யட்சி 5

Posted on

துபாயில் இருந்த காலம் முழுவதும் அவளை மறந்து கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன். ஆனால், இங்கு வந்த முதல் நாளே மீண்டும் அவள் பற்றிய எண்ணங்கள் மனதினில் அலைமோத ஆரம்பித்திருந்தன. கவலையில் கட்டிலில் சாய்ந்தேன். சற்று நேரத்தில் தூக்கம் என்னை ஆட்கொண்டது.

யட்சி 4

அம்மா என்னை வந்து எழுப்பும் வரை நன்றாக தூங்கி விட்டுருந்தேன். எழுந்து பார்க்கும் பொழுது நேரம் 6 மணி தாண்டி இருந்தது. எழுந்து பாத்ரூம் சென்று கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகிக் கொண்டு வெளியே வந்தேன்.

சற்று நேரத்தில், யாமினி தவிர அவளது அப்பாவும் அம்மாவும் அவளது தம்பி வருணும் என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தனர். அவர்களை வரவேற்று, அமர வைத்து, உபசரித்து நீண்ட நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

அவர்கள் எனக்குச் செய்த உதவிகளுக்காக, நன்றி மறக்காமல் அவர்களுக்காக நான் சில விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் வாங்கிக்கொண்டு வந்திருந்தேன். ஒவ்வொருத்தருக்கும் என்ன கொடுக்கலாம் என யோசித்து யோசித்து வாங்கிய எனக்கு, யாமினிக்காக என்ன வாங்குவது என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அவளுக்கு எதுவுமே கொடுக்கத் தேவையில்லை எனவும் மனதில் தோன்றியது. இருந்தாலும், அது முறையில்லை என்ற காரணத்தினால், கீர்த்தனாவுக்கு வாங்கியது போல அவளுக்கும் ஒரு விலை உயர்ந்த அரேபியன் சுடிதார் செட்டும் ஒரு பட்டுப் புடவையும் வாங்கிக்கொண்டு வந்திருந்தேன்.

அவர்களுக்கென கொண்டு வந்த எல்லாவற்றையும் அவர்களுக்குப் பகிர்ந்தளித்தேன். அதன் பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர்கள் சென்றதும், நான் நண்பர்களைப் பார்க்கப் புறப்பட்டேன்.

அம்மாவுக்குத் தெரிந்தால் அவரது மனது கஷ்டப்படும் என்கின்ற காரணத்தினால், நான் அளவாகவே குடித்தேன். எல்லாம் முடிந்து வீட்டுக்கு வர நேரம் 11.30 மணி தாண்டி இருந்தது.

வீட்டுக்கு வந்ததும் கீர்த்தனா எழுந்து வந்து கதவைத் திறந்தாள். அவளே சாப்பாடும் வைத்துத் தந்தாள். அம்மா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்.

சாப்பிடும் போது அவளும் எனக்குப் பக்கத்திலேயே போனை நோண்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“அங்கயும் இப்டித்தானா?”

“என்ன?”

“டெய்லி குடிப்பியா?”

“இது ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் கம்பல் பண்ணதனால கொஞ்சமா குடிச்சேன். அவ்வளவு தான். அம்மாகிட்ட போட்டுக் குடுத்துறாத.”

“ஹ்ம்ம்”

“ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ஒரு டூர் போகலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கோம்.”

“எப்போ? எங்க?”

“தெரியல. இனிமே தான் எல்லாம் பிளான் பண்ணனும்.”

“உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் ணா.” போனை மேசையில் வைத்துவிட்டு என்னை நோக்கினாள்.

“ஹ்ம்ம். சொல்லு.”

“நம்ம அம்மா ரொம்ப பாவம்ணா. அப்பா போனதுக்கு அப்புறம் அவங்க லைஃப்ல எந்த ஒரு சந்தோஷமும் இல்ல. நீயும் துபாய் போனதுக்கு அப்புறம் அவங்க பெருசா வீட்ட விட்டு வெளிய எங்கயும் போறதும் இல்ல. குடும்பம் வீடுன்னு வீட்டுக்குள்ளயே அடஞ்சி கிடப்பாங்க.”

“ஹ்ம்ம்”

“நீ ப்ரெண்ட்ஸ் கூட டூர் போறத விட முக்கியம் நம்ம அம்மாவ எங்கயாச்சும் ஒரு தூர இடத்துக்கு டூர் கூட்டின்னு போகணும். ஒரு நாலஞ்சி நாள் அவங்க ரொம்ப சந்தோசப்படுற மாதிரி இடங்களுக்கு கூட்டிப் போகணும். பாட்டி, சித்தி, மாமா ன்னு அவங்க ஊர்ல எல்லார் வீட்டுக்கும் கூட்டி போகணும்.”

“அதுக்கென்ன? போலாமே.”

“உண்மையாவா சொல்ற?”

“ஆமா. நீ கேட்டு நா எத வேணாம் னு சொல்ல போறேன்?”

“பணம் ரொம்ப செலவாகுமே. பரவால்லயா?”

“அத பத்தி நீ எதுக்கு கவலப்படுற? பணம் சேக்குறதே சந்தோசமா செலவழிக்கத்தானே! உங்க ரெண்டு பேரோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம்.”

“சரி. எங்க போலாம்?”

“அதெல்லாம் நீயே முடிவு பண்ணு. வாடகைக்கு ஒரு கார் எடுத்துகிட்டு ஜாலியா போயிட்டு வரலாம்.”

“ஹ்ம்ம். தேங்க்ஸ் ணா. லவ் யு சோ மச்.” என்றவாறு எழுந்து எனது கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள்.

“சரி. போய் தூங்கு.” என்றேன்.

“பரவால்லண்ணா. நீ சாப்பிட்டு போ. நா இதெல்லாம் எடுத்து வச்சிட்டு தூங்குறேன்.”

சற்று நேரத்தில் சாப்பிட்டுவிட்டு நான் ரூமினுள் நுழைந்தேன்.

ஆடைகளை மாற்றிவிட்டு கட்டிலில் அமர்ந்து போனை எடுத்தேன். நெட் ஆன் செய்ததும் நிறைய வாட்ஸாப் மெசேஜ்கள் வந்து குவிந்தன.

அதில், “ஹாய்” என புதிய நம்பர் ஒன்றிலிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது.

நானும்,
“ஹாய். ஹூ இஸ் திஸ்?” என பதில் அனுப்பினேன்.

கொஞ்ச நேரத்தில் அதற்கு பதில் வந்தது.
“இஸ் திஸ் கார்த்திக்?”

“யெஸ். ஹூ இஸ் திஸ்?”

“யாருன்னு தெரியலையா?”

“டீ.பி ல பேபி போட்டோ வச்சின்னு யாருன்னு தெரியலையான்னு கேட்டா என்ன சொல்றது?”

“என்னோட நம்பர் உங்ககிட்ட இல்லையா?”

“இல்லையே. ஹூ இஸ் திஸ்?”

“பொய் சொல்லாதீங்க.”

“நா எதுக்கு பொய் சொல்லணும்? உண்மையிலேயே உங்க நம்பர் என்கிட்ட இல்ல.” என்றவாறு அந்த சாட் ஸ்க்ரீனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்பினேன்.

“ஓகே. ஐம் யாமினி”

ஒரு நிமிடம் நான் ஸ்தம்பித்துப் போனேன்.

“யாமினி?”

“யெஸ்”

திடீரென மனது முழுவதும் வெறுமையானது போன்ற ஒரு உணர்வு. உடம்பெங்கும் குப்பென வியர்த்தது. வேகமாக மூச்சு வாங்கியது. ஆனாலும், அடுத்த நொடியே நான் சுதாகரித்துக் கொண்டேன்.

நடந்தது பற்றி எனக்கு அவள் மேல் எந்த வருத்தமோ கோபமோ இல்லை என்பது போலவும், உணர்ச்சி வசப்படாமலும் கெத்தினை மெயிண்டைன் பண்ணியும் பேச வேண்டும் என முடிவு செய்தேன்.

“ஓஹ். ஓகே. சாரி யாமினி. உங்க நம்பர் என்கிட்ட இருக்கல. டெலீட் ஆயிடிச்சி. அதனால தான் யாருன்னு தெரியாம கேட்டேன். ஐம் சாரி.”

“இட்ஸ் ஓகே. பரவால்ல. நீங்க கொண்டு வந்திருந்த கிப்ட்ஸ்க்கு தேங்க்ஸ் பண்ணத் தான் மெசேஜ் பண்ணேன்.”

“ஆஹ். பரவால்ல யாமினி. இதுல என்ன இருக்கு? டிரஸ் எல்லாம் பிடிச்சிருக்கா?”

“ஹ்ம்ம். ரொம்ப அழகா இருக்கு. நம்பர் டெலீட் ஆன மாதிரி என்னையும் மறந்துடாம இதெல்லாம் எடுத்துட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்.”

“அப்டின்னு இல்ல. யாராச்சும் முன் வீட்டுல இருக்குறவங்கள மறப்பாங்களா என்ன?”

“ஆனா நீங்க அங்க போனதும் மறந்திருப்பீங்கன்னு நெனச்சேன்.”

“அப்டிலாம் இல்ல. பை த வேய். எப்டி இருக்கீங்க?”

“ஐம் பைன். நீங்க?”

“ஹ்ம்ம். ஐம் ஆல்ஸோ பைன்.”

“அப்புறம். ஐம் சாரி.”

“எதுக்கு சாரி?”

“லாஸ்ட்டா நாம மீட் பண்ணப்போ நா நடந்துகிட்டதுக்கு.”

“ஐயோ! யாமினி. அதெல்லாம் நா எப்பவோ மறந்துட்டேன். அண்ட் அது என்னோட தப்புத் தானே. அதுல உங்க தப்பு எதுவுமே இல்ல. நோ வொர்ரீஸ். ப்ளீஸ்.”

“நீங்க பண்ணது தப்புன்னு இல்ல. அந்த நேரத்துல நா அப்டி பேசி இருக்கக்கூடாது.”

“ஆனாலும், அப்ப நடந்ததுக்கு 5 வருஷத்துக்கு அப்புறமா சாரி கேக்குறீங்களே. ஹாஹா.”

“நீங்க ஏதாச்சும் மெசேஜ் பண்ணா சாரி கேக்கலாம்ன்னு நெனச்சேன். ஆனா, நீங்களும் 5 வருஷமா என்கிட்ட எதுவும் பேசல. சோ, நானும் பேசல.”

“ஓஹ். நான் தான் இனிமே உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொன்னேன் தானே. அப்டி சொல்லிட்டு மறுபடியும் டிஸ்டர்ப் பண்ணா எப்படி?”

“ஓஹ். குட் பாலிசி.”

“ஹ்ம்ம்.”

“நீங்க வந்துட்டீங்கன்னு கேள்விப் பட்டதும் மனசுக்குள்ள ஒரு மாதிரி இருந்திச்சு. உங்க முகத்த பக்கவே சங்கடமா இருந்திச்சு. அதனால தான் எல்லாத்தையும் பேசி ஒரு முடிவுக்கு வரலாமேன்னு இப்ப மெசேஜ் பண்ணேன்..”

“எதுக்கு சங்கடப்படணும்?”

“தெரியல. சங்கடமா இருந்துச்சு. இன்னக்கி ரெண்டு தடவ உங்க வீட்டுக்கு வந்தேன். ஆனாலும் உங்கள பாக்க எனக்கு மனசு வரல. ஒரு மாதிரி பயமா இருந்திச்சு.”

“ஹ்ம்ம். சரி. அதெல்லாம் மறந்துடுங்க. நானும் மறந்துட்டேன். அப்புறம் இனிமே சந்திக்கும் போது எந்த சங்கடமும் இல்லாம என்கூட நீங்க பேசலாம். நடந்தது எல்லாத்துக்கும் நானும் சாரி சொல்லிக்கிறேன். ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி.”

“ஹ்ம்ம்.”

“பிரியாணி செம்ம டேஸ்டா இருந்திச்சு. தேங்க்ஸ் ஃபொ த டெலிசியஸ் பிரியாணி.”

“ஹ்ம்ம். பரவால்ல. இருக்கட்டும்.”

“அப்புறம். உங்களுக்கு மாப்புள பாத்திருக்காங்கன்னு கேள்விப் பட்டேன்.”

“ஹ்ம்ம். உண்ம தான்.”

“பெஸ்ட் ஒஃப் லக்.”

“தேங்க்ஸ்.”

“சோ, உங்க எங்கேஜ்மெண்ட்க்கு தேவைப்படுமேன்னு தான் அந்த சாறிய கொண்டு வந்தேன்.”
அடித்து விட்டேன் மிகப்பெரிய ஒரு பொய்யை.

“ஓஹ். நீங்க அங்க இருக்கும் போதே கீர்த்தனா சொன்னாளா எனக்கு மாப்புள பாத்திருக்காங்கன்னு.”

அவள் கீர்த்தனாவிடம் கேட்டால் ஏதாவது உளறி வைத்து விடுவாள் என்பதனால், “இல்ல. அம்மா சொன்னாங்க.” என்றேன்.

“ஓஹ். ஓகே. அப்புறம் உங்களுக்கு அம்மா ஏதும் பொண்ணு பாக்கலையா?”

“இல்ல.”

“ஏன்?”

“அவங்க பொண்ணு பாக்கணும் ன்னு என்கிட்ட கேட்டப்போ, கீர்த்தனாக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு அப்புறமா பண்ணிக்கறேன்னு சொல்லிட்டேன்.”

“ஹ்ம்ம். குட்.”

“அப்புறம்? உங்க ஃபியான்ஸி கூட பேசுனீங்களா? எல்லாம் ஓகேயா?”

“பேசல.”

“ஏன்?”

“அவங்க வீட்ல இருந்து முடிவு இன்னும் சொல்லல. 2 நாள்ல சொல்றேன்னு சொல்லி இருக்காங்க. அதுக்கப்புறமா தான் இதெல்லாம்.”

“ஹ்ம்ம். அப்போ உங்க வீட்ல எல்லாம் ஓகேயா?”

“ஹ்ம்ம். அப்பா அம்மாக்கு ஓகே. அதனால எனக்கும் ஓகே தான்.”

“ஹ்ம்ம். குட்.”

“ஹ்ம்ம்.”

“தூங்கலையா?”

“தூங்கத்தான் போறேன்.”

“ஹ்ம்ம். குட் நைட் தென்.”

“ஹ்ம்ம். குட் நைட்.”

பேசி முடிந்ததும் போனை கீழே அடித்து உடைக்க வேண்டும் போல இருந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு அதனை கட்டிலில் தூக்கி வீசி விட்டு, இருந்த கோபத்தை எல்லாம் தலையணை மீது காட்டினேன்.

இந்த உலகத்தில் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மிகவும் கொடூரமான, கடினமான விடயம் என்று ஒன்று இருக்கும் என்றால், அது இன்னும் தான் காதலித்துக் கொண்டிருக்கும் நபரிடமே அவரது கல்யாணத்தினைப் பற்றிப் பேசுவதாகத் தான் இருக்கும். அதுவும் நமக்கு வலிக்காத மாதிரியே பேசவேண்டும். கொடுமை.

என்னைப் பார்த்ததும் பிடித்துக் காதல் கொள்ளும் அளவிற்கு நான் அந்தளவு பெரிய ஒரு ஆணழகன் இல்லை. ஆனாலும், எனது காதலைக் கூறிய பின்னரும் என்னில் துளியும் விருப்பம் இல்லாத அவளிடம் மீண்டும் எனது காதலைச் சொல்லிக் கெஞ்சவோ மன்றாடவோ எனக்குத் துளியும் விருப்பம் இருக்கவில்லை.

அவள் மறுத்தது மறுத்ததாகவே இருக்கட்டும். அவளது ஆசைப்படி அவள் யாரையாவது கல்யாணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழட்டும்.

நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அவளைப் பார்ப்பதனையும் பேசுவதனையும் தவிர்க்க வேண்டும். அவளை விட்டு எந்த அளவுக்கு தூரமாக முடியுமோ அந்த அளவுக்கு தூரமாக வேண்டும்.

தூக்கம் இல்லாத அந்த இரவு நரகத்திற்குச் சமமாக என்னை வாட்டி வதைத்து விடிந்திருந்தது.

காலை எழுந்ததும் நான் செய்த முதல் வேலை, டூர் கூட்டிக் கொண்டு போக அம்மாவிடம் சம்மதம் வாங்கியது தான்.

நானும் கீர்த்தனாவும் அவ்வளவு போராடி அம்மாவை சம்மதிக்க வைத்திருந்தோம்.

அடுத்த நாளே டூர் கிளம்புவதற்கு எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து முடித்து விட்டு வீடு வந்தேன். கீர்த்தனா ரொம்பவே சந்தோசமாக இருந்தாள். ஒரு குழந்தையைப் போல அவளது நடவடிக்கைகள் இருந்து கொண்டிருந்தன.

“அண்ணா! கார் ல எத்தன பேர் போகலாம்?”

“5 பேர் போகலாம். ஏன்?”

“யாமினியையும் கூப்பிடலாம்னு தான்.”

யாரை விட்டு கொஞ்ச நாளைக்காவது தூரமாகி இருக்கவேண்டும் என்பதற்காக நான் இந்த டூர் செல்ல ஆயத்தம் ஆனேனோ, அவளையே டூர் செல்ல கூப்பிடப் போகிறேன் என்றதும் எனக்கு கடுமையான கோபம் வந்தது.

“லூஸாடி நீ? அவக்கு இப்பதான் மாப்ள பாத்திருக்காங்க. இந்த நேரத்துல அவங்க அப்பா அம்மா வெளிய கூட்டி போக சம்மதிப்பாங்களா என்ன?”

“அவளும் இதையே தான் சொன்னா. நீயும் இதையே தான் சொல்ற.”

“அப்போ, அவகிட்ட ஆல்ரெடி கேட்டுட்டியா?”

“ஆமா.”

“சரி. அவங்க அப்பா அம்மா அவள விட மாட்டாங்க. சோ, நாம கிளம்பலாம்.”

“நா அவ அப்பா அம்மாகிட்ட பேசுறேன்.”

“லூஸு மாதிரி பண்ணாத. நாம மூணு பேரும் போயிட்டு வரலாம்.”

“அவளும் டூர் வாரதுல உனக்கு என்ன பிரச்சன?”

“எனக்கு எதுவும் இல்ல. ஆனா…”

“என்ன ஆனா?”

“அம்மா ஏதாச்சும் சொல்ல போறாங்க.”

“அம்மா தான் சொன்னாங்க அவங்களையும் கூப்டு பாக்கலாம் ன்னு.”

“எதுக்கு?”

“நாலஞ்சி பேர் போனா தான் கலகலன்னு இருக்கும்ன்னு தான்.”

“ஓஹ். கிழிஞ்சிது போ.”

“என்ன?”

“ஒண்டும் இல்ல”

“ஹ்ம்ம். அவ வாரதுல உனக்கு ஏதும் விருப்பம் இல்லையா என்ன?”

“அப்டின்னு இல்ல. நா சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்.”

“இங்கப் பாருண்ணா. யாமினியையும் வருணையும் கூப்பிடலாம். அவங்க ரெண்டு பேரும் வந்தா, வருண் உனக்கு டிரைவிங்ல ஹெல்ப்பா இருப்பான். யாமினி எனக்கு பேச்சுத் துணைக்கு இருப்பா. அப்புறம் கொஞ்சம் ஃபன்னாவும் இருக்கும்.”

“உனக்கு ஃபன்னா இருக்கும் தான். எனக்குத்தான் டி ப்ராப்ளம். எனக்குத்தான் ப்ராப்ளம்.” என்று மனதினுள் நினைத்தபடி,

“என்னமோ பண்ணிக்கோ”
என்றவாறு ரூமினுள் நுழைந்தேன்.

அவளது அப்பா அம்மா அவளை டூர் அனுப்புவதற்கு சம்மதிக்கவே கூடாது என இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டேன்.

தொடரும்…

By:-
KaamaArasan

664522cookie-checkயட்சி 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *