வருண்: 12ம் வகுப்பு முடிந்து கலோரியில் சேர்ந்த எனக்கு புது இடம் புது நட்பு என்று வழக்கை திசை மாரி போச்சு. (ஒன்றும் தெரியாதவன் போல்) உன்னுடன் தோலை தொடர்பு இல்லாமல் போச்சு பலமுறை உன் வீட்டு தொலைபேசிக்கு அழைக்க தோன்றும் அனால் நண்பர்கள் உடன் இருக்க இயலாமல் போச்சு. நீ அடிக்கடி சொல்லுவாய் இது வாலிப வயதின் ஈர்ப்பு உண்மையான காதல் அல்ல என்று. ஒரு நேரம் எனக்கும் அப்படி தா இருக்குமோ என்று தோன்றும் பின் நாளடைவில் நானாக விலக சூழ்நிலைகள் கரணம் ஆயிற்று. ஏன் தந்தையின் மரணம் எல்லாம் சேர்த்து என்னை தனிமை படுத்தி விட்டது.
சரஸ்வதி : உன் தந்தையின் மரணம் குறித்த செய்தி எனக்கும் கிடைத்தது வர இயலவில்லை ஏன் தந்தையும் தேய் வருடம் தான் இறந்தார் உனக்கு தெரியுமா ?
வருண் : இல்லை, எனக்கு அது தெரியாது நான் இருந்த நிலையில் யாரும் எனக்கு சொல்லவில்லை போலிருக்கு. உன்னுடன் நம் பள்ளியில் படித்த சிவா உனக்கு ஞாபகம் இருக்க அவன் கூட எனக்கு எதுவும் சொல்ல வில்லை.
சிறிது நேரத்திற்கு சரஸ்வதியிடம் இருந்து பதில் வர வில்லை. இங்கோ பேருந்து புறப்பட்டு பெங்களூரு எல்லை தாண்டி ஓசூருக்குள் நுழைந்தது. இரவு சிற்றுண்டி விடுதியில் இறங்கி குளிர் பானம் அருந்திய வருண் மீண்டும் பேருந்தில் ஏறி தனது இருக்கையில் சாய்ந்தான்.. சரஸ்வதியின் பதில் இன்னும் கிடைக்க பெறாமல் உறக்கம் கதவை தட்ட.. அயர்ந்து கண்ணுறங்க ஆரம்பித்தான் வருண்..