பெண்ணின் அக்கா கணவர் “அட என்னப்பா பொண்ணு ஆசை படுது வேலைக்கு தான் போயேன் எதுக்கு இவ்ளோ பிரச்னை” என்றார்.
மொத்த குடும்பமும் அவரை கடித்து குதரியது. “முன்னாடியே சொல்லிட்டோம் இவன் தொழில் தான் பார்ப்பான் வேலைக்கு போகணும்னு அவசியம் இல்லை. அப்போ எல்லாம் சரி சரின்னு மண்டைய ஆட்டிட்டு இப்போ எதுக்கு பேச்சு மாத்தூரிங்க?” என மாமா கோவமாக கேட்டார்.
கொஞ்ச நேரம் கழித்து பெண்ணின் தங்கை வந்து இருவரும் தனியாக பேசவேண்டும் என்று கேட்க.
இவன் முடியாது என்று மறுத்தான். நேரம் ஆக ஆக கல்யாணம் நடக்குமா என்று சந்தேகம் எங்களுக்கு மன வருத்தத்தை கொடுத்தது.
இவன் பார்த்து பார்த்து போங்கடா என்று அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டான். நானும் கிருத்திகாவும் வண்டியில் பின்னாடியே சென்றோம். வேகமாக வீட்டிற்கு சென்று ஆடையை மாற்றி படுக்க போனான்.
நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அவன் அருகில் அமர்ந்திருந்தோம். எது பேசினாலும் எங்களை பார்த்து கத்தினான்.
நள்ளிரவு ஆகியது…
நான்காம் பாகம் முடிந்தது, உங்கள் கருத்துக்களை என்கிற முகவரிக்கு மெயில் அல்லது hangoutil பேசலாம். உங்களை பற்றிய ரகசியம் காக்கப்படும்.
தொடரும்…