முதலிரவு இப்போதாவது பேசிவிட வேண்டும் என அறையில் காத்திருந்தான் அருண். அப்போது கதவை திறந்து மெல்ல உள்ளே வந்தாள் கவிதா அலங்காரம் இல்லை நகைகள் ஏதும் பெரிதாய் அணியவில்லை. சிறிய கம்மல், இருப்பதே தெரியாது மூக்குத்தி, கழுத்தில் புதிதாய் தாலி, சின்னதாய் ஒரு செயின், கைக்கொன்றாய் வளையல் முத்துக்கள் நிறைந்த கொலூசு அவளின் நடைக்கு ஏற்ப சப்தம் எழுப்பியது. கையில் பாலுடன் வந்த அவளிடமிருந்து பாலை வாங்கிய அருண் அதனை அருகில் இருந்த மேஜையில் வைத்தான்.
தனது கணவனை பார்வையில் அளந்த கவிதா படுக்கையில் அமர்ந்தாள் அவளுடனே அமர்ந்த அருண் இத்தனை நாட்கள் தான் பேச நினைத்தவற்றை பேசி விட வேண்டும் என தயங்கித் தயங்கி பேச துவங்கினான். அவன் பேச துவங்கிய சில நிமிடங்களில் அவனை இடைமறித்து கவிதா தனது கொலுசு அதிக சப்தம் எழுப்புகிறது அதனை கழட்ட உதவுங்கள் என அருணை பார்த்து ஆசையாய் கேட்டாள் அருணும் பேசிக் கொண்டே அவளின் பாதம் பற்றி கொலுசை கழட்டி மேசை மீது வைத்தான்.