அது பொம்மை அல்ல பெண் என்று உணர்ந்தேன் 1

Posted on

என் பெயர் அருண். வயது 25. நான் இந்திய இராணுவத்தில் கேப்டனாக பணிபுரிகிறேன். இராணுவத்தில் பணிபுரிகிறேன் என்று சொன்னதுமே என்னைப்பற்றிய பிம்பம் உங்கள் கண் முன் வந்திருக்கும். 18 வயதிலேயே NDA (NATIONAL DEFENCE ACADEMY) லவ் தேர்ச்சி பெற்று SSB(STAFF SELECTION BOARD) -ல் தேர்வு பெற்று ட்ரெய்னிங் சேர்ந்தேன். 4 வருட கடின ட்ரெய்னிங் பிறகு lieutenant officer ஆக பணியில் அமர்ந்தேன்.

பிறகு மூன்று வருடம் கழித்து கேப்டனாக ப்ரோ மோசன் கிடைத்தது. ட்ரெயனிங், வேலை என்று வீட்டிற்கு கூட வரவில்லை. என்னுடன் பெண் officer கள் இருந்தும் அவர்கள் மீது எனக்கு பெரிதாய் ஈடுபாடு இல்லை.

ஆனால் யாரையாவது காதல் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தது. MY SOUL NEED A MATE.ஒரு நாள் என்து தாய் போன் செய்தார்கள். உனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை சீக்கிரம் ஊருக்கு வாடா என்றார்கள். எனக்கு கையும் ஓடவில்லை.

சரி அம்மா நீ ஏதும் கவலைப்படாதே நான் உடனே வீட்டிற்கு வருகிறேன் என்று சொன்னேன். COLONEL இடம் பர்மிஷன் வாங்கி கொண்டு ஊருக்கு கிளம்பினேன். நான் பெங்களூரில் இருந்தேன். விமான நிலையத்திற்கு சென்றேன். Check in எல்லாம் செய்து விட்டு மதுரைக்கு ப்ளையிட் ஏறினேன்.

நான் எனது இருக்கையை தேடி வந்து அமர்ந்தேன். சன்னல் ஓர சீட்டு புக் செய்திருந்தேன். நல்ல வீயூ பார்த்துக்கொண்டு போகலாம் என்று. காதுகளில் ஹெட்செட்டை போட்டு பாட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலிருந்து ஆராமளே என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
மெதுவாக என் தலையை உயர்த்தினேன் அப்போது ஒரு பொம்மை ஒன்று நடந்து வருவது போல் இருந்தது. உண்மையில் அது என்னவள். அது பொம்மை அல்ல பெண் என்று உணர்ந்தேன்.

அவளை பார்த்ததும் என் மனதில் இனம் புரியாத உணர்வு. அவளை பார்த்ததும் கவிதைகள் அருவியாய் மனதில் பாய்ந்தது. “உணர்வுகள் அற்று பாலைவனமாய் இருந்த என் இதயத்தை உழுது அறுவடை செய்து விளைநிலமாக மாற்றியது உனது அந்த கருவிழிகள்”.

அவள் கண்கள் அங்கும் இங்கும் அசையும்போது எனது ஆத்மாவும் சேர்ந்து அசைந்தது. அவள் பார்ப்பதற்கு தெலுங்கு நடிகை ராஷ்மிகா போல் இருந்தாள் இல்லை இல்லை அவளை விட நன்றாக இருந்தாள். அவள் என் பக்கத்தில் உட்கார்ந்தாள் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். என்னோவா தெரியவில்லை எனது எண்ணத்தின் காந்த சக்தி அவளை என்னை நோக்கி இழுத்தது. அவள் என்னருகில் வந்தாள்.

அப்போது “Swasthi Swasthi Su Muhurtham.
Sumungali Bhava, Manavatti.
Swasthi Swasthi Su Muhurtham.
sumungali Bhava Manavatti “என்ற பாடல் வரிகள் ஒலித்தது.

அவள் என்னருகில் வந்து அவள் மேல் உதட்டையும், கீழ் உதட்டையும் அசைத்தாள். Hi! This is my seat. If I sit here என்றாள். நான் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒரு நிமிடம் யோசித்தேன். வெட்கம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வரும் என்பதை உணர்ந்தேன்.

ஹலோ என்று என்னை ஒரு உழுக்கு உழுக்கினாள். நான் Yeah,yeah sure என்றேன். If you don’t mind could you help me to put this bag up there, Bag is too heavy என்றாள். நான் தான் ஆர்மிக்காரன் ஆச்சே அசால்ட்டாக ஒரு கையில் பேக்கை தூக்கி வைத்தேன். அவள் ஒரு நிமிடம் முழித்தாள். என் அருகில் உட்கார்ந்தாள். அப்போது தான் அவள் பெயரை சொன்னாள். Hi! I’m Jeevitha என்றாள்.

அப்படியே என் ஜீவனை அவளிடம் கொடுத்து விட்டேன். அவள் என்னை பார்த்து What is your name என்றாள். Hi! I’m captain Arun என்றேன்.பெயரை இப்படி சொல்லி சொல்லி பழகி விட்டது அதனால் இராணுவத்தில் சொல்வது போல் எனது பெயரை சொன்னேன். நீங்க கேப்டனா என்றாள்.

நீங்க தமிழா என்றேன். ஆமாம் நான் சென்னை தான் என்றாள். ஆமாம்! நான் ஆர்மி கேப்டன் தான் என்றேன். WOW! That’s cool. Salute sir என்றாள். நீங்கள் என்ன பண்ணுறிங்க என்றேன். I’m a architect engineer என்றாள். சூப்பருங்க என்றேன்.

பைளட்டிடம் இருந்து ஒரு செய்தி விமானம் புறப்பட உள்ளது சீட் பெல்ட் போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. நாங்கள் சீட்பெல்ட் போட்டோம். விமானம் புறப்பட்டது என் கைகளும் கால்களும் நடுங்கியது. அவள் என்ன அருண் இதான் ஃபர்ஸ்ட் டைம் ஆ என்றாள்.

அதெல்லாம் இல்லை நான் விமானத்தில் இருந்து Para jump (பாராசூட்டை கட்டிக்கொண்டு விமானத்தில் இருந்து குதிக்கும் நிகழ்வு) செய்து தான் பழக்கம் இப்படி ட்ராவல் செய்து பழக்கம் இல்லை. நான் பாட்டுக்கு பழக்க தோசத்தில் Para jump பண்ணிற கூடாதுன்னு கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன்.

எனக்கு Para jump என்றால் ரொம்ப பிடிக்கும் அதான் என்னை கண்ட்ரோல் செய்து கொண்டிருக்கிறேன். அவள் வாயை பிளந்து விட்டு எப்படிங்க இப்படியெல்லாம் பயமில்லாமல் செய்யுறிங்க என்றாள். We’re super human’s என்றேன். அவள் அது என்னமோ உண்மைதான் போங்க என்றாள்.

சரி! நீங்க எதுக்கு மதுரைக்கு போரீங்க என்றேன். என் Colleague ( உடன் வேலை பார்ப்பவர்) ஓட கல்யாணம் அதான் என்றாள். என்னிடம் கேட்டாள் நீங்க எதுக்கு போரிங்க என்றாள். அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. அதுவுமில்லாமல் 6 வருசமா வீட்டிற்கே போகவில்லை என்றேன்.

ஆர்மி பெர்சன்ஸ் எல்லாம் பாவம் என்றாள். உங்கள மாதிரி பொண்ணுங்கள பொண்ணுங்கள பாதுகாக்க எவ்ளோ வேணாலும் கஷ்டபடலாம் என்றேன். அவள் வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள். என்ன Flirt பண்ணுறிங்களா என்றேன். No! I just speaking the words directly comming from my heart என்றேன்.

அவள் மீண்டும் வெட்கப்பட்டாள். அவள் முகம் வெட்கத்தில் சற்று சிவந்தது. என்னை ஓட்டுறிங்க அதுதானே என்றாள். இல்லை ஜீவிதா என்றேன். சரி நா ஒன்னு கேட்பேன் தப்பா நினைத்து கொள்ள கூடாது என்றேன். அவள் கண்கள் அதிர்ச்சியிலும், சந்தேகத்திலும் சற்று விரிந்தது என்ன சும்மா கேளுங்கள் என்றாள்.

பொதுவாக இதை பெண்களிடம் கேட்க கூடாது உங்க Age என்னனு தெரிஞ்சுக்கலாமா என்றேன். அவள் சிரித்துக்கொண்டே இவ்வளவு தானா 23 என்றாள். ஏன் வயச கேட்குறதுக்கு இவ்வளவு பயம் என்றாள். ஒரு battalion (இராணுவ வீரர்கள் சேர்ந்த குழு) ஏ தைரியமா மேச்சுருவேன்.

என்னமோ தெரியவில்லை உங்களிடம் பேசவே எனது ஆத்மா பயப்படுகிறது. அவள் மீண்டும் வெட்கத்தில் சிரித்தாள். நீங்க என்ன Poet (கவிஞன்)ஆ என்றாள். ஆமாம் உன் கண்களை பார்த்து பிறகு ஷேக்ஸ்பியர் ஆகி விட்டேன் என்றேன். உங்களோட ஒவ்வொரு வார்த்தையும் என்ன ரொம்ப ஃபீல் பண்ண வைக்கிறது என்றாள்.

என் உடலில் உள்ள வாய் பேசவில்லை எனது ஆத்மா பேசுகிறது என்றேன். அவள் தனது நெஞ்சில் கைவைத்தாள். You’re words touched my heart என்றாள். எங்க என் கண்களை பார்த்து கவிதை சொல்லுங்கள் என்றாள்.” இறைவன் அனைவருக்கும் கண்களுக்கு கருவிழியை படைப்பான் ஆனால் உனக்கோ அந்த ஒளி கூட தப்பமுடியாது கருந்துழையை (Black hole) ஐ படைத்து விட்டான்.

உனது கருந்துளை போன்ற கண்விழி எனது ஆத்மாவை உன்னுள் இழுத்து விட்டது” என்றேன். அவள் கண்களில் நீர் தேங்கியது. நீங்க சும்மா தான சொல்லுறிங்க என்றாள். இல்லை ” You’re a goddess” என்றேன்.

கண்ணீர் கண்ணில் இருந்து வந்தது. இது வரைக்கும் என்ன இப்படி வர்ணிச்சுத்தது இல்லை நீங்கள் தான் முதல் தடவை என்றாள். நீங்கனு கூப்பிடாத ஜீவிதா “அழகை இரசிப்பவனே உண்மையான ஆண்மகன்” என்றேன். ஏன், என்னை அவ்வளவு பிடுச்சுருக்கா என்றாள்.

நீ விமானத்தின் உள்ளே நுழையும் போதே சொர்க்கத்தில் இருந்து தேவை தரையிறங்கி வருகிறாள் என்று நினைத்தேன். அவள் வெட்கத்தோடு கீழே குனிந்தாள் புன்முறுவல் செய்து கொண்டிருந்தாள்.

பிறகு எழுந்தாள் நீங்க இப்படித்தான் பாக்குற எல்லா பொண்ணுங்களையும் கவிதை சொல்லி கரைட் பண்ணிருவிங்க போல அப்போ உங்களுக்கு பல கேர்ள் பிரண்ட் இருப்பாங்க போல என்றாள்.

நான் எனது போனை படார் என்று எடுத்து இதில் அம்மா நம்பரை தவிற வேறு எந்த பொண்ணு நம்பரும் இல்லை வேண்டுமென்றால் செக் செய்துக்கொள் என்றேன். அவள் ஐய்யோ நான் சும்மா தான் சொன்னேன் அருண்‌ நம்புறேன் நம்புறேன்.

என்றாள். உன்னை பார்த்த பிறகுதான் என் மூளை செயலிலந்து மனம் வேலை செய்யத்தொடங்கியது. இது அனைத்தும் என் இதயத்தின் வரிகள் ஜீவி என்றேன். 10 நிமிடத்திற்கு அவள் ஏதும் பேசவில்லை நானும் பேசவில்லை அவள் கண்களை நானும் என் கண்களை அவளும் பார்த்துக்கொண்டிருந்தோம். அவள் ஐய்யோ எனக்கு வெக்கமா இருக்கு அருண் என்று சொல்லிக்கொண்டு தனது கண்களை அவள் கையால் மறைத்தாள்.

நான் அவள் கைகளை எடுத்து ” நான் எவ்வளவோ போதைப்பொருட்களை பயன்படுத்தி உள்ளேன் ஆனால், உன் கண்கள் போன்ற போதைப்பொருளை பார்த்தது இல்லை. இந்த கண்களை முதலில் பார்த்திருந்தாள் நான் எந்த போதைக்கும் அடிமையாகமல் உன் கண்களுக்கு மட்டும் அடிமையாகி இருப்பேன் என்றேன்”.

அய்யோ அருண் ப்ளீஸ் நார்மலா பேசுங்க எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு இது மாதிரி எனக்கு பீள் ஆனதே இல்லை என்றாள். நான் என்ன பண்ண இப்படி ஒரு கடவுளின் அற்புத படைப்பை பார்த்து வர்ணிக்காமல் இருக்க முடியுமா என்றேன்.

அருகில் ஜன்னல் வழியாக நிலவைப்பார்த்தேன். அவளிடம் ” இந்த சந்திரனின் பிரகாசம் கூட உன் முகத்தின் பிராசத்திற்கு முன்பு தோற்று போய் விட்டத டி” என்றேன். அவள் இதற்கு மேல் பொறுக்க முடியாது ப்ளீஸ் என்ன டேட்டிங் கூட்டிட்டு போறீங்களா என்றாள்.

கண்டிப்பாக ஜீவி என்றேன். இருவரும் போன் நம்பரை பெற்றுக்கொண்டோம். அவள் மதுரையில் நான் ஒரு வாரம் இருப்பேன் என்றாள். நான் மதுரையில் எதுவும் செய்ய முடியாது. என் அப்பாவுடனும், குடும்பத்தோடும் நேரம் செலவழிக்க வேண்டும். நான் ஒரு மாதம் விடுப்பு எடுத்து இருக்கிறேன்.

அடுத்த வாரம் நீ மதுரை விட்டு கிளம்பும் போது சொல் என்றேன். இருவரும் சேர்ந்து செல்வோம் என்றேன். எனக்கும் இரண்டு வாரம் விடுப்பு இருக்கு என்றாள். சரி! நாம எங்கயாச்சும் டூர் செல்வோம் என்றேன். எங்க போவோம் என்றாள்.

ஒரு வாரம் டைம் இருக்குல அதுல டிசைட் பண்ணிக்கலாம் என்றேன். மறுபடியும் பைளட்டிடம் இருந்து ஒரு செய்தி நாம் மதுரையை அடைந்து விட்டோம் சீட் பெல்ட்டை போடவும் என்றார். நாங்கள் வந்து லேண்ட் ஆனோம். என் வீட்டிற்கு போன் செய்தேன்.

அவள் வந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள் என்னை பிக்கப் செய்ய. நான் அவளை டாக்ஸியில் வழியனுப்ப சென்றேன். அவளிடம் இறுதியாக என்னை நியாபகம் வைத்துக்கொள் என்று அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தேன். அவள் நா போய்டு போன் போடுறேன் என்று சென்றுவிட்டாள் டாக்ஸியில்.

பிறகு ஒரு காரில் என் குடும்பம் வந்தது. எனது தந்தை கார் ஓட்டிக்கொண்டு வந்தார். எனக்கு ஒரே அதிர்ச்சி என்ற அப்பாவிடம் என்ற அப்பா உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னாங்க. அப்படி சொன்னாதானட வருவ இல்லாட்டினா எப்படி வருவ என்றார்கள்.

அட போங்கடா ப்ராடு பயலுங்கலா என்று எனது தாயையும், தந்தையும் அரவணைத்தேன். அவர்கள் ஆனந்த கண்ணீரோடு என்னை கட்டியணைத்தார்கள். கேப்டன் சார் வாங்க வீட்டிற்கு போவோம் என்றார்கள். நான் ஏறி உட்கார்ந்தேன். எனக்கு ஜீவிதா வின் நியாபகம் தான் மனமெல்லாம்.

நானும் வீட்டிற்கு சென்றேன். அங்கே கொட்டு, ட்ரம்ஸ் என தெருவே விழாக்கோலமாக இருந்தது. என்ன தெருவுல திருவிழாவா என்றேன். ஆமாடா! நீ வந்து இருக்கைல என்றார்கள். நம்ம ஊருக்குள்ள ஒருத்தன் கேப்டன் ஆகி இருக்கான் ஆ அது எவ்வளவு பெரிய விசயம் என்றார் என் தந்தை.

காரில் இருந்து இறங்கியதும் மாலை ஆரத்தி என தடபுடலான வரவேற்ப்பு. அனைத்தையும் முடித்து விட்டு வீட்டிற்கு சென்றேன். ஜீவிதா விடம் இருந்து 20 மிஸ்டு கால். ட்ரம்ஸ் சத்தத்தில் ஒன்றும் கேட்கவில்லை. நான் அவளுக்கு உடனே போன் செய்தேன்.

ஒரே ரிங்கில் எடுத்து விட்டாள். நான் உன் மேல கோவமா இருக்கேன் என்றாள். ஐய்யோ! சாரி செல்லம். எங்க வீட்டில் பொய் சொல்லி என்ன வரவச்சுட்டாங்க அப்ப தான் வருவேன் என்று. தெருவில் ஒரே தடபுடலான வரவேற்பு என்று கூறினேன் அதான் போன் எடுக்க முடியவில்லை.

ஏன் அப்படி என்றாள். சரியான கல்வி கூட இல்லாத ஒரு கூட்டத்தில் ஒருவன் கேப்டன் ஆன அந்த கூட்டத்துக்கு பெருமை தானே என்றேன். எங்க அப்பா ட்ரைவர் என் குடும்ப கஷ்டம் காரணமாக சிறுவயதில் காலேஜ் கூட சேராமல் இராணுவத்தில் சேர்ந்தேன் என்று எனது வரலாற்றை கூறினேன். இரவு முழுவதும் போன் பேசி விட்டு தூங்கி விட்டேன்.

அடுத்த பாகம் விரைவில் வரும்.

எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும்.

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள.

தேவராஜ் ❤️

நன்றி!❤️☮️

184081cookie-checkஅது பொம்மை அல்ல பெண் என்று உணர்ந்தேன் 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *