சரஸ்வதி: நானும் அன்று உன்காதலை ஏற்று இருந்தால் இன்று இப்படி புலம்பநேரிட்டிருக்காது. வருண், என்ன பற்றி யார் உன்னிடம் என்ன சொன்னார்கள்?
வருண்: அதுவா.. உன்னிடம் எப்படி சொல்ல கேட்டால் உன் மாது காயப்படும்
சரஸ்வதி: செத்த பாம்பை யார் அடித்தால் என்ன நீயும் ஒரு கை பாரேன்
வருண்: நீ இப்படி சொல்லியபின் நான் இதை பற்றி சொன்னால் நீ இன்னும் வருத்தப்படுவாய்.
சரஸ்வதி: பரவாயில்லை வருண் சொல்லு
வருண்: என்னை எதுவும் தப்ப நினைக்கமாட்டேனு சொல்லு நான் சொல்லுறேன்
சரஸ்வதி: சரி சொல்ல மாட்டேன்
வருண்: நான் கல்லூரி 2ம் ஆண்டு படிக்கும் பொது சிவப்ரசாத் என்னிடம் வந்து நீங்கள் விலகி இருப்பது நன்று அவள் உங்களுக்கு ஏற்றவை அல்ல என்று சொன்னான். ஏன் என்று கேட்டதற்கு நீ 11ம் வகுப்பு படிக்கும் பொழுது ஒருவன் உன்னை கர்பமாக்கினான் அது பெரிய ப்ரளயமாக நீ எங்கள் பள்ளியில் சேர்ந்ததாக சொன்னான்
சரஸ்வதி: அது உண்மையே. என்னை ஒருவன் பலாத்காரம் செய்து அதனால் நான் கர்பம் ஆனது உண்மையே
வருண்: (மனதினுள் ஆதி மேல் ஆதி வாங்கியதால் இது ஒரு வலையாக தெரியல போல இறுக்கிய) இதை பற்றி பேசி உன்னை காயப்படுத்த வேண்டாம் என்று தான் நினைத்தேன்.நீ மிகவும் கட்டுக்கோப்பாகவும் முதிர்ந்தவளாகவும் எதையும் கையாளுவை, இந்த விஷயம் எப்படி நேரிட்டது.
சரஸ்வதி: அது என் வாழ்க்கையை புரட்டி போட்ட முதல் விஷயம்.. எங்கள் குடும்ப மருத்துவரின் மகன் ரமேஷ், பலமுறை அவங்க வீட்டுக்கு பொய் இருக்கேன் ஆனா அன்று ஒரு நாள் நான் அவங்க வீட்டுக்கு போனப்ப அவன் மட்டுமே வீட்டில் இருந்தான். தனியாக வநத எனக்கு மில்க் ஷேக் கொடுத்தான் அவ்வளவு தான் எனக்கு தெரியும். நான் மயங்கி இருப்பேன் போல நான் விழிக்கும் பொழுது ரமேஷின் அம்மா என்னருகில் இருந்தார்கள். என் ஆடைகள் சற்று கசங்கி இருந்தன உடல் முழுதும் கசக்கி போட்டாற்போல் வலி. எனக்கு என்ன ஆச்சுன்னு அவங்களை கேட்டேன். நீ மயங்கி விழுந்ததாக ரமேஷ் சொன்னான் நான் உன்னை இங்கு கொண்டு வந்து படுக்க வைத்தேன் என்று சொன்னார்கள். நானும் அவர்கள் கூறியதை நம்பி எனக்கு தான் மயக்கம் வந்து இருக்கும் என்று அதா உதாசீனப்படுத்தி வீட்டுக்கு வந்து விட்டேன். பிறகு மாதவிடாய் தவற நான் கர்பமானது புரிந்தது. நான் ரமேஷின் அம்மாவை சந்தேகப்பட்டு கேட்க அவர்கள் என் காலில் விழுந்து கதறி அவர்கள் மகன் சித்த தவறை மன்னிக்க சொன்னார்கள். என் கற்பதையும் அந்த அங்கிள் தான் கலைத்தார் அனால் இந்த விஷயம் அக்கம் பக்கம் என்று அனைவருக்கும் தெரியவர ஏதும் செய்யமுடியாமல் ரமேஷின் குடும்பம் ஊரைவிட்டு வெளியேறியது. நான் எந்த தவறும் செய்ய வில்லை அதனால் எவ்வித பயமும் இல்லாமல் கல்வியை தொடர பள்ளி மாறி உங்கள் பள்ளியில் சேர்ந்தேன் அங்கும் இவ்விஷயம் எப்படியோ பரவியது. சிவா கூறியது உண்மை தான் நான் உனக்கு தகுதி இல்லாதவளை ஆனேன் நானே உன்னிடமிருந்து விலகினேன். சிவாவும் என்னை காதலித்தான் அனால் என்னை பற்றி தெரிந்தும் நீ என் பரமாத்மா போல் ஆகா விரும்புகிறாயா யாரும் எனக்கு வழக்கை பிட்சை போடா தேவை இல்லைனு அவனை ஒதுக்கினேன். ஆதலால் தான் என்னவோ உன்னிடம் அவன் அப்படி கூறி இருக்க வேண்டும்.
வருண்:அவன் கூறுகையில் நான் அவனை நம்பவில்லை ஆனால் உங்கள் தெருவில் வசிக்கும் சகமானவியும் அதையே கூற எனக்கு வேறு வழி தெரியவில்லை நம்பினேன் மனசு உடைந்து கல்லூரி வழக்கை படிப்பு என்று அனைத்தையும் நாசம் செய்து கொண்டேன். நான் மட்டும் தயங்காமல் உன்னிடம் என் காதலை சொல்லி அதில் வென்று இருந்தால் நாம் இருவரும் இன்று இப்படி பேசி பேசி வறுத்த பட வேண்டி இருந்து இருக்காது.
வருண்: எல்லாம் கர்மவினை பலன் என்று அதை மறந்து இனியாவது வழக்கை நல்ல படியாக வாழ கடவுளை நம்பி வழிநடந்து செல்ல வேண்டியது தான்.
சரஸ்வதி: கர்மா என்னும் சொல் மீது உனக்கும் நம்பிக்கை இருக்கிறதா
வருண்: வழக்கை கொடுத்த அடி பல விஷயங்களை நம்ப வைத்து இருக்கிறது. 8 வருடங்களுக்கு பிறகு நீயும் நானும் சந்தித்ததே ஒரு விதத்தில் ஏதோ ஒன்றை நடத்தவே என்று நான் நினைக்கிறன்.
சரஸ்வதி: அப்படியும் இருக்கலாம் எனக்கு ஒரு னால உத்தியோகம் கிடைத்து நான் இந்த வாழ்க்கையை விட்டு விலகி எனக்கென்று வாழ நீ தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று இருக்கிறதோ?
வருண்: இருக்கலாம்..
வருணுக்கும் சரஸ்வதிக்கும் மீண்டும் நட்பு மலர்ந்தது . சரஸ்வதி எந்த நேரமும் நரசிம்மன் தனக்கு செய்த ஒரு ஒரு விஷயத்தையும் கூறுவாள் அவளை சமாதான படுத்துவதே வேலையாய் இருந்து வந்தான் வருண். ஒருபக்கம் அவளுக்கு வேலை கிடைக்க முயற்சிகளும் நடந்து கொண்டு இருந்தன. 2 -3 மாதங்கள் பேச்சுவார்த்தைகளின் இடையில் இருவருக்கும் காதல் மீண்டும் மலர்ந்தது. சரஸ்வதி தன் அதிர்ஷ்டத்தை நினைத்து குமுறினால். சரஸ்வதி தஞ்சாவூர் ஓவியம் வரைவதில் காய் தேர்ந்தவள். வழக்கை தந்த அடி அவள் கைககளை நடுங்க செய்திருந்தன. வருண் அவளுக்கு ஒரு கோரிக்கை வைத்தான் அது என்ன வென்றால் தந்து இல்லத்தின் சுவற்றை அலங்கரிக்க ஒரு நல்ல தஞ்சாவூர் ஓவியம் வேண்டும் அதை நீதான் செய்து தர வேண்டும் என்று. சரஸ்வதி அன்று முதல் தன்னை அப்பணியில் ஆழ்த்தி தனது பழைய ஆற்றல் மற்றும் திறனை வெளிப்படுத்தி ஏதோ ஒரு வகையில்indha துயரத்திலிருந்து விடு பட்டு கொண்டு இருந்தால். ஓவியம் நாகு மெருகேறி கொண்டு இருந்தது.
ஆகஸ்ட் 15 விடுமுறை வர வருண் 4 நாட்களுக்கு திருச்சி வர ஆயத்தம் ஆகி கொண்டு இருந்தான். அனைவருக்காகவும் ஆந்திரா ஸ்பெஷல் புத்ரேக்குளூ (பேப்பர் ஸ்வீட்) வாங்கிக்கொண்டு திருச்சி புறப்பட்டான்.
வருண்: பேருந்தில் எறியாச்சு நான் நாளை காலை திருச்சியில் இருப்பேன் நாளை மதியம் உன்னை சந்திக்கலாம் என்று நினைக்கிறன், முடியுமா?
சரஸ்வதி: என்ன திடிரென்று ?
வருண்: அதெல்லாம் ஒன்றும் இல்லை 4 நாள் விடுமுறை அதான் சரி ஊருக்கு வந்து 2 மாசம் ஆச்சே எல்லாரையும் பார்க்கலாம்னு வரேன். உன்னையும் சந்திக்க முடியுமா? எங்கயாவது வெளிய போகலாமா டின்னர் சாப்பிட?
சரஸ்வதி: வேண்டாம் வருண் ரிஸ்க், நரசிம்மனுக்கு தெரிஞ்ச அவ்வளவு தான் என்கிட்ட பிரச்சனை பண்ண மாட்டான் உங்க வீட்ல ஏதாவது பிரச்சனை பண்ண போறான்.
வருண்:கூட்டுக்கிளி போல அடைஞ்சி கிடக்குற உன்னை எங்காவது வெளிய கூட்டிட்டு போகலாம்னு தோணுச்சு. சரி வாங்கி வநத ஸ்வீட் என்ன பண்ண?
சரஸ்வதி: ஸ்வீட் என வாழ்க்கைல இல்லாத ஒரு விஷயம், சாப்பிடணும் போல இருக்கு சரி வீட்டுக்கு வந்து கொடு.
வருண்: போன முறை வந்ததுக்கே காயத்திரி கோபபட்டாள் நான் இம்முறையும் அவளை குடிகொண்டு வந்தால் அவ்வளவு தான்.. நான் தனியா தான் வரணும்.
சரஸ்வதி: நீ தனியா வீட்டுக்கு வந்த பிரச்சனை தான் , அம்மா சாயங்காலம் வந்துடுவாங்க நீ சாயங்காலம் வா அம்மாவோட ஸ்டுடென்ட்டு னு சொல்லி சமாளிச்சிக்குறேன்.
வருண்: உன்னை தனியாக சந்திக்க முடியுமா?
சரஸ்வதி: என் வருண்?
வருண்: ஒன்றும் இல்லை சொன்னால் தப்பாக எடுத்து கொள்ள கூடாது. உன் நெத்தியில் முத்தமிட்டு கவலை படதேய உனக்கு நான் துணை இருக்கிறேன்னு சொல்லணும் போல தோணுது..
சரஸ்வதி: எனக்கும் உன் மடியில் உட்காரனும் உன் கைகளை இருக்க கட்டி பிடித்து கொள்ளணும் போல இருக்கு
வருண்: அதுக்கு தான் சொல்லுறேன் நாளைக்கு எங்காவது வெளியில் சந்திக்கலாம்
சரஸ்வதி: என்னால் உனக்கு எந்த ஆபத்தும் நேரிடக்கூடாது. உன் தங்கை எதற்காக பயப்படுகிறான் என்று எனக்கு புரிகிறது.. நான் வெளியில் சந்திக்க ஒரு பொழுதும் சம்மதிக்க மாட்டேன்.