காதல் சடுகுடு – Part 5

Posted on

அருண் : அம்மா எனக்கு போர் அடிக்கும் மா.. பிளீஸ் என்ன விட்டுருங்க…

வினிதா : பெரியம்மா… நான் வேண்டும் என்றால் கூட வரேன். அருணிற்கு போர் அடிக்காமல் பார்த்துக்கிறேன்…

சந்தியா : (அருணையும், வினிதாவையும் ஏற்ற இரக்கமாக பார்த்துவிட்டு) ம்ம்… நானும் வரேன்..

அருண் : (சந்தியாவை முறைத்துக் கொண்டே) அப்போ நீயே போய்ட்டு வா.. நான் இங்கேயே இருந்துக்கிறேன்.

வினிதா : அப்போ நானும் வரல….

சந்தியா : (என்ன செய்வது என்று புரியாமல்) சரி நான் வரல… நீங்களே போய்ட்டு வாங்க…

அருண் : (சந்தியாவை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டு) வா வினிதா நாம்ப கிளம்பலாம்…. (என்று அனைவரும் ஆட்டோ பிடித்து கிளம்பினர்.

குமாரின் வீட்டினை அடைந்ததும், விஜி அவர்களை விட்டிற்கு முன்பு வந்து அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

விஜி : இது தான் உங்க பிள்ளைகலா கா….

மாலதி : இவன் என் பையன், இவ என் தங்கை பொன்னு.. இவ அப்பா இறந்ததுக்கு தான் இங்க வந்திருக்கிறோம்..

விஜி : ம்ம்.. அவர் சொன்னாரு கா.. சாரி லேட்டாதான் தகவல் கிடைத்தது. அதுனால எங்கலால வர முடியல…

மாலதி : பரவால விஜி..

விஜி : உங்களுக்கு இந்த ஒரு பையன் தானாகா?

மாலதி : இல்லபா.. பெரிய பொன்னும், சின்ன பொன்னும் இருக்காங்க.. சுகன்யாவிற்கு துணைக்கு விட்டு விட்டு வந்திருக்கிறேன். ஆமாம், குமார் அன்னா இல்லையா?

விஜி : கொஞ்சம் வேலையா வெளியே போய் இருக்கிறாங்க.. வர டைம் தான். நீங்க வருவீங்கனு போன் பண்ணி சொன்னாரு கா…

மாலதி : ம்ம்… உன் நம்பர் தெரியாது அதுனால தான், அன்னனுக்கு போன் பன்னினேன். சரி உன் பொன்னு எங்கே?

அருண் உடனே அவர்களை பார்த்தான்.

விஜி : இதோ, இங்க தான் இருந்தா தமிழ்…… தமிழ்…

அங்கிருந்து யாரும் வரவில்லை….

விஜி : தெரில கா.. இதோ இங்க பக்கத்தில் எங்காவது போயிருப்பா, வந்திடுவா…

மால்தி : உன் பையன்?

விஜி : விளையாட போயிருக்கிறான் கா… கொஞ்ச நேரத்தில் வந்திடுவான்.

அருண் : (குறுக்கிட்டு) அம்மா வெளியில் கொஞ்ச நேரம் போய்ட்டு வறோம்.

மாலதி : இப்போ தாண்டா வந்திருக்கிறோம்.. கொஞ்சம் வெய்ட் பண்ணு…

விஜி : அக்கா போர் அடிக்கும் போல.. கொஞ்சம் பிரியா வெளியே போய்ட்டு வரடும் கா.. இருங்க கொஞ்சம் காபி கலக்கீட்டு வந்து விடுகிறேன்..

அருண் : ஆண்டி, அதெல்லாம் வேண்டாம்…

விஜி : ஏன் டா… காபி குடிக்க மாட்டீயா?

அருண் : அப்படி எல்லாம் இல்லங்க ஆண்டி..

விஜி : அப்போ இருங்க வந்திடுறேன்.. அதுவரை டிவி பாருங்க (என்று டீவி ரிமோட் கொடுத்துவிட்டு செல்ல…)

டிவி ஆன் பண்ணாமல், மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.. விஜி காபியுடன், ஸ்வீட், காரம் எடுத்து வர சாப்பிட்டு விட்டு, அருணும், வினிதாவும் வெளியே உலாத்த சென்றனர். இங்கு மாலதியும், விஜயாவும் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்….

அருணும் வினிதாவும் வெளியே சென்று பேசிக் கொண்டு நடந்து கொண்டிருந்தனர். வினிதா விரைவாகவே அவனுடன் குளோஸ் ஆனாள். வாடா, போடா பேசும் அளவிற்கு. இருவரும் பேசிக் கொண்டு நடக்க, எதிர்புறமாக ஒரு பெண் கிராஸ் ஆக, அவளை பார்த்ததும் ஒரு நிமிடம் பேச்சு மூச்சில்லாமல், அவளையே பார்த்தான். அவளுடைய அழகில் மயங்கி, அவள் போகும் திசையை திரும்பி பார்த்தான். அவன் மனதில் ஏதோ ஒரு உணர்வு ஏற்பட இதயம் பட் பட் என துடிக்கும் சத்தம், அவளை தவிர ஒரு நொடி யாருமே கண்ணுக்கு தெரியவில்லை. அவள் அனிந்திருக்கும் கருநீல நிற சுடிதார் அவளுக்கு இன்னும் அழகு கூட்டியது. அவளுடைய நடைக்கு ஏற்ப அசைந்து ஆடும் நயனம். ஒரு நொடி பொழுது சொக்க வைத்தது. “அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்” என்ற பாடல் காதில் ரீங்காரமிட்டது. அவளையே பார்த்துக் கொண்டு அவள் கால் நடையை பார்க்க, கீழே கர்ச்சீப் கிடப்பதை பார்த்து, அவளை நோக்கி போக,

வினிதா : (இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவள்) டேய் எங்கடா போர…

அருண் : இருடீ அவ கர்ச்சீப் விட்டுட்டு போரா… (என்று சொல்லியவாரே வேகமாக அவளை நோக்கி செல்ல)

வினிதா : டேய்….. அதுவந்து……

அருண் : (வினிதா சொல்வதை காதில் கூட வாங்காமல், அவள் சொல்லி முடிப்பதற்குள்ளாக கர்ச்சீப்பை எடுத்து அந்த பெண்ணை பார்த்து) ஹாலோ….

பெண் : (அவள் திரும்பி பார்த்து அவனை மேலும் கீழும் பார்த்து) ம்ம்.. என்றவாறு தலையாட்ட..

அருண் : உங்க ஹான்ட் கீ… (என்று வலிவது போல சொல்ல)

பெண் : ஹலோ இது என்னுது இல்ல…

அருண் : (சிறிது முழித்து விட்டு) உங்ககிட்ட இருந்து தான் விழுந்தது.. சரியா பாருங்க…

பெண் : ஹலோ என்னுது இல்லைனு சொன்னா கேட்க மாட்டீங்களா….

அருண் : அது வந்து……

பெண் : ஸ்டுப்பீட்… யாராவது பென்ன பார்த்த உடனே இதுபோல, ஏதாவத தூக்கீட்டு வந்துவிடுவீங்க போல….. நான்சென்ஸ்…. (என்று சொல்லிக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள்)

அவள் இதுபோல பேசியும் அவனிற்கு எந்த கோபமும் வரவில்லை. இதுவே வேற ஏதாவது பெண்ணாக இருந்தால், இன்நேரம் நடப்பதே வேராக இருந்திருக்கும். அவளை பார்த்துக் கொண்டே, அந்த ஹான்ட் கீயை தூக்கி எறிந்துவிட்டு வினிதாவை நோக்கி வந்தான்…

வினிதா : (சிரித்துக் கொண்டே) டேய் என்ன போய் நோஸ்கட் வாங்கிட்டு வந்தையா….

அருண் : (தயங்கிய படி) அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல….

வினிதா : சும்மா பொய சொல்லாத டா… ரோட்டில் கிடக்கர ஏதோ ஒரு ஹாண்ட் கீய தெரியாத பெண்ணுக்கு கொடுத்தா சிரித்துக் கொண்டா போவா.. இப்படி தான் திட்டீட்டு போவா..

அருண் : அது ரோட்டிலயா கிடந்தது..

வினிதா : அததானே நான் சொல்ல வந்தேன்.. நீ ஏங்க காதுல வாங்கின… அந்த பெண்ண பார்த்துட்டு ஜொல்ல வழித்துக்கிட்டே தானே போன…

அருண் : அது.. அது… அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல….

வினிதா : டேய் பையங்கல பத்தி எனக்கு தெரியாதா என்ன? எப்பொழுதுமே, பக்கத்தில எப்படி இருந்தாலும் விட்டுட்டு, ஓடரத பிடிக்கரதே பொலப்பா திரிவீங்க….

அருண் : ஏய் நானெல்லாம் அப்படி இல்ல…

வினிதா : அது தான் நான் பார்த்தேன் ல… உன் கூட எவ்வளவு குளோசா பேசிக்கிட்டு இருக்கிறேன். என்ன விட்டுட்டு, எவனே தெரியல அவ பின்னாடி ஓடர….

124830cookie-checkகாதல் சடுகுடு – Part 5

Leave a Reply

Your email address will not be published.