அன்று நடந்த ஒரு நாளிலேயே கர்ப்பமாகி விட்டேனா என்பது கூட எனக்கு ஆச்சரியமாக தான் இருந்தது. 75 நாட்கள் கடந்ததால், கர்ப்பத்தை கலைப்பது கடினம் என்று டாக்டர் சொல்ல, பரவாயில்லை டாக்டர், எனக்கும் அதில் எந்த உடன்பாடும் இல்லை என்று கூறினேன். என்னுடைய திடமான பேச்சினை அத்தை கேட்டு ஒரு நிமிடம் வாயடைத்து நின்றாள். அதற்கு பின்பு என்னை கண்மனி போல பார்த்துக் கொண்டாள். அம்மா அருகில் இல்லை என்ற குறையே இல்லை. அதனால், உன் அப்பாவின் படிப்பிற்கும் எந்த இடரலும் இல்லை.
ஆனால், எங்கள் வீட்டில் தான் ஒரு பூகம்பமே உருவானது. நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பது எங்கள் ஊரில் தெரியவர ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேச ஆரம்பித்தனர். என்னை என் அப்பா திட்டி வீட்டை விட்டு துரத்தி விட்டிருந்தாலும், பார்ப்பவர்களிடம் எல்லாம், அவ தங்கமான பொன்னு பா.. அவளை பற்றி நீங்க தான் தப்பா சொல்லீட்டு இருக்கறீங்க… ஒரு வேலை அவ கர்ப்பமா இருந்திருந்தா கண்டிப்பா ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது தானே.. அப்போ உங்களை கவனித்துக் கொள்கிறேன், என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தவருக்கு இது பேரிடியாக விழுந்தது போழும். படுத்த படுக்கையாகி விட்டார்.
இந்த நேரத்தில் எனக்கு இது தெரிய கூடாது என்பதற்காக என்னிடமிருந்து இதையனைத்தையுமே மறைத்து விட்டார்கள். நான் கர்ப்பமாகி 9 வது மாதத்தில் என் அப்பாவின் ஆவி இந்த உடலை விட்டு பிரிந்தது. சிறு வயதிலேயே நான் கர்ப்பமாகி விட்டிதால், அதனை தாங்கிக் கொள்ள என் உடல் தகுதி இல்லை என்று அதனையும் என்னிடமிருந்து மறைத்துவிட்டார்கள். கடைசியாக என் அப்பாவின் முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. ஏன் எனக்கு மட்டும் இத்தனை கஷ்டம் என்பது மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என் அப்பா இறந்த ஒரு மாதத்தில் நீ பிறந்தாய். அதற்கு பின்பு தான் அப்பா இறந்த விசையத்தையே என்னிடம் கூறினார்கள். நீ பிறந்த சந்தோஷத்தை கொண்டாடுவதா, இல்லை அப்பாவின் பிரிவினை நினைத்து வேதனைப்படுவதா என்று கூட விளங்கவில்லை.
அம்மாவை பார்க்க வேண்டும் போல இருந்தது. ஆகவே ஊருக்கு கூட்டி செல்ல சொல்லி அத்தையிடம் அடம் பிடித்தேன். என் அம்மா என்னை பார்க்க விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டதால் தான், அப்பாவிற்கு பிறகு கூட என்னை வந்து பார்க்க கூட இல்லை என்பதனையும் புரிந்து கொண்டேன்.
அந்த நேரத்தில் உன்மையிலேயே உன்னை மட்டும் இல்லை, இந்த வாழ்க்கையையே வெறுத்தேன். ஆனால், அத்தை தான் எனக்கு ஆறுதலாக இருந்து எனக்கு நல்ல பாடங்களை சொல்லிக் கொடுத்து பக்குவப்படுத்தினார்கள். அனைத்தும் மறந்து, உனக்காக வாழ ஆரம்பிக்கும் போது என் அம்மாவும் இறந்த செய்தி வர, தாமதிக்காமல் எங்கள் ஊரிற்கு சென்றோம். அங்கு குமாரும், உன் அத்தை அது தான் அப்பாவின் அக்கா சுந்தரியும் தான் எங்களை வரவேற்றார்கள். அத்தை சுந்தரியிடமும், உன் தாத்தா, பாட்டியிடமும் தான் எல்லாமே பேசி அவர்களை ஆறுதல் படுத்தினார்கள்.
அதன் பின்பு, தான் என் தங்கையையும் (சுகன்யா) சேர்த்து கொண்டு, ஒன்றாக வளர்க்க ஆரம்பித்தார்கள். உன்னை தன் பிள்ளை போல உன் தாத்தாவும் பாட்டியும் வளர்க்க நானும் உன் அப்பாவும் படிப்பை தொடர்ந்தோம்.
இனறு,
சந்தியா : (இடை மறித்து) மனது ரொம்ப கஷ்டமா இருக்குமா.. இன்னைக்கு போதும். இன்னொரு நாள் இதனை தொடர்ந்து கொள்ளலாம். (என்று கூறி அம்மாவை கட்டிப் பிடித்து தூங்க ஆரம்பித்தாள்)
மாலதியும் தன்னுடைய கஷ்டங்களை இன்னொருவரிடம் பகிர்ந்து கொண்ட திருப்தியில் நிம்மதியாக தூங்க ஆரம்பித்தாள்.
அத்தியாயம் 7:
மாணிக்கம் வேலை நிமித்தமாக காலை பெங்களூரு சென்று சேர்ந்தவுடன் மாலதிக்கு கூப்பிட்டு சொன்னான். மாணிக்கத்தின் போன் கால் வந்தவுடன் தான் மாலதியே கண் விழித்தாள். இரவு நல்ல தூக்கம். கண் விழித்தவள் அருகில் சந்தியாவை பார்த்தாள். அவளும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். நேரத்தை தன் மொபைலில் பார்த்தாள். சரியாக 6.30 காட்டியது.
கைகளை மேலே தூக்கி சிறிது போம்பலை முறித்து கொண்டு, கட்டிலை விட்டிறங்கி பாத்ரூமிற்குள் சென்றாள். காலை கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்தும் சந்தியா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள். பின், சமையலரை சென்றவள், சிறிது நேரத்தில் காபியுடன் வந்து சந்தியாவை எழுப்பினாள். சந்தியா கண் விழித்து, படுத்த நிலையிலேயே அம்மாவை கட்டிப்பிடித்து கண்ணத்தில் ஒரு முத்தமிட்டாள்.
சந்தியா : குட் மார்னிங் மா…
மாலதி : ம்ம்.. குட்மார்னிங் டா… என்ன இன்னைக்கு பாசம் பொங்கி வலியுது..
சந்தியா : என் அம்மா, நான் பாசத்தை பொழியறேன்..
மாலதி : அது சரி.. சரி எழுந்து காபிய குடி.. நான் போய் காலை டிபனை பண்ணனும்.
சந்தியா : ம்ம்… அம்மா, அப்பா நல்லபடியா ரீச் ஆய்ட்டாரா?
மாலதி : ம்ம்… போய் சேர்ந்துட்டார் டி..
சந்தியா : எப்போமா ரிட்டன்…
மாலதி : இன்னும் ஆபிஸிற்கே போகல… அதுக்குள்ள எப்படி தெரியும்.. சரி நான் போய் வேலையை பார்க்கிறேன். (என்று சொல்லிக் கொண்டே கிட்சனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்)
அன்றாட வேலைகள் நடந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் கடந்தது. மாணிக்கமும், அவருடைய ஆபிஸில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதில் மும்முரமாக இருந்தார். குறைந்தது 5 நாட்கள் இல்லாமல் கோவை திரும்பி வர முடியாது என்று கராராக சொல்லிவிட்டார்.
இந்நிலையில், சந்தியா தன்னுடைய பிரென்சுடன் பிக்னிக் போய்விட்டு வருகிறேன் என்று சென்றவள், போன வழியில் இவர்கள் சென்ற பேருந்து கோவை பொள்ளாச்சி ரோட்டில் விபத்திற்குள்ளாகி, சென்ற அனைவருக்கும் படுகாயம் ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விசையத்தை மாலதிக்கு கூப்பிட்டு சொல்ல, அவளும், அருண் மற்றும் ஐஸ்வரியாவும் பதரியடித்துக் கொண்டு கோவை G.H ற்கு சென்றனர். சந்தியா சேர்க்கப்பட்டிருந்த வார்டிற்கு சென்று சந்தியாவை பார்க்க, பெரிதாக காயம் எதுவும் இல்லை என்றாலும் வலது கால் தொடை பகுதியில் ஏதோ வெட்டுப்பட்டு அந்த இடத்தில் கட்டுப்போட்டிருந்தார்கள்.
மாலதி உடனே அவர்களின் குடும்ப டாக்டர் ஷீபா வை அழைத்து விசையத்தை சொல்ல அவர்களும் சந்தியாவை அழைத்துக் கொண்டு R.S. புரத்தில் உள்ள அவர்களின் கிளீனிகிற்கு வர சொன்னார்கள். விபத்து என்பதால், சில பார்மாலிடீஸ் இருக்கிறது. அதனை முடிக்காமல் சந்தியாவை அனுப்ப முடியாது என ஹாஸ்பிட்டல் நிர்வாகம் கராராக சொல்ல, வேறு வழியில்லாமல் சிறிது நேரம் அவர்களின் பார்மாலீடீஸ்க்கு ஒத்துழைத்து விரைவாக சந்தியாவை தெரிந்த கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றனர்.
டாக்டர் ஷீபா, கிளினிக்கிலிருந்து வெளியே வந்து, அவர்களை தன்னுடைய ரூமிற்கு அழைத்துச் சென்றாள். சந்தியாவை படுக்கவைத்துவிட்டு, அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, தன் உதவிக்கு உள்ள நர்சுடன் சந்தியாவிற்கு அடிபட்ட இடத்தில் இருந்த கட்டுக்களை பிரித்து, சிறிது ஆராய்ந்து விட்டு, மாலதியினை கூப்பிட சொன்னாள். நர்சும் சென்று மாலதியை கூட்டி வர
ஷீபா : அக்கா, அங்கே X-Ray ஏதாவது எடுத்தார்களா கா…
மாலதி : ம்ம்.. ஆமாடா, நாங்க போவதற்கு முன்பாகவே அந்த பார்மாலிடீஸ் எல்லாம் முடித்து விட்டார்கள். (என்று சொல்லிக் கொண்டே X-Ray எடுத்து அவள் கையில் கொடுத்தாள்)
ஷீபா : (சிறிது ஆராய்ந்துவிட்டு) ஒன்னும் பெரிதாக கவலைபடரது போல எதுவும் இல்லை கா.. ஒரு சின்ன ஸ்டிச்சிங் போட்டுக்கலாம். கட்டு மட்டும் போட்டு விடுகிறேன். 3 டேஸ் மட்டும் அவளுடைய வலது காலில் அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக் கொண்டாள் போதும். கை தாங்களாக அவளுக்கு உதவியா இருங்க..
மாலதி : ம்ம் சரி டா…
ஷீபா : கொஞ்ச நேரம் இங்கேயே வெய்ட் பண்ணுங்க. நான் போய் சந்தியாவிற்கு ஸ்டிச் போட்டு கூட்டி வருகிறேன். நர்ஸ் அவங்க பிள்ளைகளையும் உள்ளே அழைத்து வந்து அமர சொல்லிவிட்டு, ஸ்டிச்சிங்க்கு தேவையானதை எடுத்து வாருங்கள் என்று சொல்லிவிட்டு சந்தியாவை படுக்க வைத்திருந்த இடத்திற்கு சென்றாள். அந்த இடம் கர்ட்டனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்ததாள் முழுமையான பிரைவசியுடனேயே இருந்தது. சிறிது நேரத்தில் ஷீபாவும், நர்சும் கை தாங்களாக சந்தியாவை வெளியே அழைத்து வர, சந்தியாவும் வலது காலில் அழுத்தம் கொடுக்காமல் இருக்க இடது காலினை மட்டும் நிலத்தில் ஊன்றி நொண்டி நொண்டி நடந்து வந்தாள். சந்தியாவை ஒரு பெண்ணால் தாங்கி பிடிக்க முடியாது என்பதால் இருவரும் கூட்டி வந்தனர்.
அதனை பார்த்ததும் அருண் வேகமாக சென்று, சந்தியாவை தாங்கி பிடித்துக் கொண்டான். ஆண் மகன் என்பதால், அவளை ஒருவனே பேலன்ஸ் செய்து தாங்கி பிடித்து அழைத்து வர முடிந்தது. ஷீபா அவளுடைய இருக்கையில் அமர, நர்ஸ் வெளியே சென்றாள். அருணும் சந்தியாவை கைதாங்கலாக அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்து அவனும் அருகில் அமர்ந்தான்.
ஷீபா : அக்கா, நான் முதலிலேயே சொன்னது போல தான் கா.. சந்தியா எந்த சூழ்நிலையிலும், வலது காலில் அழுத்தம் கொடுக்காமல் 3 நாட்கள் பார்த்து நடந்து கொண்டால் போதும். ஷீ இட்ஸ் பி ஆல்ரைட்… சந்தியா புரிந்ததா.. (என்று சிறிது அழுத்தமாக சொன்னாள். உன்மையில் சந்தியாவிற்கு உணர்த்தவே இதனை திரும்பவும் இப்பொழுது கூறினாள். சந்தியாவும் புரிந்தது போல தலையாட்டிக் கொண்டாள்)
மாலதியை பார்த்து,
ஷீபா : அக்கா எப்படி இருக்கரீங்க.. பார்த்து ரொம்ப நாள் ஆச்சுல கா..
மாலதி : ஆமாம் டா.. ரொம்ப நாள் ஆச்சு. நீ முதலில் எல்லாம் அடிக்கடி விட்டுக்கு வந்துட்டு போவ இப்போ ஏன் டா வரதே இல்லை. வேலை அதிகமா..
ஷீபா : ஆமாம் கா.. முதலில் படித்துக் கொண்டிருந்ததால் டைம் நிறையா இருந்தது அடிக்கடி என்னுடைய ஸ்வீட் பிரென்ட் அருணை பார்க்க அங்க வந்திடுவேன்… (என்று அருணை பார்த்து மென்மையாக சிரிக்க அருணும் சிரித்துக் கொண்டான்)
மாலதி : (நக்கலாக) அப்போ எங்கள பார்க்க வரலை.. உன் பிரென்ட தான் பார்க்க வந்த அப்படி தானே…