ஷீபா : அதெல்லாம் இல்லகா.. சும்மா அவனை சீண்ட தான் சொன்னேன் கா.. (திரும்பவும் அருணை பார்த்து கண்ணடித்துக் கொண்டாள்) இப்போ வரலாம் நா, எங்க கா டைம்.. இங்க பாருங்க எத்தனை கூட்டம் நு.. ஒரு நாள் கூட என் சொந்த வேலைக்கு கூட லீவ் போட முடிவது இல்லை. நீங்க வந்துட்டு போலாம் ல கா…
மாலதி : நானும் அதே நிலை தான். வீட்டை பார்ப்பேனா.. ஸ்கூலிற்கு போவேனா.. கரெக்ட்டா இருக்குது டா.. அது தான் சந்தியாவும், அருணும் அடிக்கடி இங்க வந்துட்டு தானே போறாங்க.. அவங்க உன்னை பத்தி அப்போ அப்போ அப்டேட் பண்ணிகிட்டு தான் இருப்பாங்க.. சரி எப்போ எங்களுக்கு கல்யாண சாப்பாடு போட போர…
ஷீபா : என்னை விட பெரிய பொன்னு சந்தியா இருக்கிறாள் தானே. முதலில் அவளுக்கு திருமணம் முடிங்க அப்புறம் எனக்கு பார்த்துக்கலாம்.
மாலதி : நான் மட்டும் என்ன பார்க்க மாட்டேனா சொல்றேன். உன்னை போல தான் அவளும் ஏதாவது சாக்கு சொல்லிகிட்டே இருக்கிறாள்.. சரி டா.. ரொம்ப நேரமாக பேசிகிட்டே இருந்தாச்சு. பேசன்ட் வேர வைய்ட்டிங்.. என்னடா பீஸ்..
ஷீபா : அக்கா.. உங்கள என் சொந்த அக்காவா தான் நினைக்கிறேன். பீஸ் அது இதுனு சொல்லி என்ன கஷ்டபடுத்தாதீங்க…
மாலதி : சாரி டா.. நானும் அந்த கண்ணோட்டத்தில் கேட்கவில்லை.. காசினால் நம் பந்தம் தடைபட கூடாது நு தான் கேட்டேன்.. சாரி டா…
ஷீபா : நமக்குள்ள இருக்கிற நப்பு எது நாளையும் தடைபடாது.. போதுமா கா…
மாலதி : சரி டா.. வருகிறோம்..
அனைவரும் விடை பெற்று கிளம்பினர்.. அருண் கை தாங்கலாக சந்தியாவை ஜாக்கிரதை உணர்வுடன் பாசமாக அழைத்துச் செல்வதை பார்த்து ஷீபாவே சிறிது ரசித்துப் பார்த்தாள்.
அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர். சந்தியா படியேறுவது கடினம் என்பதால், அவள் மாலதியின் ரூமிற்கு ஷிப்ட் ஆகிக் கொண்டாள். தனக்கு வேண்டிய துணிகளையும் ஐஸ்வரியா எடுத்துக் கொண்டு வந்து, மாலதியின் அலமாரியில் அடுக்கினாள். மாலதி மாணிக்கத்திற்கு நடந்த விசையங்களை விலக்கமாக போனில் கூறினாள். இருந்த நிலையிலும் மாணிக்கத்தினால் வர முடியாததை நினைத்து வருந்தினான்.
நேரம் கடந்து கொண்டிருந்தது. அருணும், ஐஸ்வரியாவும் சந்தியாவை பார்த்துக் கொண்டனர். மாலதி உணவினை தயார் செய்து கொண்டிருந்தாலும் மனதினில் ஒருவகையான குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற கவலையிலேயே நேரத்தை நகர்த்திக் கொண்டிருந்தாள்..
அவள் நினைத்துக் கொண்டிருந்தது போலவே நடந்தும் விட்டது.. ஒரு போன் கால் வர அதனை மாலதி அட்டன்ட் பண்ணி பேசி முடிக்க முடிக்க அழுது கொண்டே கீழே உட்கார்ந்துவிட்டாள்……
போன் கால் வர அதனை ஆவலுடன் மாலதி எடுத்து பேசினாள். காரணம் அவளுடைய தங்கையிடமிருந்து கால் வந்ததால், மிகவும் சந்தோஷமாக காலை அட்டெண்ட் பண்ணினாள். ஆசையாக பேச போனவலுக்கு எதிர் திசையிலிருந்து சுந்தரம் அதாவது மாலதியின் தங்கை சுகன்யாவின் கணவர் இறந்துவிட்ட செய்தி தான் அது. அதனை கேட்டதும் மிகவும் மனமுடைந்தவலாக அப்படியே கீழே உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.
இவளுடைய அழுகையை பார்த்து பதறியடித்துக் கொண்டு அருணும், ஐஸ்வரியாவும் அங்கே வந்து,
அருண் : என்னமா.. என்னம்மா ஆஆச்ச்சு (என்று பட படப்புடன் கேட்க)
மாலதி : உன் சுந்தரம் சித்தப்பா இறந்துட்டாராமா டா…. (என்று அழுகும் குறலில் கூறினாள்)
ஐஸ்வரியா : என்னமா சொல்லர… சித்தப்பாவா (என்று சொல்லிக் கொண்டே மாலதியை அரவனைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்)
அருண் : எப்படி மா.. சித்தப்பா நல்லா தானே இருந்தார். எப்படி திடீர்னு..
மாலதி : விடியற் காலையில் திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது. உடனே, பக்கத்தில் உள்ள ஆஸ்பிட்டலுக்கு கூட்டி சென்றிருக்கிறார்கள். இருந்தாலும் டிரீட்மென்ட் பலன் தரலையாமா…. (என்று அழுது கொண்டே சொல்லி முடித்தாள்)
அருண் : (சிறிது அழும் குறலில்) இப்போ சித்தப்பா உடல் எங்கமா இருக்கு?
மாலதி : ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு கொண்டு சென்று கொண்டுள்ளார்கள் டா… சுகன்யாக்கு நம்மல விட்டா யாருடா இருக்கிறா.. அப்பா அம்மா போனதற்கு அப்புறம், தாய் வீட்டு முறையில எனக்கு அவ அவளுக்கு நான். அவளுக்கு ரொம்ப துணையா இருந்தது சுந்தரம் அத்தான் தான். இனி அவளுக்கு யார் துணையா இருக்க போராங்க. ஒரே பெண்ணை வைத்துக் கொண்டு…… (என்று சொல்ல சொல்லவே கண் கலங்கி அழ ஆரம்பித்தாள்)
அருண் : அம்மா சித்தியை பார்க்க இப்பொழுதே போகனும் ல மா…
மாலதி : ஆமாம் டா… நான் போனால் தான் அவளுக்கு ஆறுதலே..
அருண் : சரிமா.. அப்போ எல்லோரும் கிளம்பலாம் மா…
மாலதி : டேய் சந்தியாவை இந்த நிலையிலே எப்படி டா கூட்டீட்டு போறது. ஷீபா சொன்னதை கேட்ட தானே…
ஐஸ்வரியா : நான் வேண்டும் என்றாலும் அவளை பார்த்துக்கிறேன் மா. நீ அருண் கூட கிளம்புங்க.. அவன் 2 வீலர்ல வேகமா ஒரு மணி நேரத்தில் கூட்டீட்டு போய் விட்டிடுவான் மா…
மாலதி : ஆமாம், இவ பெரிய மனுசி, அவளை தாங்கி பிடிக்க உன்னால எப்படி டி முடியும்..
சந்தியா : (வாக்கரில் சிறிது சிறிதாக நொண்டிக் கொண்டே ஹாலிற்கு வந்து சேர்ந்தாள்) அம்மா என்ன பத்தி கவலை படாதீங்க மா.. இப்போ சித்திக்கு பக்கத்தில் உங்க துணை தான் வேண்டும். நான் எப்படியாவது அட்ஜெஷ்ட் பண்ணிக்கிறேன். நீங்க போய்ட்டு வாங்க..
மாலதி : அருண் நீயும் ஐஸ்வரியாவும் அக்காவிற்கு துணையா இருந்துக்குங்க, நான் மட்டும் இப்போ கால் டாக்ஸி புக் பண்ணி கிளம்பறேன். 3 நாளைக்கு அப்புறம் சந்தியாவுடன் நீங்க அங்க வந்திருங்கள்…
சந்தியா : அம்மா 2 பேருமா.. வேண்டவே வேண்டாம் மா… அருணையும், ஐஸ்வரியாவையும் என்கிட்ட விட்டுட்டு போனீங்கனா, இவங்க போட்டுக்கர சண்டையில என் தலையே வெடித்துவிடும் மா.. ஷோ பிளீஸ் வேண்டாம் மா..
மாலதி : உன்னை தாங்கி பிடித்து கூட்டிப்போக அருண் கண்டிப்பா வேண்டும் டி.. அது மட்டும் இல்லாம, நீ பெண் பிள்ளை டீ எதாவதுனா.. ஒரு பெண் துணையும் வேண்டும் டீ… அதுனால தான் சொன்னேன்..
சந்தியா : அம்மா.. வேண்டும் என்றால் அருணை மட்டும் எனக்கு துணைக்கு விட்டு செல்லுங்கள் மா.. நான் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன். நீங்க 2 பேரும் போய்ட்டு வாங்க. நாங்க 3 நாளில் அங்க வந்து சேர்ந்து விடுகிறோம். சரிமா அப்பாகிட்ட சொல்லியாச்சா?
மாலதி : இன்னும் இல்ல டீ.. இதோ அவருக்கு கூப்பிடுகிறேன்..
என்று மாலதி மாணிக்கத்திற்கு கால் பண்ண, அருண் கால் டாக்ஸிக்கு நெட்டில் போன் வழியாக புக் பண்ணிக் கொண்டிருந்தான். மாணிக்கமும் வேலை நிமித்தமாக உடனே கிழம்பி வர முடியாது, ஆகவே 3 நாட்களில் பிளைட் புக் பண்ணி கோவை வந்து, சந்தியாவையும் அருணையும் கூப்பிட்டு கொண்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னார். சரி என்று சொல்லிவிட்டு, மாலதியும், ஐஸ்வரியாவும் கிழம்ப தயாரானார்கள். கால் டாக்சியும் வந்தது. இருவரும் பொள்ளாச்சி கிழம்பி சென்றனர்.
சுகன்யாவின் வீட்டை அடைந்ததும், மாலதி அருணிற்கு கால் பண்ணி நல்லபடியாக வந்து சேர்ந்ததை சொல்லிவிட்டு, அடக்கம் மாலை 4 மணிக்கு என்று அப்டேட் பண்ணி காலை வைத்தாள்..
அருண் சந்தியாவை அழைத்துக் கொண்டு சென்று கட்டிலில் அமர்த்திவிட்டு, அருண் ஹாலிற்கு வந்து டீவி பார்க்க ஆரம்பித்தான். அங்கு சந்தியா சிறிது நேரம் படுத்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தாள்.
மாலதி மத்தியத்திற்கு தேவையான உணவினை ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்ததால், அதைப்பற்றிய கவலை இப்போதைக்கு இல்லாமல் இருந்தது. மத்தியம் சாப்பிட அருண் சந்தியாவை உணவு மேஜைக்கு அழைத்து வந்து அமர்த்தினான். இருவரும் உணவு உன்டனர். அருண் சந்தியா கேட்பதற்கு முன்பாகவே விழுந்து விழுந்து உபசரித்தான். பின் அவளை தட்டிலேயே கை கலுவ சொல்லிவிட்டு அந்த தட்டினை அருணே எடுத்து சென்று கழுவியும் வைத்தான். இவ்வாறு ஒவ்வொரு செயல்களையும் சரியாக பார்த்துக் கொண்டான். அவனுடைய உபசரிப்பில் சிறிது மயங்கி தான் போயிருந்தாள்.