ஆணின் மன்னிப்பின்மை…
மேலும் பேசி நட்பாக மட்டும் பழக மட்டும் பெண் வாசகர்கள் என்ற hangouts மற்றும் மின்னஞ்சளில் தொடர்பு கொள்ளுங்கள்
பெண் ஏன் மன்னிக்கிறாள் ?
ஆண் ஏன் மன்னிப்பதில்லை ?
பெண் ஆணை மன்னிப்பது அல்லது ”பொழைச்சிப் போ” என்று விட்டு விடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
The Salesman என்ற ஈரானிய திரைப்படத்தில் பெண் மன்னிப்பு ஆண் மன்னிபின்மை சூழல் வருகிறது.
கணவன் மனைவிக்கு ஒரு பிரச்சனை வருகிறது.
திரைப்படத்தில்
மனைவி வீட்டில் தனியாக இருக்கும் போது அடையாளம் தெரியாத ஒருவர் மனைவியின் பக்கவாட்டுத் தலையில் ஆயுத்தத்தால் குத்தி விட்டு தப்பி ஒடுகிறார்.
யார் குத்தியது என்று தெரியவில்லை. இதனால் கணவன் மனைவி இருவரும் உளரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
மன அழுத்ததால் பெண் அழுது கொண்டே இருக்கிறாள்.
போலீஸுக்கு செல்ல விரும்பவில்லை.
ஆண், யார் மனைவியை அப்படி செய்திருக்கக் கூடும் என்று விசாரிக்க ஆரம்பிக்கிறான்.
குத்தியவனின் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவன் சிதற விட்டு செல்லும் ரத்தத் துளியில் இருந்து கண்டுபிடிக்கிறான். அதற்கு முன் அந்த வீட்டில் ஒரு செக்ஸ் ஒர்க்கர் இருந்திருக்கிறார் என்ற தகவலை வைத்து, அந்த செக்ஸ் ஒர்க்கர் பெண்ணைத் தேடிவந்தவன் மனைவியை ஏதேனும் செய்துவிட்டானா என்ற ரீதியில் யோசிக்கிறான்.
அதுவரை நல்ல ஆசிரியராக மாணவர்களிடம் ஜாலியாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அவனால், அதன் பிறகு அப்படி இருக்க முடியவில்லை.
கடுமையாக நடந்து கொள்கிறான்.
மனைவியும் அவனும் ஒய்வு நேரத்தில் நடத்தும் நாடகத்தில் நடிக்கும் போது கூட கேரக்டர் கோபமாக பேசும் இடத்தில் அவனை அறியாமல் சொந்தக் கோபத்தைக் காட்டுகிறான். இந்தப் பக்கம் பெண் தூங்கமுடியவில்லை என்கிறாள்.
என்னை வீட்டில் தனியாக விட்டுப் போகாதீர்கள் பயமாய் இருக்கிறது என்கிறாள்.
நாடகத்தில் நடிக்கும் சோகக் காட்சியில் தன் சோகத்தைக் கலந்து அளவுக்கு மீறி கண்ணீர் வடித்து திணறுகிறாள். நிதானமாக, மகிழ்ச்சியாக, நிம்மதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கை பதட்டம் நிறைந்ததாக, அழுகை மண்டியதாக, எப்போதும் திணறிக் கொண்டிருப்பதாக அச்சம்பவத்துக்குப் பிறகு ஆகிவிடுகிறது.
இப்படியே கொஞ்ச காலம் போகும் போது வீட்டுக்கு ஏதோ விசாரிப்பதாக வரும் அறுபது வயதுக்கு மேலே இருக்கும் ஒரு நபர்தான் குற்றவாளி என்பதை கணவன் கண்டுகொள்கிறான்.
அவர் காலில் இருக்கும் காயம், அவர்தான் குற்றவாளி என்று நிருபிப்பதாக இருக்கிறது.
முதலில் மறுக்கும் அந்த வயதானவர், பின் ஒத்துக் கொள்கிறார். செக்ஸ் ஒர்க்கரைத் தேடி வந்ததாகவும், அவர் இல்லாமல், வீடு திறந்து உன் மனைவி வீட்டுக்குள் தனியே இருப்பதைப் பார்த்து சபலப்பட்டு பலவந்தம் பண்ண முயற்சி செய்யும் போது வந்த எதிர்ப்பைக் கண்டு தாக்கிவிட்டு ஒடிப்போனதாகவும் ஒத்துக் கொள்கிறார்.
கணவன் மனைவி இருவருக்கும் குற்றவாளி யார் என்று தெரிந்து வீட்டது? இப்போது தண்டனை கொடுக்க வேண்டும்.
ஆண் அவரை(னை) தாக்குகிறான். பெண் அவரை விட்டு விடு என்று கணவனிடம் சொல்கிறாள். ஆண் ஆவேசமாகிறான். பெண் நிதானமடைகிறாள். அவரை விட்டுவிடு என்கிறாள்.
ஆண் அந்த வயதானவரின் வீட்டுக்கு போன் போடப் போவதாக சொல்கிறான். பெண் வேண்டாம் அவர் குடும்பத்துக்கு மனக்கஷ்டமாக இருக்கும், நீ அப்படி செய்யாதே என்று கணவனைத் தடுக்கிறாள்.
ஆண் கேட்காமல் வயதானவரின் குடும்பத்துக்கு போன் போட்டு வரச்சொல்கிறான். எனக்கு இது பிடிக்கவில்லை. இதோ வரும் குடும்பத்தினரிடம் நீ உண்மையைச் சொல்லி அவரை மாட்டிவிட்டால் நான் உன்னை விலகுவேன் என்று மனைவி சொல்கிறாள். இவனை இப்படியே விட்டுவிடச் சொல்கிறாயா என்று பதட்டமாகிறான் கணவன்.
இவரோடு போகட்டும் இவர் குடும்பம் ஏன் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறாள் மனைவி.
ஆண் வயதானவர் வீட்டுக்கு போன் போடுகிறான்.
வயதானவர் ஆணால் தாக்கப்பட்டத்தாலும், தன் குடும்பத்துக்கு உண்மை தெரியப் போகிறது என்ற பதட்டத்தாலும் பிபி அதிகமாகி, மார்பைப் பிடித்து மயங்கிச் சரிகிறார். இப்போது கணவனும் மனைவியும் ஐயோ இறந்துவிட்டாரா என்று பதட்டமாகிறார்கள்.
கணவன் வயதானவர் மகளுக்கு(?) போன் போட்டு மாத்திரை கொடுக்க வேண்டுமா என்று கேட்க அவள் சொல்லும் மாத்திரையை வயதானவரின் கோட்டுப் பாக்கெட்டில் இருந்து எடுத்து மாத்திரை கொடுத்து பயத்துடனும் நெருக்கடியுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்ச நேரத்தில் வயதானவர் கண் முழிக்கிறார்.
இதற்கிடையில் வயாதானவரின் குடும்பம் வருகிறது. லிப்ட் வேலை செய்யவில்லை. வயதானவரின் மனைவி தன் பெரிய உடம்பை வைத்துக் கொண்டு நடக்க முடியாமல் படிக்கட்டுகளில் நடந்து “ஐயோ உங்களுக்கு ஒண்ணுமில்லையே.. ஒண்ணுமில்லையே” என்று ஒடிவருகிறார்.
குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் அப்பா, மாமா என்றெல்லாம் பதறியபடியே ஒடிவருகிறார்கள்.
இப்போதும் மனைவி கணவனிடம் ஒன்றும் சொல்லாதே. சொன்னால் உன்னைப் பிரிவேன் என்கிறாள்.
குடும்பத்தோர் வந்து வயதானவரை தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட ஆண் என்ற கணவனால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
வயதானவர் குடும்பத்தினரிடம் உண்மையை சொல்லாமல் தவிர்க்கும் அவன், “உங்களுக்கு ஒன்று தரவேண்டும். உள்ளே வாருங்கள்” என்று அழைக்கிறான். வயதானவர் அவனுடைய தனி அறைக்குச் செல்கிறார்.
அங்கே ஒரு பாலத்தீன் கவரில் அவர் தன் மனைவியை கொல்ல முயற்சி செய்யும் போது விட்டுச் சென்று சிறுபொருட்களைப் போட்டுக் கொடுக்கிறான்.
கொடுத்துவிட்டு வயதானவரை பட்டென்று (அதைத் திரையில் பார்க்கும் போது ஒரு மாதிரி இருக்கும்) கன்னத்தில் ஒங்கி, பளிச்சென்று அடிக்கிறான்.
அடிவாங்கிய வயதானவர் தளர்ந்தபடியே அந்த பாலத்தீன் கவரை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார். வந்து மயங்கிச் சாய்கிறார். குடும்பத்தினர் திகைத்து புலம்பி கொண்டே இருக்கின்றனர்.
இந்த படத்தில் யோசிக்க இருப்பதாக நான் நினைப்பது
ஏன் ஆணால் அந்த குற்றவாளியை எளிதில் மன்னிக்க முடியவில்லை. ஏன் பெண் மன்னிக்கிறாள்.
ஆணால் ஏன் மன்னிக்க முடியவில்லை?
1. குற்றவாளியின் செயல் கொடுத்த மன உளைச்சல்
2. தன் மனைவியை தவறான நோக்கத்தில் நெருங்க முயற்சி செய்தான் என்கிற நினைப்பு
3.தான் இத்தனை வருடங்களாக சமூகத்தில் கட்டி வைத்திருந்த ’நல்ல அன்பானவன்’ என்ற பிம்பத்தை சிதறடித்த காரணத்தினால்
4.தன் மனைவின் சோகத்தையும் தானே ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை, அதை அவர் அவனிடம் கொட்டும் போது அவன் மனம் படும் பாட்டால், அவனுடைய சோகத்தையும் அவனே ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையால்
5.ஒருவேளை மன்னித்தால் அது தன் ஆண்மைக்கு வரும் இழுக்கு என்ற எண்ணம்.
6.கொஞ்சம் தவறினால் தன் மனைவியை கொன்றிருப்பான். அப்படி மனைவி இல்லாமல் இருந்திருந்தால் தான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்போம் என்பதை நினைத்து
7.மனைவி மன்னித்து விடு என்று சொல்லலாம். ஆனால் இந்த குடும்பத்துக்கு பாதுகாப்பு நான்தான். நானே முடிவெடுப்பேன் என்ற மனப்பான்மை.
பெண் ஏன் மன்னிக்கிறாள் ?
1.சிறுவயதில் இருந்தே ஆண்கள் தன்னை காமத்துக்காக பார்க்கும் பார்வையைப் பார்த்து பார்த்து இது அவர்கள் இயல்பு. இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று மனம் மரத்துப் போய், அதனொட்டி சரி மன்னித்து விடலாம் என்ற எண்ணத்தால்
2.ஏதோ ஒரு வேகத்தில் வயதானவர் செய்து விட்டார். இதே தவறை தன் அப்பா கூட இன்னொரு பெண்ணிடம் செய்ய வாய்பிருக்கிறதுதான். போதும் விட்டு விடலாம் என்று நினைத்திருக்கலாம். தன் கணவனே கூட இது மாதிரி வேறு ஒரு பெண்ணிடம் நடக்க வாய்ப்பிருக்கிறதுதான் என்று கூட நினைத்திருக்கலாம்.
3.அந்தப் பெண் பொதுவாக ஒரு ஆணை மரத்தின் ஆணிவேராக பார்க்கும் மனநிலையில் இருந்திருக்கலாம். வேரில் இருந்து தண்டு, தண்டிலிருந்து பல்வேறு கிளைகள். வேரின் மீதான இந்த பிம்பச்சிதைப்பு மொத்த மரத்தின் கிளைகளையும் பாதிக்கலாம். அதோ தன் பருத்த உடம்பை கொண்டு படியில் ஏற முடியாமல் ஏறி வந்தாரே இந்த வயதானவரின் மனைவி, அவர் கணவன் மேல் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார். அவரது பிள்ளைகள் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் சிதைக்க வேண்டுமா? அவரை மன்னித்து விட்டுவிடலாம் என்று நினைத்திருக்கலாம்.
இப்படியாக ஆணின் மனநிலையிலும் பெண்ணின் மனநிலையும் நிறைய யோசித்துக் கொண்டே இருக்கலாம். அந்த சிந்தனையை தூண்டிவிடுவதுதான் இப்படத்தின் சிறப்பு.
மேலும் இந்த ஆண் மனநிலை, பெண் மனநிலை என்று எழுதுகிறேன்.
அந்த மனநிலைக்கான Input ஐ எங்கிருந்து, எப்படி வருகிறது என்றும் யோசிக்க நிறைய இருக்கிறது.
இதோ இந்த வயதானவரை மன்னிக்கும் பெண்ணுக்கு அக்குடும்பத்தின் ஒட்டுமொத்த சுமைப்பொறுப்பு இல்லை ( அது சரி தவறு என்பது தனி விவாதம்). அதனால் அவர் இந்த முடிவை எடுக்கிறார். அதே சமயம் இதேப் பெண் ஒருவேளை தன் வயதுப் பெண்ணோடு தனியே ஒரு வாழ்க்கை வாழ்கிறார். அப்போது அந்த வயதுப் பெண்ணை ஒருவன் இப்படி குத்திவிட்டு சென்று விட்டு பின்பு இறுதியில் மாட்டிக்கொள்கிறான். அப்போது இதே பக்குவத்தோடு அவரால் மன்னிக்கமுடியுமா என்று தெரியாது.
ஒருவேளை பெண் தாக்கப்பட்ட போது அதை தைரியமாக எடுத்துக் கொண்டு, என் பிரச்சனை நான் சமாளிப்பேன் என்று அதிகம் கணவன் மீது தன் சோகத்தைக் கொட்டி அழுது சாயாமல் இருந்திருந்தால், ஆண் கூட வயதானவரை மன்னித்திருப்பான்.
அப்படியானால் ஆண் மனநிலை எப்படி கட்டமைக்கப்படுகிறது. பெண் மனநிலை எப்படி கட்டமைக்கப்படுகிறது.
அப்படி கட்டமைப்பதில் எந்த எந்த காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எந்த எந்த சமயத்தில் ஒரு ஆண் உலகம் வகுத்த ஆணாக அட்வேண்டேஜ் எடுத்துக் கொள்கிறான், எந்த எந்த சமயத்தில் ஒரு பெண் உலகம் வகுத்த பெண்ண்ணாக அட்வேண்டேஜ் எடுத்துக் கொள்கிறாள்.
ஆண் பெண் மனநிலை என்று பிரிக்கலாமா? அல்லது மனித மனநிலை என்று ஒன்றுதான் இருக்கிறதா?
இதைப் பற்றியும் இத்திரைப்படம் தொடர்ச்சியாக யோசிக்க வைக்கிறது.
பெண் மன்னிப்பு
ஆணின் மன்னிப்பின்மை…
மேலும் பேசி நட்பாக மட்டும் பழக மட்டும் பெண் வாசகர்கள் என்ற hangouts மற்றும் மின்னஞ்சளில் தொடர்பு கொள்ளுங்கள்.
Super bro. Nice content