‘ப்ரியா, நிஜமாவே உனக்கு என்னைப் பிடிக்குமா ப்ரியா?”என்றேன்.
“ராஜ், உங்களுக்கு என்னாச்சு?”
“இல்லை, சும்மா கேட்டேன்”
‘ம்ம்ம்ம்ம், ஏன் உங்களுக்கு இந்த திடீர் சந்தேகம்?-அவள்.
‘ நீ எவ்வளவு அழகாக இருக்கிற?’
“ராஜ், ப்ளீஸ், இதையே சொல்லாதிங்க”, எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்” அவ்வளவுதான், ஏன்னு சொல்லதெரியலை, இதுல அழ்கு எங்க இருந்து வந்துச்சுனும் தெரியல”
நான் மெதுவாக சிரித்துகொண்டேச் சொன்னென்.
“உன் அளவுக்கு அழகாக ஒரு பொண்ணு மதுரைக்காரியா இருந்து இருந்தா என்னைத்திரும்பிக்கூட பார்த்துஇருக்கா மாட்டா, அதுதான்?”-என்றேன்.
“ அப்ப அழகான மதுரைக்கார பொண்ணுகளுக்குதான் நான் நன்றிச் சொல்லணும், இப்படி ஒரு தங்கமான பையன பார்க்கமா விட்ட்டதற்கு
“ப்ரியா, நீ எப்படி எவ்வளவு அன்பாக,பொறுமையாக இருக்கிறாய்?”
“நீங்கள் என்ன கேட்க வாரீங்க,இன்னொரு தரம் சொல்லுங்க , எனக்கு சரியா புரியல?” என்றாள்.
“நீ எல்லாரும் மீதும் கனிவாக, கரிசனமாக இருக்கிறாயே, உனக்கு கோபமே வராதா?-என்றேன்.
சிரித்துக்கொண்டே மெதுவாக சொன்னாள்” ராஜ் , நான் சிறுவயதில் இருந்தே பாட்டி வீட்டில்தான் வளர்ந்தேன், தம்பியும், தங்கையும்தான் அப்பா,அம்மாவுடன் இருந்தார்கள்,நான் ஆறாவது வகுப்பு முழுபரிச்சை லீவுக்குதான் என் அம்மா அப்பா தம்பி, தங்கையுடன் இருந்தேன்,அதன் பிறகு இந்த வருடம்தான் அவர்களுடன் இருக்கிறேன்.என்னதான் பாட்டிவீட்டில் இருந்தாலும் அப்பா அம்மாவுடன் இருப்பது போல வருமா?..’
நான் மெளனமாக அவளையே கவனித்தேன்.
“மற்ற வீட்டில் பிள்ளைகள அவர்கள் அம்மா, அப்பாவுடன் இருப்பதைப் பார்த்து நான் ஒவ்வொரு நாளும் ஏங்குவேன்..தம்பி தங்கைகளுடன் விளையாடும் நாள் எனக்கும் வராத என்று எத்தனை நாள் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன், தெரியுமா, அப்படி ஒரு நாள் இங்கு இருக்கும் போது நான் எப்படி அவரிகள் மீது கோபம் கொள்வேன், வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள் நானோ பாலைவனத்தில் அலைந்தவள், இந்த இடம் எனக்கு பொங்கும் நீருற்றாய் இருக்கிறது.நான் ஒவ்வொரு வினாடியும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டுஇருக்கிறேன். உங்களுக்கு தெரியுமா?, இது போக உங்களின் காதலும் என்னை நிறைவான ஒரு வாழ்க்கைக்கு கொண்டுச்சென்று இருக்கிறது போல் இருக்கிறது.”
நான் பிரமிப்புடன் அவளை பார்த்தேன்.அவளின் “நிறைவான ஒரு வாழ்க்கை” என்ற சொல் நான் என்ன நினைக்கிறனோ அதையே அவளும் நினைத்துகொண்டு இருக்கிறாள்.
“ உங்களுக்கு ஒன்று சொல்லவா?”
“ம்ம்”
“சொன்னால் கோபபடமாட்டீர்களே”- என்றாள்.
“உன் மீதா எனக்கா? இல்லை சொல்.” என்றேன்.
கிட்டதட்ட என் நிலையும் அதுதான் அவள் சொந்த இல்லாமல் தனிமையில் தவித்து இருக்கிறாள். நான் அத்தனை சொந்தம் இருந்தும் தனிமையில் தவித்துகொண்டு இருக்கிறேன்.கடந்த 6 அல்லது 7 வருடங்களாக என் வீடு எனக்கு உணவு அளிக்கும் ஒரு விடுதியாகதான் செயல் பட்டு இருக்கிரது நான் என்ன செய்ய? “ என்று என் மனதில் எண்ணிகொண்டு இருந்தேன்.
“ நான் உங்களை காதலித்ததே ஒரு சுய நலம்” என்றாள்.
‘சுய நலமா?”-ஆச்சர்யமாய் கேட்டேன்.
ஆமாம். நான் உங்களைக் கல்யாணம் செய்துக்கொண்டாள் , நீங்கள்,நான் ,மாமா, அத்தை, புஷ்பா, என் அன்பு கொழுந்தன், தம்பி, தங்கை என கூட்டுக் குடும்பாய் இருக்கலாம் அல்லவா? என்றாள்.
அவள் உறவுமுறையை சொன்ன விதம் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
“ அடிப்பாவி அப்ப நீ என்னைக் காதலிக்க வில்லையா?” என்றேன்.
“இல்லை ராஜ், நீங்கள் என் உயிர் ராஜ். என் உயிரை நான் காதலிக்காமலா?-என்றாள்.
நான் அப்படியே எரியும் மெழுகுவர்த்தியாய் உருகிப்போனேன்.
“ சரி ப்ரியா நேரமாகிவிட்டது, நாம் சாயுங்காலம் பார்ப்போம்” என்றேன்.
“ம்ம்ம்,சரி ராஜ்” என்றாள்.
அன்று சாயுங்காலம் அவளைச்ஸ்ந்தித்த நான் நாளை மறு நாள் நண்பனின் அக்கா கல்யாணம் திருநெல்வேலியில் நடக்க இருக்கிறது, நண்பர்க்ளுடன் சேர்ந்து போக போகிறேன், அப்படியே கன்னியாகுமரியும் , திருவனந்தபுரமும் செல்லப் போகிறோம் “ என்றேன் .
அவளும் சந்தோஷமாக சென்று வாருங்களேன் என்றாள்.
“உன்னைப்பிரிந்தா?” என்றேன்.
அவள் பதறினாள்.” ஏன் இப்படி அபசகுணமாக பேசுகிறர்கள். நண்பர்களுடம் சேர்ந்து திருமணத்திற்கு போக போகிறர்கள், அவ்வளவுதான், நல்லபடியாக போய் வாருங்களேன் ராஜ்”
நண்பனின் அக்கா திருமணத்திற்கு சென்ற நான் , என் நினைவுகளை பிரியாவுடன் விட்டுச்சென்றேன். திருமண நிகழ்வுகளைக்கூட என்னையும் ப்ரியாவையும் இணைத்து பார்த்தேன்.
என்ன பெண் இவள்? கூட்டுகுடும்பத்தைகூட சுய நலம எங்கிறாள்,பாசத்திற்கு ஏங்குகிறாள். இந்த வருடத்துடன் எனக்கு பட்டபடிப்பு முடிகிறது. அவளுக்கு இன்னம் இரண்டு வருடங்கள், +2 படிக்கவேண்டும், பிறகு கல்லூரி படிக்க ஒரு முன்று வருடம் என வைத்துகொண்டாலும் ஒரு 5 வருடத்தில் என்னை ஒரு குடும்பஸ்தானாக்கிக் கொள்ள ஒரு நல்ல வேலையில் இருக்கவேண்டும் என்று மனகணக்கு போட்ட்டுகொண்டு இருந்தேன்.
“ வசந்தங்கள் வாழ்த்தும் போது உனது இலையில் பூ ஆவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேர் ஆவேன்”
-எங்கோ டேப்ரிக்கார்டரில் படித்துகொண்டு இருந்தது.
எவ்வளவு அழமான வரிகள்.
இப்படி ஒரு பெண் காதலியாக கிடைத்துவிட்டாள்.
வாழ்க்கை துணையாக கிடைத்துவிட்டாள்
வாழ்க்கை இணையாக கிடைத்துவிட்டாள்”.
ஒவ்வொரு ஆணுக்கும் திருமணம் என்பது கண்டிப்பாக சொர்க்கத்தில்தான் நடக்கும்.
“வாலிபங்கள் ஒடும் வயதாக கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோடும் பந்தம்
பிரிவு என்னும் சொல்லை அறியாதது
அழகான துணைவி அன்பான மனைவி
அமைந்தால பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள்
ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சம் என்னும் வீணை பாடுமே கோடி
இணையாகும் துணையாகும் சம்சார சங்கிதமே.”
என் மனம் இனம் தெரியாத நிம்மதியிம் இருந்தது.
நண்பனின் அக்கா திருமணம் முடிந்து, ஊரெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு அடுத்த நாள் இரவு 11.30 மணிக்கு வீடு திரும்பினேன்.
நான் என் வீட்டினுள் நுழையும் போது ப்ரியாவின் வீட்டினுள் ஏதோ பேச்சுச்சத்தம் கேட்டது. என் வீட்டு லைட்டைப்போட்டவுடன் அவள் வீட்டில் பேச்சுச்சத்தம் நின்று லைட்டை அணைத்துவிட்டார்கள்.ப்ரிய்யாவின் அப்பா கடையில் இருக்கும் போது இரவு 9மணிக்கே தூங்கிவிடுவார்கள், ஏனென்று தெரியவில்லை இவ்வளவு நேரம் முழித்து இருக்கிறார்கள் என்று, நாளை ப்ரியாவிடம் கேட்போம் என்று நினைத்தேன்.பிரியாவை பார்த்து முழுதாக இரண்டு நாள்கள் ஆகிவிட்டது, ஏதோ இரண்டு யுகம் ஆனது போல் இருந்தது.
அடுத்த நாள் காலை 5.00மணிக்கே எழுந்து உட்க்கார்ந்து இருந்தேன். ஆனாள் ப்ரிய்யா கோலம் போட வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை
எனக்கு மனத்திற்கு என்னமோ மாதிரியாக இருந்தது.குளித்துவிட்டு கடைக்குப் போன எனக்கு எப்போதுடா 11.00 மணியாகும் என்று இருந்தது.
காலை 10.45க்கே கடையில் இருந்து எழுந்து வீட்டுக்கு வந்தேன். அவள் வீட்டின் கதவு சாத்தி உள்புறம் சாத்தி இருந்தது,
எனக்கு ஒரே குழப்பாக இருந்தது.
அரைமணி நேரம் கழித்து மெதுவாக அவள் வீட்டின் கதவை சங்கடத்துடன் தட்டினேன்,” நான் குளிக்கிறேன் ராஜ்” என்று ப்ரிய்யாவின் அம்மாவின் குரல் ஒலித்த்து. நான் அமைதியாக வெளியெ ‘பிரியா எங்கே?” என்றகுழப்பத்துடன் நின்றுக்கொண்டு இருந்தேன்.
சைக்கிளில் வந்த கடைப்பையன் கடையில் ஆள் இல்லை என்றான், உடனே கடைக்கு வாருங்களேன் என்றான்.’ப்ரியா அப்பா எங்கே போனார்.?
எனக்கு ஏதோ தவறாக நடப்பதாக புலப்பட்டது ஆனால் என்ன்வேன்று தெரியவில்லை?. அமைதியாக கடைக்குபோனேன்.
மதியம் 2.30 மணிக்கே சாப்பிடப் போவதாக கூறிக்கொண்டே என் அப்பாவின் பதிலை எதிர்பார்க்காமல் வீடு நோக்கிச்சென்றேன். அப்போதும் ப்ரிய்யாவின் வீடு பூட்டி இருந்தது,
நான் அமைதிய்யாக என்வீட்டினுள் வந்து தட்டில் சிறிது சாதத்தை வைத்து, குழம்பை ஊற்றும்போது ப்ரியாவின் தம்பி வெளியெ நடந்து சென்றான்.
“தினேஸ்.தினேஸ் “என்று கத்திய நான் அவனிடம் “எங்கடா பிரியா”? என்று பதட்டதுடனே கேட்டேன்.
“அவள் ஊருக்குப் போய்ட்டாளே” என்றான்.
“எப்படா?”
“இப்பதான் அவளும் அப்பாவும் போய்க்கொண்டு இருக்கிறார்கள்”என்றான்.
நான் கடையில் இருந்து வரும் வழியில் அவர்களைப் பார்க்கவில்லையே என்ற குழப்பத்துடன் பஸ் ஸ்டாப்பை நோக்கி ஒடினேன்.
ஏன் என்னிடம் சொல்லமால் போகிறாள் என்று திட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டே அதற்குள் பஸ் வரகூடாது என்று வேண்டியபடியே ஒடினேன்.
எனக்கு பதட்டமாக இருந்தது. என்னால் ஒட முடியவில்லை.என் எண்ண ஒட்டத்துக்கு ஏற்றப்படி உடல் ஒத்துழைக்கவில்லை. இருந்தும் கஷ்டப்பட்டு ஒடினேன்.
என் கடைக்கு நெருக்கி ஒரு 40 அடி தூரத்திலிருந்து மெதுவாக நடந்தேன். என் இதயதுடிப்பை அடக்கிகொண்டே ப்ரிய்யாவை நோக்கி முன்னேறினேன்.
அப்போதே என்னைப்பார்த்த ப்ரியா தலைகுனிந்துக்கொண்டாள்.எனக்கு ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் ப்ரிய்யா என்னை கவனித்து இருக்கமாட்டாள் என்று எண்ணினேன்,
பிரியாவின் அருகில் சென்றேன்.
“ என்ன ப்ரிய்யா, ஊருக்கா?’ என்றேன்.
[அவளிடம் பதில் இல்லை]
ப்ரிய்யா
…………
சரி ஊருக்கு போகிறாயே பரவாயில்லை. என்னிடன் ஏன் சொல்லவில்லை பிரிய்யா?
……….
சரி ப்ரியா. நீ +1 காலாண்டு லீவுக்கு வா ப்ரியா… என்றேன்
……………..
அவளிடம் எந்த ஒரு பதிலும் இல்லை.
நான் சுற்றும்முற்றும் பார்த்தேன்.ஒரு நாலைந்து பேர் நின்றுகொண்டு இருந்தார்கள்.அவளை கன்னத்தை பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தி அவளிடம் “என்னடா, ப்ரிய்யா?” என்று கேட்க வேண்டும் போலிருந்த்து.ஆனால் நாகரிகம் என்னைத்தடுத்தது.
நான் சுற்றும்முற்றும் பார்க்கும் போது ப்ரிய்யா என்னை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் என்னைப்பார்த்தாள்.
அவள் முகத்தை ப்பார்த்த அந்த கணத்தில் நான் அப்படியே இடிந்து போனேன். அவள் முகம் அழுது அழுது வீங்கிப் போயிருந்தது.என்னைப்பார்த்த அந்த வினாடியில் அவள் கண்ணைப்பார்த்த எனக்கு கலங்கி இருந்தது அவள் கண்கள் மட்டுமல்ல அவள் இதயமும் கூட என்று சொல்லியது.
“ப்ரிய்யா” என்று அவள் அப்பா கூப்பிட்டபோது டவுன் பஸ் வந்தது.
“ப்ரியா” என்ற என் குரலுக்கு அவளின் இரு கண்ணீர் துளிகளே பரிசாக கிடைத்தது.
பஸ்ஸில் ஏறிய பின்னாவது என்னை பார்ப்பாள் என்று எண்ணிய எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவள் பஸ்ஸில் ஏறி அந்தப்பக்கம் போய்தலைக் குனிந்து உட்கார்ந்து கொண்டாள்.
பஸ் கிளம்பியது…………..
கையில் இருக்கும் பொருளுக்கு என்றும் மதிப்புஇல்லை என்பார்கள், அது நம்மைவிட்டுப் போன பிறகுதான் அதன் அருமை புரியும்.அப்படிதான் என் கைகளில் இருந்த அந்த கண்ணீர்துளிகளின் அருமை அப்போது எனக்கு தெரியவில்லை. அது என் கைகளிலே உலர்ந்து போனது.
ப்ரியா ஏன் என்னிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என தெரியவில்லை,அவள் அழுகைக்கான காரணமும் தெரியவில்லை.இந்த நாளை நான் எப்படி மறக்கபோகிறேன். மே-29 இன்றுதான்.
நான் அவள் அம்மாவிடம் சென்று” அக்கா , ஏன் ப்ரியா அழுதுக்கொண்டே போகிறாள்?” எனக் கேட்டேன்.அதற்கு அவள்” அவள் இனிமேல் படிக்கமாட்டேன் என்று அடம்பிடித்தாள், அதுக்குதான் மாமா அவளை படிக்க வேண்டும் என்று திட்டி அனுப்பினார், அந்தக் கோபத்தில்தான் அவள் உன்னிடம்க்கூட சொல்லாமல் செல்லுகிறாள், அவள் மிகவும் கோபக்காரி,வீண் பிடிவாதக்காரி” என்று அவளைப் பற்றி அவள் அம்மா சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை. அவளைப்பற்றி எனக்கு நன்றாகதெரியும், அவள் மிகவும் அன்பானவள்,கோபமே படமாட்டாள்.எதை நம்புவது எனக்கு தெரியவில்லை.
மீண்டும் நான் தனிமைப்பட்டது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது.
அவள் காலாண்டு விடுமுறைக்கு வருவாள், அப்போது அவளிடம் கேட்டுக்கொள்லாம் என அறிவு சொன்னது, ஆனால் மனதுக்கு அது புரியவில்லை.
எங்கோ படித்தது” ம்ம்ம் அணுஅணுவாய் சாவது என முடிவு எடுத்துவிட்டாள், காதல் சரியான வழிதான்”.
எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. யாரும் என்னை ஏன் என்று கூட கேட்கவில்லை. நாலைந்து நாட்களாய் சாப்பிடகூட வில்லை. இல்லை சாப்பிடதோணாவில்லை. ஏதோ டீக்கடை வைத்து இருந்தால் என்னவோ டீயை மட்டும் குடித்துகொண்டு இருந்தேன்.
அடுத்த நாள் காலை 8.30 மணி இருக்கும். நான் கடையில் இருந்தேன், அன்று கல்யாண முகூர்த்தம் போல பஸ் ஸ்டாப்பில் கூட்டம் அதிகமாவே இருந்தது.ஊரில் உள்ள லோடுவேனில்கூட ஆட்கள் ஏறி வெளியூர்ச் சென்றுக்கொண்டு இருந்தனர்.
எங்கள் கடையின் எதிர்புறம் மாணிக்கத்தின் மாமா [அதுதான் எங்கூட சண்டை போட்டானே அவந்தான் நின்றுக்கொண்டு இருந்தான்.] வெள்ளைக் கலரில் பேண்ட்டும்.,நல்ல வெளீர் சிகப்புக்கலரில் சில்க் சட்டையும் போட்டு இருந்தான்.ஊரில் மைனர் குஞ்சாம் அப்படிதான் ட்ரெஸ் போடுவார்களாம், எனக்கு சிரிப்புதான் வந்தது. ஒரு கால் மணி நேரத்தில் ஒரு டாடா சுமோகார் வந்தது, அதிலிருந்து மாணிக்கம் இறங்கினான் . அவனை நான் கேள்விக்குறியுடன் பார்த்தேன்.அவனுக்கு புரிந்தது போல’ கல்லூரி நண்பர்களுடன் கூர்க் போவதாகச் சொன்னான். அப்படியா? என்றேன். அங்கே எங்களுக்கு ஒரு காஃபி எஸ்டேட் இருக்கிறது. நண்பர்களுடன் 10 நாள் தங்கப்போகிறேன் நீயும் வருகிறாயா? என்றேன். அது எனக்கு ஆறுதலாகதான் இருக்கும் இருந்தாலும் எனக்கு இப்போது தனிமைதான் வேண்டும் என்று இருந்தது. அதனால் அவனிடம் இல்லை நான் வரவில்லை என்றேன். ஏண்டா ட்ல்லாக இருகிறாய்? என்றான். அப்படியேல்லாம் ஒன்றுமில்லை, தொடர்ந்து முன்று நாட்களாக நைட் ஷிப்ட் அதுதான் டல்லாகத் தெரிகிறேன், என்றென்,’சரிடா , நான் கிளம்புகிறேன் வர ஒரு வாரம் இல்லை பத்து நாட்கள் ஆகும் என்று நினைக்கிறேன் “ என்றான்.” அப்பா எங்கேடா இருக்கிறார் ?’என்றேன். ‘’அவரும் கூர்க்கில்தான் இருக்கிறார் , வரும்போது சேர்ந்து வருவோம் “ என்றான்.
“சரிடா , வருகிறேன்” என்றான்.
நானும்” ம்ம்ம்ம்ம். சரிடா “ என்றேன்.
கடையில் எல்லாரும் இருந்தார்கள், அதனால் நான் கடையிலிருந்து வெளியே வந்தேன். எங்கே போவது எனத்தெரியவில்லை.ஊரை நோக்கி நடந்துக்கொண்டு இருந்தேன், வீட்டிற்கு இல்லை.அப்போதுதான் எனக்கு அந்த யோசனைப்பட்டது, நாங்கள் குத்தகைக்கு வாங்கி இருந்தோமே அந்த கரும்புத் தோட்டத்திற்கு போகலாம் எனப்பட்டது. தனிமை தனிமை தனிமை அதுதான் எனக்கு இப்போது வேண்டும் அதற்கு அங்குதான் சரியான இடம். கரும்புதோட்டத்தின் மத்தியில் போய் படுத்துக்கொள்வோம் என்று கிளம்பினேன்.
வழியில் தான் மாணிக்கத்தின் வீடு உள்ளது. அந்த வழியே செல்லும்போது மாணிக்கத்தின் அம்மா என்னைப் பார்த்துவிட்டார்கள்,’
‘’ ஏய், ராஜ்’’ ‘ என்னைத்தான் நாகரிமாய் உச்சரித்து கூப்பிட்டார்கள்.
‘ என்னங்கம்மா”- என்றேன்.
“டேய், நீ மாணிக்கத்தோட கூர்க் போகலையா?- என்றார்கள்.
“இல்லையம்மா, காலேஜ்ஜில் ஒரு வேலை இருக்கு அதுதான் போகலை” என்றேன்.
“ நீ என்னடா காலேஜ்ஜில் போய் வேலைப் பார்க்கபோற? “ என்றார்கள்.
நான் சிரித்தேன். அவர்களும் கல்லூரி இளம்கலை பட்டபடிப்பு முடித்தவர்கள்தான்.
“சரிடா கொஞ்சம் இரு, ஹார்லிக்ஸ்ப் போட்டுத் தருகிறேன் ‘’என்றார்கள்.
நான் வேண்டாம் என்று சொல்லுவதற்குள்ளேயே அவர்கள் உள்ளே போய் வ்ட்டார்கள். நான் வெளி ஹாலில் உட்கார்ந்து இருந்தேன்.கொஞ்ச்ச நேரத்தில்மாணிக்கதின் அம்மா கையில் ஹார்லிக்ஸ் க்ளாஸ்ஸுடன் வந்தார்கள்.
“இந்தாடா , சாப்பிடு என்றார்கள்.
[ எனக்கு அவர்களைப் பார்த்தால் பெருமையாக இருந்தது,மகனுடைய நண்பன் நான், இப்போது,இங்கே அவன் இல்லாத போதும் என்னை கூப்பிட்டு உபசாரிக்கிறார்கள்.]
“எங்கடா இந்த பக்கம்?”
“தோட்டத்திற்கு அம்மா “ என்று நான் சொல்லி முடிப்பதற்குள். மாணிக்கத்தின் தோட்டதிற்கு தண்ணீர் பாய்ச்சுகிறவர் உள்ளே வந்தார்.
அவர்தான் எங்கள் தோட்டத்திற்கும் தண்ணீர் பாய்ச்சுகிறவர்.
எல்லாம் மாணிக்கத்தின் ஏற்பாடுதான் அவர்கள் அம்மா சொல்லிதான் செய்தாகச் சொன்னான். நாங்கள் தனியாக தோட்டத்தில் இருந்தால் அவனுடைய மாமா ஏதாவது தகராறு செய்வான் என அவன் அம்மா அவர்க்ள் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுகிறவரையே ஏற்பாடு செய்து இருந்தார்கள். அவர் அவர்களுக்கு சித்தப்பா முறை வேண்டும் அதனால் அவரிடம் எந்த சண்டையும் போட மாட்டான் அவன் மாமா.
விவசாயத்திற்காக காலை கரண்டு அன்று, அதாவது காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை 3 பேஸ் கரண்டு வரும், அப்போதுதான் மோட்டார் போட முடியும்.
அவருக்கு அவர் பேரனுக்கு ஏதோ சர்ட்பிகேட் வாங்க வேண்டும் அதனால் வெலியெ செல்வதாகக் கூறினார். மோட்டார் ஒடுவதாகவும்கூறினார். எங்கள் வயலில் கிணற்றுக்கு மேல்புறம் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்வதற்கும்,
அவர்கள் வயலுக்கு 1.5 ஹெக்டேர் வயலில் தண்ணீர் பாய்வதற்கும் ஏற்பாடு செய்து இருப்பாக கூறினார். அதாவது வயலின் நான்கு புறமும் அடைத்துவிட்டு, மோட்டாரை போட்டுவிட்டு வந்து விடுவார்கள். மதியம் 12.00 மணிக்கு கரண்டு 3 பேஸ்ஸிலிந்து சிங்கிள் பேஸ்ஸுக்கு மாறும் போது மோட்டார் அதுவாக நின்றுவிடும்.
“ அப்புறம் என்னப்பா நீ தோட்டத்திற்கு போய்கிட்டு அதுதான் சித்தப்பாவே ஏற்பாடு பண்ணிட்டாரே” என்றார்கள் மாணிக்கத்தின் அம்மா.
“ சரிமா நான் வீட்டுக்கு போகிறேன்” என்றேன்.
நாணும் , அவரும் சேர்ந்துதான் வீட்டு போவதாக கூறிகொண்டுச் சென்றேன்.
அவர் அவர்வீட்டுப்பக்கம் சென்று விட்டார். நான் என் வீட்டு அருகே செல்லும்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. நாம என்ன தண்ணீர் பாய்ச்சுவதற்கா தோட்டத்திற்கு போனோம் கொஞ்சம் தனிமையில் இருக்கதானே என்று திரும்பினேன்.
தண்ணீர் பாய்ச்சுகிறவர் அவர் வீட்டுப்பக்கம் போய்விட்டார்.
நான் தோட்ட்த்தை நோக்கிப் போக ஆரம்பித்தேன் , நல்லவேளை மாணிக்கத்தின் அம்மா உள்ளே போய் விட்டார்கள்.
[மாணிக்கத்திம் தோட்டமும் எங்கள்தோட்டமும் அடுத்து அடுத்து இருக்கும். அவர்கள் வயல் அதே இட்த்தில் 20 ஏக்கர் இருக்கும்.எங்கள் வயல் 3 ஏக்கர்தான் இருந்த்து. இரண்டுபேருக்கும் கரும்புத்தோட்டம் என்பதால் சுமார் 23 ஏக்கரில் கரும்பு என்பது மிக பெரிதாகவே இருக்கும். 1.5ஹெக்டேர் வயல் என்பது 1.5 ஹெக்டெர் நிலமும் ஒரே வயலாக அமைந்து இருக்கும். அது அவர்களின் தோட்ட்த்தின் மத்தியில் இருக்கும்.]
நான் எங்கள் தோட்ட்த்திற்கு சென்றேன், மோட்டார் ஒடிக்கொண்டு இருந்த்து.
நான் கிணற்றுக்கு கிழ்புறம் சென்று கரும்பு வயலின் பெரிய பாத்திகளுக்கு நடுவில் சென்று படுத்துக்கொண்டேன். கொஞ்சம் தள்ளியே போய் படுத்துக்கொண்டேன். அப்பதான் யாருக்கும் தெரியாது என்று.
ஒரு கால் மணி நேரம் இருக்கும். நான் ப்ரியாவை ன நினைத்துக்கொண்டு ஏதோ ஒரு சிந்தனையில் இருந்தேன். அப்போது மோட்டார் தண்ணிரில் யாரோ காலை அலம்புவது போல் சத்தம் கேட்ட்து.நான் எழுந்திரிக்காமல் ஊர்ந்துகொண்டே வந்து யார் என்றுப் பார்த்தேன், ‘மைனர் குஞ்சு’
அட இவன் காலை இந்த மைனர் ட்ரெஸ்ஸைப்போட்டுகிட்டு பஸ் ஸ்டாப்பில் நின்றுக்கொண்டு இருந்தானே என்று யோசிப்பதற்குள், அவன் மாணிக்கத்தின் வயல்பக்கம் போனான்.இந்த வழியே போனால் பக்கத்து ஊருக்கு நடந்து போகலாம். ஆனால் பஸ் ஸ்டாப் போய்விட்டால், ரோடுபக்கம்தான் ஈஸி, இவன் ஏன் இந்தப்பக்கம்? தெரியவில்லை.
இருந்தாலும் அவன் எங்கே போகிறான் என்று பார்க்க ஒரு ஆர்வம் என்னை எழுந்திரிக்க வைத்த்து.
மெதுவாக அவன் சென்ற திசையில் பார்த்துக்கொண்டு இருந்தேன்.கொஞ்ச தூரம் போனவன் தண்ணீர் பாய்ந்துக்கொண்டு இருந்த வயலின் அடைப்பை காலால் ஏத்தி எடுத்துவிட்டுப் போனான்.அதை ப்பார்த்த எனக்கு கோபம்வந்த்து. அவனைதிட்டலாம் என வாய் எடுத்தேன், ஆனால் அது எனக்கு சரியாக படவில்லை என அமைதியாக இருந்துவிட்டேன்.சரி அவன் எடுத்துவிட்ட அடைப்பை கையால் அடைத்துவிடுவோம் என்று போனேன்.
அந்த இட்த்திற்குப் போன நான் அவனைப் பார்த்தேன். அவன் நேராகச் செல்லாமல் மாணிக்கத்தின் தோட்ட்த்தினுள் சென்றான். நேராகச் சென்றால்தானே பக்கத்து ஊருக்குச் செல்ல முடியும் இவன் ஏன் கரும்புத்தோட்ட்த்திற்குள் செல்கிறான்.? ஆஹா மைனர்குஞ்சு மைனர் வேலையை காட்டப் போகிறனா?பஸ் ஸ்டாப்பில் எவளுக்கோ சிக்னல் கொடுத்து கிளியை கூப்பிட்டுகிட்டு வந்து இருக்கான். சரி யார்? என்று பார்போம்.
சட்டு என்று நமக்குள் இருந்த ஜேம்ஸ் பாண்டு விழித்துக்கொண்டான். அவன் மாணிக்கத்தின் தோட்ட்த்தின் 1.5 ஹேக்டெர் வயலின் வடக்கு கரையில் போய் இருந்தான். நான் கொஞ்சம் நிதானித்து 5 நிமிடம் கழித்தே அந்த 1.5ஹெக்டெரின் தெற்கு கரையில் மெதுவாக நடந்தேன்.கரும்பு பட்டம் கட்டவில்லை,, அதனால் ஒழுக்கமில்லாமல் அனைத்து பக்கமும் சிதறி கிடந்த்து. நான் சத்தம் கேட்கமால் ஒவ்வோரு தோகையாக எடுத்துக்கொண்டு முன்னேறினேன்.1.5 ஹெக்டெர் வயல்வந்த்து. நான் மெதுவாக முன்னேறினேன். தண்ணீர் பாய்ந்திருந்த வயலில் ஒரு வடக்கு தெற்கு பாத்தி அடைக்கப்பட்டு இருந்த்து. அதில் கொஞ்ச தூரம்தான் தண்ணீர் பாய்ந்து இருந்த்து. பிறகு ஏன் அடைப்பட்டு இருந்த்து…அந்த கொஞ்சதூரம் தண்ணீர் பாய்ந்திருந்த பகுதியில் இருந்த சகதியில் இரண்டு காலடிதடம் பதிந்து இருந்த்து. ஒ அவர்கள் இந்த பாத்தியில்தான் இருக்கிறார்கள்நான் மெதுவாக பின்னோக்கி அடுத்த பாத்தியில் இறங்கி போனேன்.