ஏனோ வருண் சரஸ்வதியை விட்டு முற்றிலும் விலகி போனான். சரஸ்வதி 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தாள் அரசு கல்லூரியில் ஆங்கிலத்துறையில் சேர்ந்தாள். ஆவலுடன் 12ம் வகுப்பு படித்த மாணவர்கள் பலர் வருணின் கல்லூரியில் சேர்ந்தனர். வருண் தனது பள்ளி காலத்தில் நன்னடத்தை மற்றும் நல்ல பயிலும் மாணவன் என்பதாலும் குடியரசு சுந்தந்திர தின அனுவகுப்புகள் ஜூடோ என்று கூடுதல் கல்விசார் விஷயங்களில் பெயர் பதித்தவனாக இருந்ததால் அவன் தனது இளைய மாணவர்களுக்கு மத்தியில் நன்கு அறிந்தவனாக இருந்தான். இப்படியிருக்க கலோரி இரண்டாம் ஆண்டின் ஒரு நாள் இளைய மாணவன் வந்து வருணிடம் ” அண்ணா உங்ககிட்ட பேசலாமா” என்று கேட்டான். வருண் “சொல்லு தம்பி” என்றான். ” உங்க கிட்ட எப்படி சொல்லுறது தெரியல அண்ணா நீங்க தப்ப எடுத்துக்க கூடாது” என்றான். வருண் “அதெல்லாம் ஒன்றும் இல்லை ஏதுவாக இருந்தாலும் தைரியமாக, தயக்கப்படாமல் சொல்லலாம்” என்றான்.
“அண்ணா சரஸ்வதியை பற்றி உங்களிடம்”.. என்று தொண்டங்கினான்
அவர்கள் உரையாடல் இவ்வாறு நடந்தது
சிவா (இளைய மாணவன்) : “அண்ணா நீங்க பள்ளியில் அனைவர் மத்தியில் மிகவும் மரியாதைக்குரியவர் உங்களை தெரியாத பள்ளி மாணவனே கிடையாது. அதனால் தான் உங்கள் காதல் விஷயம் கூட பள்ளிக்கே தெரிந்த ஒன்று. சரஸ்வதி, அவள் படித்த பள்ளியை விட்டு நம் பள்ளியில் சேர்ந்த விஷயம் கூட உங்களுக்கு தெரியும் என்று நினைகிறேன். அண்ணா சரஸ்வதி எந்த காரணங்களுக்காக பள்ளி மாறினால் என்று உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான்.
வருண் : எனக்கும் சரஸ்வதிக்கும் அந்த அளவுக்கு நெருக்கம் கிடையாது நான் தான் அவளை ஒருதலையாக காதலித்தேன் அவள் என்னை விரும்புவதாக எனக்கு தெரியாதுடா.
சிவா: அண்ணா அவள் பள்ளி காலத்தில் ஏதோ ஒரு தருணத்தில் யாருடனோ பழக்கம் ஏற்பட்டு கர்ப்பம் அனால். இந்த விஷயம் அவள் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்து அவளை பள்ளியில் இருந்து நிக்கி விட்டது. ஆரம்பத்தில் இதை மறைத்து தான் நம் பள்ளியில் சேர்ந்தாள் அனால் அவளோடு படித்த சகா மாணவர்கள் சொல்லி தான் இந்த விஷயம் வெளியே வந்தது என்றான்.
வருணின் இதயத்தில் ஈட்டி இறங்கியது கண்கள் கலங்கின அவன் உரையாடலை இந்த இடத்திலேயே விட்டு வெளியேறினான்.
மாணவர் விடுதியை அடைந்த வருண் உறங்க சென்று விட்டான்.2 நாட்கள் அறையை விட்டு வெளியே வராமல் இருந்த வருணை அவனது நண்பர்கள் தேற்றி வகுப்புக்கு அழைத்து வந்தனர். மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த வருணின் வாழக்கையில் இந்த நிகழ்வு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தனிமையில் பொழுதுகளை கழிக்க மிகுந்த ஆர்வம் காட்டினான் வருண். கல்லூரி விட்டால் விடுதி விடுதி விட்டால் கல்லூரி. சந்தோஷத்தை மறந்தவன் போல வாழ்ந்த வருணை அவன் நண்பர்கள் கால் பந்து விளையாட்டில் ஈடு படுத்தினர். வருணின் நல்ல குணங்களில் ஒன்று தனக்கு இட்ட பணியை தன் பணியாக கருதி முழு மூச்சாய் அதில் ஈடுபட்டு அதை வெற்றியின் சிகரமாக முத்திரை பதிப்பதில் வல்லவன். கால் பந்தாட்டத்தில் அவனால் முழு மனதாய் விளையாட முடியாமல் தன் அணியின் தோல்விக்கு அவனே கரணம் ஆனான். வருணின் வாழ்க்கையில் இன்னொரு ஆண்டு கடந்தது. வருணுக்கு நிறைய நண்பர்கள் பெண் தோழிகளும் உண்டு, சரஸ்வதியை விரும்பி ஏமாற்றம் அடைந்தது அவனை ஒரு தனி உலகத்தில் தள்ளியது. அதிலிருந்து மீண்டு வர நினைத்த வருண் தன தந்தையை பொல ராணுவத்தில் பணியாற்ற முடிவு செய்தான்.அதற்காக தன் மனதையும் உடலையும் தயார் படுத்தி வந்தான். கால் பந்து போட்டியில் தன்னால் தோல்வியடைந்த தனது அணிக்கு மீண்டும் வெற்றியை தேடி தர வேண்டும் என்றும் முடிவு செய்து படிப்பிலும் விளையாட்டுகளிலும் உடற்பயிற்சிகளில் கவனத்தை செலுத்த தொடங்கினான். இப்படி மீண்டு வந்து கொண்டு இருந்த வருணின் வாழ்க்கையை புரட்டி போட்டது அவன் தந்தையின் மரணம். எப்பொழுதும் ஒரு புன்னைகையுடன் காணப்பட்ட வருண் இப்போது அனைத்தையும் இழந்தவன் போல் ஆனான். குடும்ப சுமை அவன் தோள்களில் இருக்க சரஸ்வதி கொடுத்த வலி காற்றில் கரைந்தது. வருணின் குணத்தையும் அவன் நடவடிக்கைகளை இன்னும் மாற்றி அமைத்தது இந்த நிகழ்வுகள். இந்த நிலையில் அவன் பெண் தோழிகளில் ஒருத்தி அவனின் சோகத்துக்கு மருந்தாய் மாறினால். “லாவண்யா” அவனை மீண்டும் பேச வைத்தால் சிரிக்க வைத்தால் அவனை இயல்பு வாழ்க்கைக்கு வரவழைத்தாள். வருண் லாவண்யாவை ஒரு நல்ல தோழியாய் தன் தாயை போல பாவிக்க தொண்டங்கினான். ஒரு நாள் வருணின் டைரி லாவண்யாவின் கையில் சிக்கியது, வருண் ஸரஸ்வதியை எந்த அளவுக்கு விரும்பினான் என்று புரிந்த அவளுக்கு வருணின் சோகம் புரிந்தது. வருண் மீண்டு தனுந்து இன்ஜினியரிங் படிப்பை நல்ல படியாக முடிக்க அவளும் ஒரு கரணம் ஆனால்.
லாவண்யாவை தனது நண்பன் சுரேஷ் காதலிப்பது வருணுக்கு தெரிய வருண் லாவண்யாவையும் தவிர்க்க ஆரம்பித்தான். ஆனால் லாவண்யா வருணை ஒரு பொழுதும் வெறுக்க வில்லை அவள் நட்புக்கு நல்ல உதாரணமாய் வருணுக்கு துணை நின்றாள். கல்லூரியின் 3ம் ஆண்டு பிற்பகுதியில் மீண்டும் கால் பந்து போட்டிகள் நடந்தன அயராது பயிற்சியில் ஈடுபட்டு தண்ணனை தானே நிறுபிக்க முயற்சித்த வருண் தன் அணி வெற்றி வித்திட்டு கோப்பையை வெள்ள தன் சுயமரியாதையை மீட்டெடுத்தான். 4ம் ஆண்டு ஜாகீர் என்னும் நண்பன் கிடைக்க தான் இதுவரை கோட்டை விட்ட படிப்பையும் மீட்டு அணைத்து பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றான். மேற்படிப்பிற்கு முயற்சி மேற்கொண்ட வருணுக்கு ம்ப படிக்கும் வாய்ப்பு வந்தது ஆனால் சில தேவை இல்லாத தலையீடுகளால் அது கிட்டாமல் போக ஒரு சாதாரண ஒரு மின்வலை நிர்வாணத்தில் சிறிதாய் ஒரு வேலை வாய்ப்பு பெற்று அதில் சேர்ந்தான்.
சுரேஷ் லாவண்யாவை ஒருதலையாக தான் காதலித்தான் என்று தெரிந்துகொண்ட வருண் வேளையில் நல்ல நிலையில் வந்ததும் தன குடும்பத்தோடு சென்று லாவண்யாவை பெண் கேட்க செல்ல வேண்டும் என்று தீர்மானித்தான். வேளையில் நல்ல திறமைசாலி என்றும் பெயர் வாங்கிய வருண் அந்நிறுவனத்தின் வெவேறு கிளைகளில் கால் பதித்து முத்திரை பதித்தான். இங்கு லாவண்யாவுக்கு வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு வந்தது அவள் பறந்து சென்றால். மேற்படிப்பு முடிந்து வேலைவாய்ப்பும் கிடைக்கப்பெற்ற லாவண்யா அயல்நாட்டிலியே குடியேறினாள் லாவண்யா. வருணுக்கு லாவண்யாவும் எட்டா கனியாக தன காதலை தன் இதயத்திலே போட்டு புதைத்தான்.
எங்கும் தோல்வி எதில் தோல்வி வருண் மனம் உடைந்து 5து நிமிடம் சிரித்தாள் 5து மணிநேரம் அழ வைத்து வேடிக்கை பார்த்தது வாழ்கை. 4 -5 வருடங்கள் சுழன்றோடிற்று
வருண் தனது தங்கையின் திருமணத்திற்காக அயராது பாடுபட்டான் இந்நிலையில் தான் அவனுக்கு பெங்களுருவில் உள்ள நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்து அவன் பெங்களூரு சென்றான்.
குறுந்செய்தி படித்த வருணுக்கு அனைத்தும் கண்முன் வந்து செல்ல. நீண்ட இடைவெளிக்கு பின் பதில் கொடுத்தான் ” நானும் ஏதோ வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
பெருசா ஒன்னும் இல்லைனால் ஏதோ பிழைப்பு ஓடிக்கொண்டு இருக்கிறது.”
5து நிமிடத்திற்கு பின் பதில் கிடைத்தது “ஏதுவாக இருந்தாலும் என்னை விட உன் வழக்கை நல்லா தான் இருக்கும்”
வருண்: நான் இன்று இரவு ஊருக்கு வர ஆயத்தமாகிக்கொண்டு இருக்கிறேன். நான் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். பேருந்தில் அமர்ந்த பின் உனக்கு மீண்டும் பதில் அளிக்கிறேன்”
சரஸ்வதி: ” சரி வருண்”
ஒரு மணி நேரத்தில் பேருந்தில் ஏறி அமர்ந்த வருண் அலைபேசியை அவளோடு பார்த்து கொண்டிருக்க
சரஸ்வதி: “கிளம்பியாச்சா”
வருண்: “இப்பொழுதான் பேருந்து கிடைத்தது அமர்ந்து உள்ளேன். நான் மதியம் ஊரை வந்தடைவேன் உன்னை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா”
சரஸ்வதி: இந்நிலையில் நீ வந்து என்னை சந்திப்பது உன் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளி விடும் வருண் நான் நீ நினைப்பது போல் இவரு சாதாரணமான குடும்ப வாழக்கையில் இல்லை. இதை பற்றி பேசுவதைக்கூட தவிர்க்க ஆசை படுகிறேன் தயவு செய்து ஏன் குடும்ப வழக்கை பற்றி மட்டும் பேச வேண்டாம் என்றால்.
வருண்: என்ன ஆச்சு சரஸ்வதி நான் பள்ளி பருவத்தில் பார்த்த சரஸ்வதி இப்படி இல்லையே என்ன ஆயிற்று உனக்கு. என்னை ஒரு நல்ல நண்பனாய் நினைத்தால் என்னிடம் நீ தாராளமாக பகிரலாம்.
சரஸ்வதி: நீ நலமாய் இருக்கிறாய் அது போதும். உனக்கு திருமணம் ஆயிற்றா?
வருண்: இன்னும் இல்லை முதலில் ஏன் தங்கையின் திருமணம் பிறகு தான் என்னுடைய திருமணம்
சரஸ்வதி: பள்ளி நாட்களை நினைத்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது. உன்னை போல ஒருவனை தவற விட்டேன் என்ன செய்ய ஏன் விதி
வருண்: நான் மறுபடியும் கேட்கிறேன் உனக்கு என்ன ஆயிற்று, ஏன் இப்படி உன் விதியை சபிக்கிறாய்.
சரஸ்வதி: எனக்கு ஒன்று அர்த்தம் ஆகவில்லை நீயும் நானும் எப்போது ஒருவரை ஒருவர் தவிர்க்க தொடங்கினோம்?