“நான் ஹெல்ப் பண்ணட்டா?”.
“ஹ்ஹ்ம்ம்ம்” என்று தலையை மட்டும் அசைத்தார்.
நானும் அவர் அருகில் சென்று, அவர் பின் புறம் இருந்து அந்த கொக்கியை மாட்டி விட்டேன்.
அந்த ஒரு கணம், உரோமங்கள் அடர்ந்த அவர் கழுத்தின் மேல் என் கைகள் பட, என் உடல் முழுவதும் சிலிர்த்துக் கொண்டது. அவர் சட்டையில் உள்ள ஒரு பொத்தானைக் கழட்டி அந்த சங்கிலியை சரி செய்தார். அத்தருணம் அவர் மார்பின் அழகை லேசாக பார்க்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது, உண்மையிலே உறைந்து தான் போனேன். மறுபடியும் அவர் பட்டனை போட்ட போது நான் சற்று ஏமாற்றம் அடைந்தேன்.
பிறகு வெகு நேரம் வரை பேசிக் கொண்டிருந்தோம். அவர் எப்படி அந்த வீட்டை வாங்கி, அதை நிவர்த்தி செய்து, பராமரித்து வருகிறார் என்று தெளிவாக சொன்னார். வீட்டையும் நன்றாக எனக்கு சுற்றிக் காண்பித்தார். எனக்கு அப்பொழுதும் ஒரு விக்ஷயம் புரியவே இல்லை. எப்படி ஒரு வேஷ்டி சட்டை போட்ட 60 வயது இந்தியர், இப்படி ஒரு வாழ்க்கைச் சூழலை அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்? வீட்டிலேயே ஒரு நூலகமும் வைத்திருந்தார். அவரது வாழ்க்கை சூழல் எல்லாமே அவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்து இருந்தது. இப்படிப் பட்ட ஒரு சூழலை தான் இவ்வளவு நாளாக நானும் தேடிக் கொண்டிருந்தேன். இப்படி ஒரு மன நிம்மதியான வாழ்க்கை இந்த வயதில் எவருக்குமே கிட்டாது.
“நீங்க ரொம்ப கொடுத்து வச்சவரு சார்”
“எதற்காக அப்படி சொல்லறீங்க?”
“இப்படி ஒரு அழகான இடம், தனியே எவ்வளவு சந்தோஷமா வாழ்க்கைய அனுபவிக்கறீங்க”.
“தனியா இருப்பது சந்ததோஷமான ஒரு விஷயம் தான் ஆனாலும், தனிமை என்று ஒன்று அவ்வப்போது வந்து எட்டி பார்க்கும் போது, இந்த வயசில அது கொஞ்சம் கஷ்டமான தான் இருக்கு. அதனால தான், புத்தகம், விவசாயம், தோட்டம் இப்படி அப்படின்னு நேரத்த செலவிடறேன்”.
மேலும் தொடர்ந்தார்.
“எல்லாமே இருக்கு, இருந்தாலும், ஆனா, அந்த தனிமைன்னு வரும் போது தான், நமக்குன்னு ஒருத்தர் இல்லயேன்னு ரொம்ப ஏக்கமா இருக்கும். எல்லாம் இருந்தும், ஒரு மன விரக்தி எற்படும்”
இதை கேட்ட எனக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்ல. நான் நினைப்பதையே அவரும் நினைக்கிறாரோ என்று அவர் கண்களை சற்று உற்று நோக்கினேன். அவரும் என் கண்களை சற்று நோக்கி விட்டு சட்டென்று கீழே குணிந்து கொண்டார். அவரை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தாமல், எனக்கு களைப்பாக இருப்பதால் கொஞ்ச நேரம் ஒய்வு எடுத்துக் கொள்கிறேன் என்றேன்.
அவரும் நேரம் போனதை உணர்ந்தவராய், என்னை ஓய்வு எடுக்க சொல்லி விட்டு மதிய உணவுக்கு என்னை எழுப்புகிறேன் என்று எனக்கு விடை கொடுத்தார். நானும் உடனே சென்று என் கட்டிலில் சாய்ந்தேன்.