என்னை மறந்த நொடிகள்

Posted on

என்னை மறந்த நொடிகள்

அனைவருக்கும் வணக்கம்.

என்னை மெயில் மூலமா தொடர்பு கொள்ளலாம் கதை புடித்திருந்தால் உங்க feedback கொடுங்க…….

ஒரு பெண் மீது எடுத்ததும் காம வயப்படுவது கூடாது. அது நிலைக்காது காதலுடன் கலந்த காமமும் காமத்திலும் அதிகமாக காதலும் மட்டுமே ஒரு நல்ல உறவை நம் வாழ்நாள் முழுவதும் நீட்டிக்கும். என் அனுபவத்தில் நான் கற்றது.

நான் உங்கள் storylover என் வாழ்க்கையில் நான் பெற்ற காதல் அனுபவத்தையும் அதனால் ஏற்பட்ட காமத்தையும் உங்களிடம் பகிர்கிறேன்.

நான் கல்லூரியில் ஒரு பெண்ணை காதலித்தேன் அவள் பெயர் கூற விரும்பவில்லை ஏனெனில் அவளுக்கு தற்போது வேறு ஒருவருடன் திருமணம் ஆகிற்று. 8 வருடம் இருவரும் காதலித்து வந்தோம் அவ்வப்போது எங்களுக்குள் காம விளையாட்டுகளும் ரூம் சென்று எல்லாம் செய்வதும் என்று நன்றாக சென்று கொண்டு இருந்தது சில சூழ்நிலை காரணமாக அவள் என்னை பிரிய நேர்ந்தது சீக்கிரம் சரி ஆகி விடும் என்ற நம்பிக்கையில் இருந்தேன் அனால் என் நம்பிக்கை பொய் ஆனது அவளுக்கு வேறு இடத்தில வரன் அமைந்து விட்டதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் என் நண்பர்கள் தெரிவித்தனர் நான் அவளை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் பலன் இல்லை.

அவளுக்கு திருமணமும் முடிந்தது அவள் திருமணத்திற்க்கு செல்ல எனக்கு மனம் வரவில்லை அனால் அவளை தூரத்தில் இருந்து பார்த்துக்கொள்ள மனம் ஏங்கியது அதனால் திருமண மண்டபம் உள் செல்லாமல் வெளியே நின்று அவர்கள் வெளியே வரும் வரை காத்திருந்தேன் சிறிது நேரத்தில் அவர்கள் வந்தார்கள் நான் ஒரு இடத்தில மறைவாக நின்று அவளை பார்த்தேன் கண்ணில் எந்த வித சோகமும் இல்லாமல் முகத்தில் அவளவு மகிழ்ச்சையாக இருந்தால். உடனே நானும் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

பிறகு எனக்கு சுற்றி என்ன நடக்கிறது என்று எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை நண்பர்கள் எத்தனை பேர் இருந்தாலும் எனக்கு தனியாக இருப்பது போல் ஒரு உணர்வு இருந்து என்னை மிகவும் படுத்தி எடுத்தது சரியாக தூக்கம் இல்லாமல் நான் நானாக இல்லாத தருணங்கள். ஆகையால் நான் குடிக்க ஆரம்பித்தேன். தினமும் குடித்துக்கொண்டு இருந்ததால் அவள் ஞாபகம் இன்னும் அதிகமாக தான் ஆனது அவளை மறக்க முயற்சி செய்து தோற்றது தான் மிச்சம்

இப்படியே நாட்கள் சென்று கொண்டு இருக்க ஒரு நாள் என் நண்பர்களும் என்னுடன் பார் வந்தார்கள் நான் அன்று என் நண்பர்களிடம் அவளை பற்றி பேசி பேசி மிகவும் adhiga போதையை ஏற்றி கொண்டேன். பிறகு என் நண்பர்கள் என்னை கூட்டி சென்று ஒரு காபி கடைக்கு அழைத்து சென்றார்கள். நான் போதையில் அமர்ந்து அழுது கொண்டிருக்க என் நண்பர்கள் என்னை ஆறுதல் படுத்தி கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை போதும் நீங்கள் கிளம்புங்க நான் பாத்து பொய்க்குறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்

சற்று நேரம் அங்கு நான் உக்காந்திருக்க கிளம்பலாம் என்று நினைத்து வண்டி எடுக்க வெளிய வரும் போது மழை பெய்ய ஆரம்பித்தது மக்கள் சிலர் மழைக்கு ஒதுங்க நான் மழையை பொருட்படுத்தாமல் வண்டியை எடுக்க சல சல சல சல வென சிரிப்பு சத்தம் எங்கு கேட்கிறது என்று சுத்தி பார்க்க யாரும் தென்படவில்லை அனால் அந்த சத்தமும் நிற்கவில்லை திடீரென்று திரும்பி பார்க்க ஒரு பெண் படிக்கட்டில் மழையில் நினைத்தவாறு சிரித்து விளையாடி கொண்டு கீழே இறங்கி அவள் வீட்டு வீராண்டாவில் மழையில் நினைந்து கொண்டு பாவாடை தாவணியில் ஆடி கொண்டிருந்தாள். என் வாழ்வில் மலர்ந்த இரண்டாவது காதல் மழையில் நானும் நினைந்தே நின்று கொண்டிருக்க அவளை என்னையும் மறந்து அவளையே பார்த்து கொண்டு இருந்தேன். சற்று நேரத்தில் மழை லேசாக விட அவளது அம்மா வந்து அவளை திட்ட அவள் உடனே அவள் அம்மாவையும் சேர்த்து மழையில் இழுத்து நனைய வைக்க எனக்கு நீண்ட நாள் கழித்து என் முகத்தில் சிரிப்பு தென்பட்டது.

அடுத்து சற்று நேரத்தில் மழை முழுமையாக நின்றது. அவள் தனது தலை முடியை கோதிக் கொண்டே உள்ளே செல்லும் போது லேசான ஒரு பார்வை என் மீது பட எனக்கு உள்ளுக்குள்ளே மின்சாரம் பாயந்த உணர்வு அடிக்க சொக்கி போனேன் உடனே எனது வண்டி எடுத்து கிளம்பினேன் போகும் போது அவள் முகம் மீண்டும் மீண்டும் என் நினைவில் வந்து செல்ல என்னை அறியாமல் சிரித்து கொணடே சென்றேன்.

மறுநாள் காலை 9 மணிக்கு அதே கடைக்கு சென்று காபி குடித்து கொண்டு அவள் எப்போது வெளியே வருவாள் என்று காத்து கொணடே நின்று கொண்டிருந்தேன் வெகு நேரம் ஆகியும் அவள் காணவில்லை என் பார்வை வெகு நேரம் அந்த வீட்டை பார்த்தபடியே இருக்க அந்த கடைக்காரர் தம்பி அந்த பொண்ணு காலைலயே வேலைக்கு கெளம்பி போய்டுவா சாயங்காலம் தான் வருவா நேத்து ஏதோ அந்த பொண்ணு லீவு போட்ருந்தா போல அதனால தான் வீட்ல இருந்தா என்ன நேத்து மழைல அந்த பொண்ண பாத்ததுல மறுபடியும் காதல் வந்துடுச்சா உனக்கு என்று அவர் கேட்க நான் எனக்கு தெரியலைனா அந்த பொண்ண புடிச்சிருக்கு முதல்ல பழக முடியுமான்னு பாக்கலாம் அப்பறம் மத்தத பத்தி யோசிக்கலாம்னு சொன்னேன் அவரும் சரி சரி தம்பி பாத்துக்கோ பத்ரம் என்று சொல்ல நானும் அங்கிருந்து கிளம்பினேன்

அவள் வீடு வரும் நேரம் நான் மீண்டும் அந்த கடைக்கு செல்ல அவர் என்னை பார்த்து ஏன் பா வேலைக்கு போற பொழப்பே இல்லையா இங்கயே சுத்திட்டு இருக்க என்று கேட்க நான் இதை விட வேற என்ன வேல அண்ணா மனுஷனுக்கு முக்கியம் ஆயிட போது ஒரு காபி அண்ணா என்று சிரிக்க அவரும் சிரித்து கொண்டே காபி போட்டு கொடுத்தார். நான் ஒரு 25 நிமிடம் காத்திருப்பிற்கு பிறகு அவள் நடந்து வந்தால் ப்ளூ கலர் சாரீயில் கையில் லேப்டாப் பாக் மாட்டிக்கொண்டு லூசு ஹேர் விட்டு நடந்து வந்து கொண்டிருந்தாள் அப்படியே விண்ணைத்தாண்டி வருவாயா த்ரிஷா போலவே அவள் எனக்கு தென்பட சரியாக அந்த கடைக்காரரும் எனக்காக ஹொஸானா பாட்டு போட்டு சத்தத்தை அதிகமாக்கி விட அப்போது நடந்து வந்த அவள் என்னை மீண்டும் அவளது சுட்டெரிக்கும் பார்வையால் ஒரு பார்வை வீச என் நெஞ்சினுள் 10 தோட்டாக்கள் பாய்ந்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டு நான் என் உடம்பை சிலிர்த்து அசைக்க அவள் என்னை பார்த்து சிரித்து கொண்டே வீட்டினுள் வெட்கப்பட்டு ஓடுவது போல ஓடி சிரித்து கொண்டே கதவை சார்த்தி கொண்டால்

சிறிது நேரம் நான் அவள் வீட்டையே பார்த்து கொண்டிருக்க பூட்டிய கதவு திறக்குமா என்று யோசித்து கொண்டிருக்க அவள் வீட்டினுள் ஒரு அறையில் இருந்து வெளிச்சம் வர அங்கு பார்த்து கொண்டிருந்தேன் அப்போது அவள் தான் ஜன்னல் வழியாக என்னை பார்த்தால் அப்போது நான் கடைக்காரரிடம் அண்ணா இன்னொரு காபி என்று கேட்க அவர் அடேய் அது வயிறா இல்ல காபி கோடௌனா என்று கேட்க அவள் மீண்டும் சிரித்து கொண்டே அவள் ஜன்னல் சுகிறீன் மூடி விட்டு மறைந்தாள்.

அவளுடன் பேசும் சந்தர்ப்பம் எப்படி அமைந்தது எங்களுக்குள் காதல் மலர்ந்ததை பற்றி அடுத்த பாகத்தில் கூறுகிறேன்.

(தொடரும்)

என்னை மெயில் மூலமா தொடர்பு கொள்ளலாம் கதை புடித்திருந்தால் உங்க feedback கொடுங்க…….
நன்றி…

6299012cookie-checkஎன்னை மறந்த நொடிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *