அந்த மிருகம் அவளை நோக்கி முழு மூச்சுடன் பாய்ந்தது. ராதா கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
அப்போது……….எங்கிருந்தோ வந்த அருண் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த மிருகத்திற்கு நேரே பிடித்துக் கொண்டு ராதாவுக்கு குறுக்கே பாய்ந்தான். அவன் பாயவும் அந்த மிருகம் அந்தக் கத்தியின் மேல் பாயவும் சரியாக இருந்தது. அருண் தாமதிக்காமல் அந்த மிருகத்தைக் கிழித்தான்.
வித்தியாசமான சத்தத்தை கேட்ட ராதா விழித்துப்பார்த்தாள். அருண் நிற்பதையும் அந்த மிருகம் கீ*ழே விழுந்து கிடப்பதையும் பார்த்த ராதா நடந்ததை புரிந்து கொண்டாள்.
‘‘அம்மா உனக்கு எதுவும் ஆகலையே”
‘‘டேய் . அருண் உனக்கு ஆயிருந்தா….ஏன்டா இப்டி பண்ண??” என்று அவள் கேட்டு முடிப்பதற்குள்,
‘‘நீ தப்பிச்சு இருப்ப இல்லம்மா” என்றான் பாவமாக!!!
ராதாவிற்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்து போனது. அதை வெளிக்காட்டாமல் எதுவும் பேசாமல் வீட்டை நோக்கி நடந்தாள். அருணும் அவளைத் தொடர்ந்தான்..