அவன் கதவைத் திறந்து உள்ளே போனான். அவள் மனசு அவளை படுத்தியது. அவன் வீட்டுக்கு போகலாம் என்று ஆசை உந்தியது. ஆனால் உடனே போக பயமாக இருந்தது. மீண்டும் போய் கட்டிலில் படுத்து விட்டாள்.
கால் மணி நேரத்தில் நிருதியின் அழைப்பு வந்தது. மனசு தவித்தது. ஒருவித பரவசத்துடன் போனை எடுத்தாள்.
“ஹெலோ?” மிகவும் சன்னமாக பேசினாள்.
“என்ன பண்ற ஸ்வீட்டி?”
“டி வி பாக்கறேன்”
“சாப்பிடு மொத”
“பசியே இல்ல”
“அப்படி சொல்லாத. அது தப்பு”
“நீங்க சாப்பிட்டிங்களா?”
“ம்ம். வரியா?”
“எதுக்கு? ”
“சாப்பாடு ஊட்டி விடறேன்”
“நெஜமா எனக்கு பசி இல்ல”
“சரி. சும்மாவாச்சும் வாயேன்”
“…….” என்ன செய்வதென்று தெரியாமல் அமைதி காத்தாள்.
“அலோ?”
“ம்ம்?”
“வர மாட்டியா?”
“வருவேன்..” முனகினாள்.
“வாயேன்”
“ஆனா.. இப்ப பயமா இருக்கு”
“ஏன்?”
“குட்டீஸ்க இருந்தா தெரியாது. இப்ப நான் வரதை யாராவது பாத்தா தப்பா நெனைக்க மாட்டாங்களா?”
“நீ ரெகுலரா வரவதானே?”
“அது வேற”
“ம்ம்..? எனக்கு உன்ன பாக்கணும் போலருக்கு”
“இப்பதான பாத்திங்க?”
“ம்ம்.. அது பத்தல.”
“நா அப்றம் வரேன்”
” ஓகே. பை.. ”
“பை.”
காலை கட் பண்ணி விட்டான். அவன் வருத்தமடைந்து விட்டான் என்பது புரிந்தது. அவள் மனசு இன்னும் மோசமாக வருத்தப் பட்டது. சரி ஒண்ணும் வேண்டாம் சும்மா போய் பார்த்து இரண்டு வார்த்தை பேசிவிட்டு வந்து விடலாம் என்று நினைத்து எழுந்தாள். டிவி பேன் எதையும் ஆப் பண்ணாமல் அப்படியே விட்டு விட்டு நிருதி வீட்டுக்குப் போனாள்.
அவன் சோபாவில் சாய்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான். சுகன்யாவைப் பார்த்ததும் சட்டென புன்னகைத்தான்.
“வா.. !!”