அங்கு இருந்த ஒவ்வொரு ஆண்களையும் பார்த்து என் கனவர் கூச்சப்பட்டார், காரணம் ஒரு வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, ஷேவ் செய்யாத முகம், பரட்டை தலை, என் அழகுக்கும் அவருக்கும் கொஞ்சமும் ஒத்துப்போகவில்லை,
அதே நேரம் அங்கிருந்த அனைத்து ஆண்களும், பேன்ட் சர்ட், ஷூ என்றிருந்தனர்..
என் கனவரின் தயக்கத்தைப்புரிந்த நான் அவர் கையை பிடித்துக்கொன்டு நடந்தேன்..
கேன்டீனில் சாப்பிட்டோம்..
என் உடன் இன்டெர்வியூ வந்த அந்தப்பெண்ணின் பெயர் சுபானா, வயது 23, திருமணம் ஆகவில்லை, என்னைவிட நிறம் மற்றும் அழகு கம்மி தான், ஆனால்
காஸ்ட்லி புடவை, காஸ்ட்லி ஹேன்ட் பேக், காஸ்ட்லி செருப்பு, பெரிய செல் போன் என்றிருந்தாள்..
அங்கிருந்த அனைவரும் செல்போன் வைத்திருந்தனர்..
சாப்பிட்டுவிட்டு ஒரு மரத்தடியில் உட்கார்ந்தோம்..
ரோகினி, அவங்க வச்சுருக்கும் செல் எவ்வளவு வரும் என்று கேட்டார்..
அதெல்லாம் 10000 ரூபாய்க்கு மேல இருக்கும்ங்க என்றேன்..
சரி இன்னைக்கு உனக்கு வேலை கிடைச்ச உடன் உனக்கும் அப்படி ஒரு செல், நல்லா அழகா 4 சேலை வாங்கனும் என்றார்..
சரி பார்க்கலாம் என்றேன்..
மணி 2..
மீன்டும் இன்டெர்வியு ஆரம்பித்தது..
இப்பொழுது கரஸ்பான்டன்ட் மற்றும் 6 ஆசிரியர்கள் உள்ளே இருந்தனர்..
அவர்கள் முன் என்னை பாடம் எடுக்கச்சொன்னார்கள்..
நான் எடுத்தேன், அதில் அவர்கள் கேள்வியும் கேட்டனர்..
15 நிமிடம் கழித்து என்னை வெளியே வெய்ட் பன்ன சொன்னார்கள்..
மணி 4:30, நாங்க 8 பேரும் பாடம் எடுத்து முடித்தோம்..
மணி மாலை 4:30, நாங்கள் 8 பேரும் வெளியே இருந்தோம்,
ஒரு ஆசிரியர் வெளியே வந்தவர் அதில் 6 பேரை வீட்டிற்கு செல்லுங்கள் என்றார்..
நானும் ஒரு ஆணும் மட்டும் இருந்தோம்..
அவரை உள்ளே அழைத்தனர்..
10 நிமிடத்தில் வெளியே வந்தார்..
முகம் சந்தோசமாக இருந்தது..
அவன் வெளியே நடந்தான்.. அடுத்து என்னை உள்ளே கூப்பிட்டனர்..
“மே இ கம் இன் சார்”
வாங்க மேடம், வாங்க, டேக் யுவர் சீட்” என்றார் ஒருவர்..
“கம்மிங்க் வெட்னஸ்டே ஜாய்ன் பன்னுமா” கரஸ்பான்டன்ட் சொன்னார்..
அத்துடன் என் அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டரையும் கையில் கொடுத்தனர், அதில் என் சம்பளம் 13500 என்றிருந்தது..
நான் அதை வாங்கிக்கொன்டு வெளியே வந்தேன்..
மணி 4:50..
கனவரிடம் அதை காண்பித்தேன்..
“ஒன்னும் புரியல டீ என்றார்..
அய்யோ, எனக்கு மாசம் 13500 ரூபாய் சம்பளம்ங்க என்றேன்..
கை குடு டீ என்றவர், அதை மடித்து என் ஹேன்ட் பேக்கில் வைத்தார்..
இருவரும் நடந்து வெளியே வந்தோம்..
அங்கு எனக்கு முன் வேலையில் சேர்ந்தவர் நின்றார்..
எங்களைப்பார்த்த உடன் என் அருகே வந்தார்..
ஹாய் மேம் ஆர் யு அப்பாய்ன்டட் என்றார்..
எஸ் சார் என்றேன்..
கங்க்ராட்ஸ் என்று எனக்கு கை குடுத்தார்..
என் கனவருக்கும் கை குடுத்தார்..
மை நேம் இஸ் ராஜேஷ், MBA கிராஜுவேட் என்றார்..
ஆம் ரோகினி MCOM, MBA என்றேன்..
ஒகே மேம், லெட்ஸ் மீட் ஆன் வெட்னஸ்டே என்று தன் பைக்கில் கிழம்பினார்..
நாங்கள் பஸ்சில் ஏறினோம்..
அந்தக்கல்லூரியில் இருந்து எங்கள் வீட்டுக்கு வர 1 மணி நேரம் ஆகும்,
2 பஸ் மாறி வர வேணும், என் கனவர் என் பக்கத்தில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்..
ரோகினி, சூப்பரா இங்கிலிஷ் பேசுற டீ என்றார்..
நான் சிரித்தேன்..
முதலில் பாஸ்கர கூட்டிட்டு போய் ஒரு செல் வாங்கனும், அப்புரம், 4 புடவை என்றார்..
ரொம்ப காசுக்கு வாங்காதீங்க, என்றேன்..
இல்ல ரோகினி 13500 ரூபாய் சம்பளம், அதனால நல்ல போனா வாங்கனும் என்றார்..
மணி சரியாக 6:30, வீட்டுக்கு வந்தோம், அவர் பாஸ்கரை பார்க்க சென்றார்..
பாஸ்கர் அவர் வேலை பார்க்கும் கடை முதலாளியின் மகன், 20 வயது, கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கிறான்..
இவர் முதலில் முதலாளி வீட்டில் தான் எடுபிடி வேலையில் சேர்ந்தார், அப்பொழுது இவர் வயது 12, பாஸ்கர் வயது 3, இவர் தான் அவனை தினமும் பள்ளிக்கூடம் கூட்டிட்டு போவார், கூட்டி வருவார், 20 வயதாகும் போது தான் கடைக்கு வேலைக்கு வந்தார்..
இவர் அங்கு வேலைக்கு சேர்ந்து 17 வருடம் ஆனது..