தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
என்னூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி
பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைதபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை
யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை
அச்சம் களைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய்
ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய்
கண்ட திருகோலம் கனவாக மறைந்தால்
கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே”
படிக்க படிக்க வருண் கண்களில் கண்ணீர் தழும்ப எதிர் முனையில் சரஸ்வதியும் அழுது கொண்டு இருந்தால்.. சில நிமிடம் அமைதியாய் இருவரும் இருக்க சரஸ்வதியின் அலைபேசி ஒலித்தது
சரஸ்வதி: வருண் நரசிம்ஹன் தான் கூப்பிடுகிறான்.. பைல் அளிக்கவா?
வருண்: ஹ்ம்ம் நீ எடுத்து பேசு நான் காத்திருக்கிறேன்
சரஸ்வதி: என்ன வேணும் உனக்கு?
என்னது நாளைக்கா?
முடியாது நீ என் வீட்டிற்கு வர வேண்டிய அவசியம் இல்லை. நமக்குள் அப்படி ஒரு உறவே இல்லை?
நீ அடிக்கடி வந்து போக நான் உன் பொண்டாட்டியும் இல்லை இது உன் மாமியார் வீடும் இல்லை. நாளை விடுமுறை அம்மா வீட்டில் இருப்பார்கள் அக்கம் பக்கம் அனைவரும் இருப்பார்கள்.. முடியாது.. முடியவே முடியாது..
அழைப்பு துண்டிக்கப்பட
சரஸ்வதி: வருண் நாளைக்கு என்னை சந்திக்க நரசிம்ஹன் வீட்டுக்கு வருகிறானாம். முடியாது என்று குறியும் நான் வருகிறேன் அவ்வளவு தான் என்று துண்டித்து விட்டான்
வருண்: நாளை அவன் வருகிறான் அல்லவா நாளைமுதல் நீ உன் எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கு.. இன்று முதல் நீ என்னுடையவள் அவனை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி எதிர்கொள்
சரஸ்வதி:ம்ம்ம், நாளை நீ வரமுடியுமா?
வருண்: நாளைக்கு நான் என் சித்தியின் வீட்டிற்கு சென்றாக வேண்டும் வீனா எனக்காக காத்து இருப்பாள் அவளுக்காக பெங்களூருவிலிருந்து அவள் கேட்ட புத்தகங்களை வாங்கி வந்துள்ளேன் அதை அவளிடம் கொடுக்க வேண்டும்
சரஸ்வதி: நீயும் அவளும்.. நாளைக்கு ?
வருண்: அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.. அவளுக்கு திருமணம் ஆகி விட்டது, அவள் திருமணம் ஆகு வரை தான் எனக்கும் அவளுக்கும் அவள் திருமணத்திற்கு பிறகு என் விறல் நகம் கூட அவள் மீது பட்டது இல்லை. அவள் மேற்படிப்பு சம்பந்தமாக சில புத்தகங்கள் கேட்டு இருந்தால் அதை அவளிடம் ஒன்னு ஒப்படைத்துவிட்டு திரும்ப வந்து விடுவேன் . சாயங்காலம் சீக்கிரம் வந்து விட்டால் உனக்கு தெரிவிக்கிறேன் முடிந்தால் நேரில் வர முயற்சி செய்கிறேன்.
சரஸ்வதி: ம்ம்ம் நாளை அவனை எப்படி எதிர்கொள்வது என்று எனக்கு பரபரப்பாக உள்ளது.
வருண்: பயப்படாதே உன் மனதில் நான் இருக்கிறேன் உனக்கு துணையாக நான் இருக்கிறேன் என் மனைவி யாருக்கும் பயப்பட மாட்டாள்..
சரஸ்வதி: சரி.. உனக்கு களைப்பாக இருக்கும் நீ உறங்கு.. எனக்கு பசிப்பது போல இருக்கு நான் உன்ன செல்கின்றேன்.. வருண்.. உம்மா.. ஐ லவ் யு
வருண்: லவ் யு டூ.. குட் நைட்
சரஸ்வதியின் நிலைமை முள்ளில் விழுந்த சேலை போல இருந்தது அவள் சமாதானமாய் பிரிவதே நன்று என்று எண்ணினான் வருண் இந்த விஷயம் தன தாய்க்கு தெரிந்தால் சரஸ்வதியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அவள் நம்மை நம்பி வர போகிறவள். நம்மை நம்பி பெரிய போராட்டத்தை எதிர் கொண்டு வெற்றிகரமாக வெளி வரும் அவளுக்கு நம்மை திருமண செய்ய இயலாமல் போனால் அவள் வழக்கை என்னாகுமோ என்ற ஆகியதோடு வருண் உறங்க சென்றான்
நரசிம்மன் சரஸ்வதி வீட்டிற்கு வருவது அவளுடன் பலவந்தமாக நடந்து கொள்வது போன்றும் கனவுகள் வர உறக்கத்தை தொல்லைதான் வருண்..
மறுநாள் ஸ்ரீரங்கம் போவதா வேண்டாமா என்ற குழப்பதுடனே வருண் ஸ்ரீரங்கம் புறப்பட்டு சென்றான். நரசிம்மன் சரஸ்வதி கண் எதிரே வந்து வந்து செல்ல வருண் நிம்மதியை தொலைத்தவன் போல அவசர அவசரமாக தனது சித்தியின் வீட்டை அடைந்தான்.
வீணாவிடம் புத்தகங்களை ஒப்படைத்துவிட்டு அவளை கண்டும் காணாமலும் சித்தி அளித்த காபியை குடித்து விட்டு அவசர அவசரமாக வீடு திரும்பினான் வருண்
தன வீடு அறைக்கு விரைந்தவன் ஜன்னல் திறகைளை போட்டு அறையை இருட்டாக்கிவிட்டு கதவை தாளிட்டு தலையணையால் வையை பொத்தி சரஸ்வதியை நினைத்து குமுறி அழுதான் அவள் என்ன ஆனாலோ எதனாலோ என்று களாகியவரே உறங்கினான் உணவிற்கு கூட வெளியே வராதவனை அலைபேசி மலை 6 மணியளவில் எழுப்பியது. சரஸ்வதியாக இருக்குமோ என்று அவளோடு எழுந்தவனை திவாகரன் அழைக்க சற்று ஏமாற்றத்தை தந்தாலும் அழைப்பை ஏற்றான்
திவாகர்: மாமா சரக்கடிக்கலாமா?
வருண்: ஏன்டா நான் தான் அழைப்பை ஏற்று இருப்பேன் என்று அவ்வளவு நம்பிக்கையை?
திவாகர்: ஏன்டா வேற யாரவது எடுத்துட்டாங்களா?
வருண்: என்ன விஷயம் சொல்லு
திவாகர்: 6:30 உனக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வா..
வருண் அறையை விட்டு வெளியே வந்து அவசர அவசரமாக கிளம்பினான்
நளினி: சாப்பாட்டிற்கு கூட வராமல் இப்ப எங்க கெளம்பிட்டா?
வருண்: திவாகர் வீட்டிற்கு
நளினி: யார் அழைத்து இருக்கிறது டிவாக்கரா என்று கேட்டவாறு அலைபேசியை வாங்கி என்ன திவாகர் வீட்டிற்கு வராமல் இருக்கிறாய் உன் நண்பன் வந்து இருக்கிறேன் நீ வருவாய் என்று நினைத்தேன் அனால் நேற்று வாசல் வரை வந்தான் வீட்டிற்குள் வராமல் சென்று விட்டாய். இன்று அவனை உன் வீட்டிற்கு அழைக்கிறாய்?
திவாகர்: அம்மா, வேலை சுமை காரணமாக வர இயலவில்லை நாளை மறுநாள் கண்டிப்பாக வருகிறேன்.
நளினி: அவன் காலையில் சாப்பிட்டது ஸ்ரீரங்கத்தில் கூட சாப்பிடாமல் வந்து விட்டானாம் அவன் சித்தி திட்டி தீர்த்துட்டு இருக்க. உன்னோடன் வெளியே செல்கிறேன் என்றான் நீயாவது அவனை சாப்பிடவை
டிவ்கர்:கவலை வேண்டாம் அம்மா இன்னைக்கு ஹோட்டல்ல அவனை நல்ல கவனிச்சு அனுப்பிடறோம்
நளினி: இன்னும் நிறைய நண்பர்கள் வரங்களா?
திவாகர்: ரேம், ரமேஷ் மற்றும் விவேக் வராங்க அம்மா
நளினி: எல்லாரையும் விசாரிச்சதாக சொல் நான் பிறகு பேசுகிறேன்
வருண்: சரிம்மா நான் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு திவாகர் இல்லத்தை நோக்கி புறப்பட்டான்.
திவாகர் வீட்டிற்கு சென்று அங்கிருந்து சங்கம் ஹோட்டல் நோக்கி விரைந்தனர்
ஹோட்டலில் எல்லாரும் குடி சந்தோஷத்தை பகிர்ந்து மது அருந்தினர் அனால் வருண் மட்டும் உடலால் அங்கு இருந்தாலும் மனதளவில் அங்கு இல்லாமல் இருதான் விருந்து முடிந்து மீண்டும் வீடு திரும்பும் வரை தனது அலைபேசியை அவ்வப்பொழுது பார்த்து வந்தான் ஆனால் சரஸ்வதியிடம் இருந்து ஒரு அழைப்போ குறுந்செய்தியோ வராததை கண்டு மனம் நொந்து கொண்டான்.
வீட்டை அடைந்தான் வருண்
நளினி: வந்தாச்சா? சாப்பிட்டாயா?
வருண்:ஹ்ம்ம் முடிந்தது அம்மா நான் உறங்க செல்கிறேன் என்று அமைதியாக மீண்டும் படுக்கை அறைக்கு சென்று விட்டான்
காயத்ரி: அம்மா அண்ணா வந்த நாலிருந்து ஒரு வித்தியாசமாகவே இருக்கிறார் எனோ எனக்கு ஏதோ சரியாக படவில்லை
வருண்: அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி விட்டு உறங்க சென்று விட்டான்
உறங்க மனம் இல்லை என்றால் அருந்திய மது அவனை உறங்க செய்தது
காலை 6 மணிக்கு கண்விழித்த வருண் அலைபேசியை எடுத்து பார்க்க அதில் 16 குறுஞ்செய்தியும் ஒரு விடுபட்ட அழைப்பும் இருந்தது அனைத்துமே சரஸ்வதி அனுப்பியவையே. அவைகளை படிக்க பொறுமை இல்லாமல் சரஸ்வதிக்கு நேரடியாக அழைத்தான்