ஒரு வளர்ந்த ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாணம் யாருக்கெல்லாம் சொந்தம்.
அல்லது யாரெல்லாம் அதை பார்க்கலாம்.
மருத்துவரை தவிர அது கணவனுக்கும் மனைவிக்கும் மட்டுமான சொந்தமான ”பொருள்” என்று எடுத்துக் கொள்ளலாமா ?
கணவனின் நிர்வாணத்தை அல்லது மனைவியின் நிர்வாணத்தை வேறு ஒருவர் பார்க்கிறார். அதை அனுபவிக்கிறார் என்ற எண்ணம் எந்த அளவுக்கு நம் மனநிலையை பாதிக்கிறது?
அதன் பின்னால் இருக்கும் உளவியல் என்னவாக இருக்க முடியும்.
FADO என்ற ஜெர்மனிய திரைப்படத்தில் நாயகன் ஃபேபியனுக்கு நாயகி டோரோ மீது அதிகக் காதல்.
எப்போது அவளையே சோதித்துக் கொண்டிருக்கிறான். அவள் வேறு யாருடனாவது படுத்துக் கொண்டிருக்கிறாளா இல்லையா என்று பின் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.
ஒருநாள் ஃபேபியன் டோரோவிடம் உறவு கொண்டு முடித்த பிறகு அவள் அலுவலக நண்பரான ஃபிரான்சிஸ்(?) குடும்பம் பற்றி கேட்கிறான். ஃபிரான்சிஸ் அவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறார் என்று கேட்கிறான்.
இதைக் கேட்ட டோரா எரிச்சலாகி அவனைத் திட்டுகிறாள். ஏன் என்னை சந்தேகப்பட்டுக் கொண்டே இருக்கிறாய் என்று திட்டுகிறாள்.
நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லவில்லை. நீ உன் அலுவலக நண்பருடன் உறவு கொண்டாயா இல்லையா என்று நேரடியாக சொல் என்கிறான் ஃபேபியன்.
அதற்கு டோரா மிக முக்கியமான பதிலை சொல்கிறாள்.
“ஃபேபியன்! நீ என் இடத்தில் இருந்து உன்னிடம் நான் இன்னொருவளிடம் உறவு கொண்டாயா இல்லையா என்று கேட்டால் என்ன சொல்ல விரும்புவாய்”
”இல்லையென்றுதான் சொல்வேன்” இது ஃபேபியன்.
“அதுதான் நானும்” என்று சொல்லி போய்விடுவாள்.
இங்கே பாருங்கள் டோரா ஃபேபியன் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லவில்லை. சுற்றி வளைத்து சொல்கிறாள்.
1.காதலர்களோ கணவன் மனைவியோ அவர்களைத் தவிர வேறு யாருடனாவது உறவு கொண்டிருந்தால், அதை அவர்களிடம் கேட்பது முறையா? அதற்கான பதிலாக இல்லை என்பது மட்டும்தானே கிடைக்கும். அது அவர்களின் அந்தரங்கமா? கணவன் மனைவிடம், மனைவி கணவிடம் கூட சொல்ல தேவையில்லாத அந்தரங்கமா இது.
2.அப்படி கட்டாயம் கணவனின் பாலுறவு அனுபவங்களை மனைவியும், மனைவியின் பாலுறவு அனுபவங்களை கணவனும் ஒத்துக் கொள்ள மறுத்த வாழ்க்கையை ஆதரித்தால், அப்போது கணவன் மனைவிக்கிடையே ஆன உறவு காமம் மட்டும்தானா? ஒருவேளை அவர்கள் ஒருவருகொருவர் மிகுந்த பாசமாக அன்பாக இருக்கிறார்கள். ஆனால் வேறு ஒரு நபரோடு பாலுறவு வைத்திருந்தால் அந்த கணவன் மனைவி அன்பு உண்மையா? பொய்யா? உண்மையென்றால் ஏன் உண்மை .பொய் என்றால் ஏன் பொய்.
3.கணவன் எப்படியும் இருக்கட்டும். மனைவியும் எப்படியும் இருக்கட்டும். அது அவரவர் உரிமை. அதை ஒருவருக்கொருவர் கட்டாயம் சொல்ல வேண்டியதில்லை. அது அவர்கள் அந்தரங்கம். அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் எப்படி இருக்கிறார்கள் என்று கொள்ளலாமா?
4 ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கணவன் மனைவியாய் இருந்தாலும் கூட இருவரும் மேலும் பலதரப்பட்ட எதிர்பாலினருடன் பேசி பழக வேண்டிய சூழ்நிலை வரும் போது பலருடன் காமம் சாத்தியமா?
அப்படி சாத்தியப்படும் போது அதை கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் தெரியபடுத்தாமல் அது என் அந்தரங்கம் என்று சொல்லி ஒருவருக்கொருவர் அன்புடன் குடும்பம்(?) நடத்த முடியுமா?
ஒருவேளை முடியலாம். இனிவரும் சூழ்நிலையில் அனைத்து மனிதர்களுக்கும் இப்பிரச்சனை வரப்போகிறது.
ஏதோ ஒரு கட்டத்தில் அனைத்து மனிதர்களும் இந்த Desire vs Moral பிரச்சனையில் மனம் குழம்பத்தான் போகிறார்கள்.
டோரோ தன் காதலன் ஃபேபியனின் தொடர்ச்சியான கண்காணிப்பில் எரிச்சலாகி அவனை வீட்டை விட்டுப் போகச் சொல்கிறாள்.
ஃபேபியன் டோராவின் வீட்டுச் சாவி ஒன்றை அவளுக்கு தெரியாமல் எடுத்து செல்கிறான்.
பின் ஒரு நாள் டோரோ ஃபேபியனுக்கு போன் செய்து “நான் இன்னொருவனை காதலிக்கிறேன். நீ தெரிந்து கொள்ள வேண்டும்” என்கிறாள்.
அதன் அர்த்தம் ஃபேபியன் இருக்கும்வரை அவனைத்தவிர வேறு யாரிடமும் போகவில்லை. அவனுடைய சந்தேக குணத்தால் உறவு முறிந்த பிறகுதான் இன்னொரு துணையைத் தேடுகிறேன் என்று சொல்வதுதான்.
அன்றிரவு டோரோ தன் புதுகாதலனுடன் உறவு கொள்கிறான். ஃபேபியன் அதை பக்கத்து அறையில் ஒளிந்து பார்க்கிறான்.
அதற்கு முன்பு ஃபேபியனுடன் டோரோ உறவு கொள்ளும் போதெல்லாம் அது சாதரண உறவாக காட்டுகிறார்.
ஆனா டோரோ தன் புதுக்காதலனுடன் கொள்ளும் உறவில், புதுக்காதலனிடம் வாய்வழி புணர்ச்சி கொள்கிறாள்.
இது ஃபேபியனை அதிகம் கொதிக்க வைக்கிறது. அந்த வாய்வழி உறவு வழியாக டோரோ தன் புதுக்காதலனுக்கு அதிக அன்பும் அங்கிகாரமும் கொடுக்கிறாள் என்று நினைக்கிறான்.
அதனாலேயே கொதிக்கிறான்.
முதலில் பேசிய நான்கு பாயிண்டுகளோடு இன்னும் கொஞ்சம் யோசிப்போம்.
1.கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அன்புடன் இருந்து கொண்டே பலருடன் உறவு கொள்ளலலாமா இது முதல் நான்கு பாயிண்டுகளின் கருத்துக்கள்.
2.தன் முன்னாள் காதலி இன்னொரு ஆணுக்கு கொடுக்கும் வாய்வழி புணர்ச்சியை அது தன்னை விட அவனுக்கு கொடுக்கப்படும் அன்பாக நினைத்து கொதிப்பது இரண்டாம் காட்சி கருத்து.
இந்த இரண்டையும் இப்படி கன்குலூட் செய்யலாம்.
உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் ஒருவருகொருவர் ஏதோ ஒருவகையில் உறவு இருக்கிறது.
அதில் காதலர்களாக இணையும் ஆண் பெண் போன்ற மிக மிக நெருக்கமானவர்களின் முக்கிய உரிமையாக பரஸ்பரம் “வளர்ந்த நிர்வாணம்” காட்டப்படுகிறது. பரிமாறப்படுகிறது.
அவனை எனக்கு மட்டும்தான் தெரியும்.
அவளை எனக்கு மட்டும்தான் தெரியும் என்ற கர்வமே, அந்த உரிமையே மிக நெருக்கமான உறவுக்கான அடிப்படை மனநிலையாக நம்மிடையே படிந்திருக்கிறது.
பெண்ணே ! உன்னை உன் உடலை
அவனுக்கும் இவனுக்கும் தெரிந்திருக்கிறது. அப்படியானால் எனக்கும் தெரியும் போது நீ எந்த விதத்தில் எனக்கு தனிதன்மையானவளாக இருக்க முடியும்
ஆணே ! உன்னை உன் உடலை அவளுக்கும் இவளுக்கும் தெரிந்திருக்கிறது. அப்படியானால் எனக்கும் தெரியும் போது நீ எந்த விதத்தில் எனக்கு தனித்தன்மையானவனாக இருக்க முடியும்.
வளர்ந்த நிர்வாணத்தை பார்க்க கிடைப்பது தன்னுடைய தனித்தன்மையான தனக்கு மட்டுமே ஆன உரிமையாக கணவன் மனைவி நினைக்கிறார்கள்.
மற்ற அனைவருக்கும் உன்னை பற்றி தெரிந்த விஷயத்தை விட எனக்கு இன்னும் நுட்பமாக ஏதோ ஒன்று தெரியும் என்பதே கணவன் மனைவி உறவை நெருக்கமாக்கி வைத்திருக்கிறது.
அந்த உணர்வை பெற ”தனக்கு மட்டுமே நிர்வாணம் பார்க்கும் உரிமை மனநிலை” எளிதாக உதவி செய்கிறது.
இந்த மனநிலை கூட கணவன் மனைவி உறவுக்குள் இருக்கும் Moral கட்டுப்பாட்டுக்கு காரணமாய் இருக்கலாம்.
அதனால்தான் அந்த வாய்வழி புணர்ச்சியை ஃபேபியன் அவள் புதுக்காதலனுக்கு கொடுத்த அதிக அங்கீகாரமாக பார்க்கிறான்.
வளர்ந்த உடலின் நிர்வாணம் என்பது என்பது ஒரு புறரீதியான விஷயம் என்றாலும் அதை காண்பதற்கான உரிமையை வைத்திருப்பதின் மூலம் கணவன் மனைவி தாங்கள் ஒருவருக்கொருவர் ஸ்பெசல் அந்தஸ்து கொடுத்திருப்பதாக நினைக்கிறார்கள்.
இன்னொரு ஆணோ பெண்ணோ அதை பார்க்கும் போது அது வெறும் நிர்வாணம் பார்த்த விஷயம் மட்டுமில்லை. அந்த நிர்வாணத்தை பார்க்க அனுமதித்த தன் லைப் பார்டனரின் அனுமதியும் நினைவுக்கு வந்து அவர்களை துன்புறுத்துகிறது.
அதனால் பரஸ்பரம் அதை துரோகமாக பார்க்கிறார்கள்.
நிர்வாணம் அங்கே முக்கியமில்லை. ஆனால் நிர்வாணம் பார்க்கும் உரிமை தன்னைவிட்டு இன்னொருவரிடம் இருப்பது அங்கே மிகப்பெரிய துரோகமாக பார்க்கப்படுகிறது.
ஒரு டி.ஹச் லாரண்ஸ் கதையில் அதிகாலை மூன்று மணிக்கு ஒரு மில் தொழிலாளி இல்லாமல் ஆகிவிட்டார் என்று உடலை வீட்டில் ஒப்படைத்து செல்வார்கள்.
அந்த தொழிலாளியின் மனைவியும் அம்மாவும் மனைவியும் அந்த உடலின் உடைகளை கழட்டி விட்டு அந்த நிர்வாண உடலை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள்.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அமைதியான சூழலில் ஒரு வளர்ந்த நிர்வாண உடலை அந்த உடலின் அம்மாவும் மனைவியும் சுத்தம் செய்கிறார்கள்.
இந்த இடத்தில் கூட கணவனின் நிர்வாணம் ஏற்கனவே தெரிந்திருந்த அவன் அம்மா குளிப்பாட்டுவதால் அந்த மனைவிக்கு பெரிதாய் ஒன்றும் பிரச்சனையில்லை. அதை அனுமதிக்கிறாள்.
ஆனால் ஒருவேளை அவன் அம்மா இல்லாத இன்னொரு பெண் வந்திருந்தால் இந்த மனைவி அனுமதித்திருப்பாளா என்று கேள்விக்கு அனுமதித்திருக்க மாட்டாள் என்றே யூகம் செய்ய வேண்டியதாய் இருக்கிறது.
அப்படி நினைத்தால் அதன் காரணம் “ வளர்ந்த நிர்வாணம் தனக்கு மட்டுமே சொந்தம்” என்ற எண்ணம்தான்.
”இந்த உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கலாம். அவர்களுக்கு என் கணவனை தெரிந்திருக்கலாம், அல்லது மனைவியை தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்கு மட்டுமே அவரை “வளர்ந்த நிர்வாணமாய் தெரியும்” வேறு யாருக்கும் தெரியாது “ என்ற உணர்வை எந்த ஆணும் பெண்ணும் இங்கே விட்டுக் கொடுக்க தயாரில்லை.
அந்த தனக்கு மட்டுமே தெரியும் என்ற கர்வமமும் பெருமிதமும் அவர்கள் உறவு பிணைத்திருக்க தேவையாய் இருக்கிறது என்று நினைக்கிறார்கள்.
மேலும் தொடர்புக்கு Com உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.