன். அவசரமாக இரண்டு பெரிய பாய்லர் தேவைப்பட்டது. எனக்கு உதவியாக எனது தொழிலை கவனித்துக்கொள்ள எனது நண்பர்கள் மூன்று பேர் என்னுடன் இருந்தார்கள். ரமேஷ், முருகேசன், மணி. இவர்கள் மூவரைப் பற்றி பொதுவாக நல்ல அபிப்பிராயம் மற்றவர்களுக்கு இல்லை ஆனாலும் நான் இவர்களை நம்பினேன். காரணம் எனக்கு தேவைகள் கம்மி. எந்த கெட்ட பழக்கமும் எனக்கு இல்லை. ஆகவே செலவு குறைவு. நான் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்ததால் இப்போது யாராவது கஷ்டப்பட்டால் அவர்களுக்கு என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்திருப்பேன்

இப்படி தான் வாழ்க்கையில் கஷ்டப்பட்ட இந்த மூன்று நண்பர்களையும் எனது தொழிலில் ஈடுபடுத்தி நல்ல சம்பளமும் கொடுத்தேன்.

வாந்தி எடுத்து எடுத்து உடலும், மனதும் இளைத்தது. அதனால் வீனா தங்கியிருந்த டாக்டர் என்னை காண மீண்டும் அழைத்திருந்தார் ஞாயிறு அன்று வருவதாக கூறி இருந்தேன். நான் வீனைப்போல ஒரு பெட்டியில் சுடிதார், பொட்டுக்கள், சாக்லேட்டுகள் வாங்கி வைத்து அதை வீனா வின் அறைக்கு முன்பு வைத்து நான் டாக்டரைக் காண சென்றேன்.

டாக்டர் என்னிடம் ஒரு கடிதம் கொடுத்து அடுத்த நாள் மெடிக்கல் காலேஜ் சென்று நரம்பியல் டிப்பார்ட் மென்டில் கொடுத்து குறிபிட்ட டாக்டரை காணுமாறு சொன்னார்.

அன்று முழுவதும் அடுத்த நாள் வீனா என்னிடம் நான் வாங்கி கொடுத்த சுடிதார் இட்டு வருவதைப் போலவும் கால்களை நிலத்தில் வரைத்து I Love You என்பது போலவும் கணவு கண்டேன். கணவு தானே எல்லோருக்கும் ப்பிரியாய் கிடைக்கும். எனக்கும் கிடைத்தது. அடுத்த நாள் கிடைக்க போகும் அடியைப் பற்றி அறியாமல் உறங்கப் போனேன்.

நான் : அடுத்த நாள் காலையில் மெடிக்கல் காலேஜ் சென்றேன். கலேஜில் எனது கண்கள் வீனாவை தேடியது. ஆனால் போகும் வழியில் எங்கும் அவளை காணமுடியவில்லை.

டாக்டர் எனது பிரச்சினைகள் அனைத்தும் பொருமையாக கேட்டார். இரவு உறக்கத்தைப் பற்றி கேட்டார். கடைசியாக எனக்கு வியாதி உடலில் இல்லை என்றும். மனதிலே உள்ளது என்றும் இனி அனாதை என்று நினைக்க கூடாது என்றும் யாரையாவது கல்யாணம் செய்யவோ அல்லது யாரையாவது காதலிக்கத் கூறி. டென்ஷன் குறைக்க இரவில் சாப்பிட மாத்திரை யும் எழுதி கொடுத்து அனுப்பி வைத்தார்.

மீண்டும் கலேஜில் இருந்து வெளியே வரும் வரை என்னால் வீனாவை காணமுடியவில்லை.

வெளி போர்ட்டிக்கோ அருகில் கிரன் ஒரு பெண்ணுடன் நின்றிருந்தான்.

ஹாய் கிரன்

ஹாய் அண்ணா. என்ன இந்தப் பக்கம்

எனக்கு வேண்டி தான் டாக்டரை பார்க்க வந்தேன்

ஆண்ணா இவர் எனக்கு தெரிந்தவர் இவரது புருஷனுக்கு ஹார்ட்டில் பிராப்ளம் உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும். ஆனால் பாவம் இவர்களிடம் வசதி இல்லை என்றான். வேண்டுமானால் அவரை பார்க்க அழைத்துச் செல்வதாகவும் கூறினான்

அந்த பெண் ஏதோவொரு எதிர்பார்புடன் என்னையே பார்த்தபடி நின்றாள். அவரது நிலையும் முகமும் என் மனதில் பெரிய வேதனை உண்டாக்கியது. இதுப்போன்று எனது இளமை காலத்தில் எத்தனை பேரிடம் கையேந்தி உள்ளேன். எத்தனை அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். அதே நிலையில் இன்று என் முன்பு ஒரு பெண் ஏக்கத்தோடும், எதிர்பார்ப்பு டனும். எனது கண்கள் கலங்கியது அவர் யாரேன்ரோ புருஷன் பேர் என்ன என்றோக்கூட கேட்க்க விலை

கிரன் ஆப்ரேஷன் செய்ய எத்தனை செலவாகும்

அண்ணா 6 லட்சம் ரூபாய் வரை ஆகும்

சரி செக்கு கொடுத்தால் உங்கள் மெடிக்கல் காலேஜில் ஏற்ப்பார்களா?

கண்டிப்பாக நான் இங்கே தானே படிக்கிறேன் அதனால் ஏற்ப்பார்கள்

ஓகே என்று கூறி செக்புக் எடுத்து 6 லட்சம் ரூபாய் எழுதி கிரனின் கையில் கொடுத்தேன். உடனடியாக ஆப்ரேஷனுக்கு ஏற்படு செய்

அப்போது நான் கொடுத்த சுடிதார் அணிந்து வீனா எங்களை நோக்கி வந்தாள்.
நான் என் நலை மறந்து அவளைப் பார்த்தேன்.

பிறகு அவள் கேன்டீனில் எனது கைகளைப் பிடித்தாள். நான் இனி அனாதை இல்லை என்றும். தான் உள்ளதாக கூறியபோது எனது காதல் சிறகுகள் முளைத்து பரந்தது

நான் :
மெடிக்கல் காலேஜ் டாக்டர் கொடுத்த கன்சல்டிங் ரிப்போர்டை வீனா தங்கியிருந்த டாக்டரிடம் காண்பிக்க ஹாஸ்பிடல் போனேன். அப்போது டாக்டர் அங்கு இல்லாததால் பத்மாவிடம்

வீனா இன்று நான் கொடுத்த சுடிதார் போட்டிருந்தலே அப்படியானால் எனது அப்ளிகேஷன் ஏற்றுக்கொள்ள பட்டதா?

வீனா என்ன டிரஸ் போட்டிருந்தாள் என எனக்கு தெரியாது நான் அவள் போகும் முன்பே ஹாஸ்பிடல் வந்துவிட்டேன்.

ஒன்று மட்டும் எனக்கு நன்றாக தெரியும் அவள் உங்களது ஆசையை புரிந்து கொள்ள வில்லை என்று. காரணம் அவள் +2 வில் இருந்து கேரளத்தில் சனல் என்பவனை காதலிப்பதாக கூறியுள்ளாள்.

எனக்கு தலை சுற்றுவதுப்போல் இருக்கவே நான் பத்மா விடம் விடைப் பெற்றேன்.

கம்பெனியில் அன்று மீண்டும் பாய்லர் இரண்டு வாங்குவது பற்றி பேச்சு வந்தது. எனக்கு எதிலும் விருப்பம் இல்லாமல் சரி கொட்டேஷன ஏதாவது உண்டா

மணி: இந்திய தயாரிப்பை காட்டிலும் சைனாவில் இருந்து 45 சதவீதம் குறைவு அதனால் அதை வாங்கலாம்
ரமேஷ், முருகேசனும் அதையே கூற நான் வாழ்வையே வெறுத்த நிலையில் சரி என்னமோ செய்யங்கள்
கடன் எடுக்க வேண்டாம் கம்பெனி அக்கவுண்டில் இருக்கும் பத்து கோடியை எடுத்துக் கொள்ள கூறினேன்.
பத்து கோடியை எடுத்து விட்டால் அடுத்த மாசம் மட்டுமே சம்பளம் கொடுக்க முடியும். அதற்கு அடுத்த மாசம் எப்படி சம்பளம் தருவது என்றார்கள்.
புதிய ஆர்டர் எடுத்து ரோட்டேஷன் செய்யலாம் நமக்கு லோன் தருவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி விட்டார்கள். ஆகவே இது ஒன்று தான் வழி. ஏற்கனவே நாம இதுக்கு வேண்டி நிலம் வாங்க கொடுத்த டைம் தீர நான்கு மாதங்கள் தான் இருக்கு. எப்படியும் புது ஆர்டர் வந்தால் தான் விடிவு. இல்ல நாம காளி இதுதான் நிலமை.

வாழ்க்கையே எனக்கு சுமையாக மாறியது எதிலும் ஒரு நாட்டம் இல்லாமல் சுற்றினேன் இந்த வாழ்வு துவங்கியது முதல் அனாதை என்ற பட்டமும் அவமானங்கள் மட்டும் தொலில் சுமந்த எனக்கு வீனாவை பார்த்த பின் சில நாட்கள் சந்தோஷமாக இருந்தது. ஆசைபட்ட ஒன்றும் கிடைக்காத நிலையில் வினாவும் இல்லை என்பதை என்னால் தாங்க முடியாமல் கிட்டத்தட்ட பைத்தியம் போலவே மாறினார்

அன்று வீனா இருந்த ஊரில் ஒருவரை காண போய் இருந்தேன் புதிய இடத்திற்கு ஏற்கனவே ஒன்றரை கோடி அட்வான்ஸ் கொடுத்து அக்கிரிமன்ட் போட்டிருந்தேன் அதற்கு மீதமுள்ள பணத்தை கடனாக கேட்க்க வந்தேன். பணம் நான் நினைத்த நேரத்தில் கிடைக்காது என்று தெரிந்தது. எல்லா பிரச்சனைகளும் ஒன்றாக அழுத்த வாழ்க்கையில் முதன்முதலாக குடிப்பது என தீர்மானித்து பாருக்குள் நுழைந்து ஒரு பீர் வாங்கி குடித்தேன். பாதி பீர் குடிக்கும் போதே எனக்கு நல்ல போதை ஏறி வாந்தியும் வர துவங்கியது. நான் முழு போதை ஆனதால் என்ன நடந்தது தெரியவில்லை. கண் திறந்து பார்த்த போது என் அருகில் பத்மா நின்று இருந்தால்.
அவளது அழுது கொண்டிருந்தா ல்

பத்மா ஷியாம் ஏன் இப்படி மாறி போனாய் என்றால். எனக்கு வீனாவின் அட்டிரஸ் தெரியாது தெரிந்தால் அவளது காலில் விழுந்தாவது உங்கள் கல்யாணத்துக்கு ஏற்படு செய்திருப்பேன். நீ ஒன்று செய் அவளும் கேரளா போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் ஒரு விபரமும் இல்லை. நீ கேரளா சென்று அவளை கண்டு பிடித்து அழைத்துவா . எனக்கு அவள் இருக்கும் மாவட்டம் தெரியும் அவளது ஊரின் முதல் எழுத்து மட்டுமே தெரியும் அவளது அப்பா ஏதோ ஒரு ஊர் பெயர் கூறினார் அது மறந்து விட்டது. அதனால் அங்கு போய் எப்படியாவது கண்டுபிடி என்றால். கண்ணீருடன்…

அன்று இரவே நான் கேரளத்திற்க்கு பஸ் ஏறினேன். வாழ்க்கையின் அடுத்த அவமானத்தை தேடி கேரளத்தில் நான்

விடியல் காலையில் கேரளா வந்தடைந்தேன் இரவு முழுவதும் தூக்கம் இல்லை தமிழகம் தாண்டிய எனது முதல் பயணம். கேரள மண்ணில் கால் வைத்ததும் ஒரு இனம் புரியாத சுகம் உடல் முழுவதும். நேற்றைய பஸ் பயணத்தில் நான் வாந்தி எடுக்கவில்லை எப்படி என ஆராய்ந்தேன் நேற்றைய பயணத்தில் நான் என்னை மறந்திருந்தேன் ஓ அப்ப டாக்டர் சொன்னது சரிதான். நான் ஒரு மனநோயாளி தான். என் நோய் தீர்க்கும் மருந்து வீனா இங்கு எங்கோ இருக்கிறாள் என்பதே என் உடலில் ஏற்படும் சுகத்திற்க்கு காரணம்.

அருகில் இருந்த ஸ்டீடி பூத்தில் இருந்து கம்பெனிக்கு போன் செய்தேன். ரமேஷ் எடுத்து இன்று பாய்லர்கள் வரும் என்றும் ஒரு வாரத்தில் எரக்ஷன் வேலை தீர்ந்து பாய்லர்கள் வேலை செய்யும் என்றான்.
நான் எங்கு உள்ளேன் என்பதை சொல்லாமல் நான் இல்லாவிட்டாலும் பணியைத் தீர்த்து பாய்லர்களை ஸ்டார்ட் செய்ய சொன்னேன்.

திருச்சூர் நல்ல ஊர் நான் நல்ல தரமான ஒரு லாட்ஜில் ரூம் எடுத்தேன். ஒரு கார் ஏற்பாடு செய்து அன்று முழுவதும் இலக்கில்லாமல் சுற்றினேன்.

இரவு ரூம்மிற்க்கு வந்து இன்றைக்கு செய்வதெல்லாம் நினைத்துப் பார்க்க பல கேள்விகள் வந்தது. எப்படி நான் அவளை கண்டுபிடிக்க போகிறேன்?

அடுத்த நாள் காலையில் எழுந்ததும் இனி தேவை இல்லாமல் சுற்றாமல். எப்படி இலக்கை அடைவது என ஆலோசித்தேன்.

புரியாத பாஷை, தெரியாத மனிதர்கள், முகவரி தெரியாத பெண். எப்படி கண்டுபிடிக்க.
இலக்கில்லாத வாழ்கையையே இன்று இலக்கை நோக்கி மற்றியவன் நான். ஆனால் இது மிகவும் கஷ்டமான சவால்.
எனக்கு தெரிந்ததெல்லாம்
பெயர் : வினா
வயது : 18
ஊர் : பி யில் துவங்கும்
மாவட்டம் : திருச்சூர்
இவ்வளவு தான் எனக்கு தெரியும். இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு போலிஸ் படையே இயங்கினாலும் கண்டுபிடிக்க முடியாது. பிறகு நான் எப்படி கண்டு பிடிக்க போகின்றேன்?

கேரளா டூரிசம் அலுவலகம் சென்றேன்.. அவர்களிடம் திருச்சூர் மாவட்டத்தின் போஸ்டல் புக் வாங்கினேன்.

அறைக்கு வந்தேன் பி யில் துவங்கும் கிராமங்களின் பெயர்களை தனியாக குறித்து வைத்தேன். சிறியதும் பெரியதுமாக சுமார் 300 க்கும் மேல் இருந்தது.

எனக்கு தலை சுற்ற துவங்கியது. ஒரு நாளைக்கு 3 ஊர்கள் என்றாலும் மூன்று மாதங்கள் எடுக்குமே எப்படி கண்டுபிடிக்க முடியும்?

இரவெல்லாம் எப்படி வீனாவை கண்டுபிடிக்க முடியும் என்று ஆலோசனை களில் மூழ்கினேன். எந்த ஐடியாவும் நல்ல விதமாக எனக்கு தோன்றவில்லை. எப்படி ?எப்படி ?

அடுத்த நாள் இன்று கேரளாவிற்கு வந்த மூன்றாம் நாள். காலையில் டீ குடிக்க கடைக்கு சென்றபோது வழியில் பெட்டி கடை ஒன்றில் ஒரு பேப்பர் தொங்கியது. தினத்தந்தி

ஒரு நிமிடத்தில் புது ஐடியா கிடைத்து. தினத்தந்தி க்கு மனதில் ஆயிரம் நன்றி கூறினேன். நேரே ரூமிற்க்கு சென்று பல நாட்களுக்கு பின் நல்ல அயர்ன் செய்த சட்டையை மாட்டி நீட்டாக வெளியே வந்து ஆட்டோவில் ஏறி போஸ்ட் ஆபீஸ் போனேன் நேரடியாக ஹெட் போஸ்ட் மாஸ்டரை சந்தித்தேன். எனது கம்பெனியின் கார்டை கையில் கொடுத்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன்

எஸ் வாட் கேன் ஐ டூ

சார் சமீபத்தில் எங்களது நிறுவனத்தில் —- போஸ்டிங் க்கு வேண்டி இன்டர்வியூ நடத்தினோம். அதில் இந்த மாவடத்தை சேர்ந்த வீனா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது பயோடேட்டா காணாமல் போய் விட்டது. எங்களது நிறுவனத்திற்கு அவர் உடனடியாக தேவைப்படுகிறது. ஆனால் எங்களிடம் விவரம் இவ்வளவு தான் நீங்கள் தான் உதவவேண்டும் என்றேன்.

நான் எப்படி ? ?

சார் இந்த மாவட்டத்தில் பி என்று துவங்கும் 300 இடங்கள் உள்ளது. அந்த 300 இடங்களுக்கும்
வீனா
ஊர் பெயர்
இட்டு நீங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள் என்று தந்தி அனுப்பவும் அவர் எப்படியும் என்னை தொடர்பு கொள்வார்கள் என்று வாயில் தோன்றியதை அள்ளி விட்டேன்.

தந்தி ஆடுநரியா எக்ஸ்பிரஸ் சா என்றார்

எக்ஸ்பிரஸ் முகவரி தவறிய அனைத்து தந்தி யும் எனக்கு ரிட்டன் வரவேண்டும்

கண்டிப்பாக உங்கள் லோக்கல் அட்டிரஸ்

நான் கொடுத்து பணமும் அடைத்து ரூமிற்க்கு வந்தேன்

தேடுதலை தொடர்வேன் நான்

அடுத்த நாள் மாலை வரை ஒரு வேலையும் செய்யாமல் ரூமிலேயே இருந்தேன். இன்று நான் கேரளா வந்த நான்காம் நாள்.
மாலை தந்தி ரிட்டர்ன்ஸ் எல்லாம் ஒரு பெரிய கட்டாக என் கையில் கிடைத்தது. ஒவ்வொன்றாக நான் எழுதிய ஊர்களில் இருந்து அடித்து வந்தேன். கடைசியாக 48 இடத்தில் இருந்து ரிட்டர்ன்ஸ் வரவில்லை.

ஒன்று நிச்சயம் ஆனது இந்த 48 ஊர்களில் எதோ ஒரு ஊரில் என் தேவதை உள்ளால் என்று. எதோ பெரிய சாதனை படைத்தது போல உள்ளம் நிறைந்தது

பின்னால் வரப்போகும் அபாயங்கள் ஏதும் தெரியாமல் அன்றைய இரவை சுகமான கனவுகளுடன் நான்

நாளை தேடுதல் துவங்கும்

இன்று நான் கேரளா வந்த 5 ஆம் நாள் காலையில் இருந்து மாலை வரையில் ஐந்து ஊர்களில் ஒவ்வொரு தெருவாக அலைந்தேன் பிரொஜனம் ஒன்றும் இல்லை

ஆறாவது நாளும் இப்படியே அலைந்தது மட்டும் மிச்சம்.

ஏழாம் நாள் காலையில் எனது தேடுதல் வேட்டை துவங்கினேன்.
இன்று கம்பெனி யில் புதிய பாய்லர்கள் வேலை செய்ய துவங்கி இருக்கும எனத் தெரியும். கம்பெனிக்கு போன் செய்ய வேண்டும் . இருந்தாலும் அடுத்துள்ள ஊரிர்க்கு சென்று அலைந்தேன் பிரொஜனம் ஒன்றும் இல்லை.

11 மணிக்கு கம்பெனிக்கு போன் செய்தேன் யார் எடுத்தார்கள் என்று புரியவில்லை ஒரே சத்தம் மட்டும் கேட்டது பிறகு யார் பேசுவது என்று கேட்டார்கள் நான் ஷியாம் என்றேன் கம்பெனி யில் ஏதோ விபத்து என்றும் உடனடியாக வர கூறினார்?

நான் எங்காவது வெளியூருக்கு போனால் கம்பெனியில் சின்ன பிரச்சினை என்றாலும் இப்படி தான் கூறுவர். நான் உடனடியாக திரும்பி கம்பெனிக்கு போனால் அங்கு சிறிய பிரச்சினை யாக இருக்கும். அதுபோல தான் இதுவும் என தீர்மானித்தேன்.

இன்று மாலை எதுவாக இருந்தாலும் ஊருக்கு திரும்புவது என தீர்மானித்தேன்

11 மணிக்கு அடுத்த இலக்கை நோக்கி லிஸ்டில் உள்ள அடுத்த ஊரை தேடி.

அந்த ஊரில் பஸ்சில் இருந்து இறங்கும் போது அந்த ஊர் போஸ்ட் மேனைக் கண்டேன். அவரிடம் அந்த ஊருக்கு வேண்டிய வீனா வின் முகவரியை கூறினேன்.

மெடிக்கல் காலேஜில் இருந்தா என்று கேட்டார்.
ஆம் என்றேன். எனக்கு அவளது வீட்டிற்கு போகும் வழியைக் கூறினார்.
எனது கண்களில் ஆனந்த கண்ணீர்.

ஆம் இது மிகப்பெரிய சாதனை தான். என்னால் என் கண்ணீரை அடக்க முடியவில்லை. அடுத்து உள்ள கடையில் அவளுக்கு வேண்டி சில விலைக் கூடிய சாக்லேட்டுகள் வாங்கி வீனா வின் வீட்டை நோக்கி நடந்தேன்.

என் கதல் நிலாவை நோக்கி நடக்கும் நான்
நான் வீனா வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு அடைத்திருந்தது. இதுவரை எனக்கு இருந்த நம்பிக்கை இப்போது இல்லை. அவள் நீ யார் என்றோ, இங்கு ஏன் வந்தாய் என்றோ கேட்டு விட்டால் என்ன செய்வது என்று. எனக்கு தலைசுற்ற துவங்கியது. கைகள் நடுங்கிய படி கதவைத் தட்டினேன்.

3374415cookie-checkஒரு அழகிய காதல் கதை!

4 thoughts on “ஒரு அழகிய காதல் கதை!

Leave a Reply

Your email address will not be published.