காதல் சடுகுடு – Part 5

Posted on

அருண் : அதெல்லாம் ஒன்னும் இல்ல வினி….

வினிதா : சும்மா ஊத்தாத டா… உனக்காக, நீ கஷ்டப்பட கூடாதுனு உன் கூட வந்தா, நீ என்னனா, என்ன வெச்சுகிட்டே அவளை இப்படி ஜொல்லு விடர..

அருண் : (லேசாக அவளை அனைத்துக் கொண்டு) அப்படி எல்லாம் இல்ல விஜி… சாரி மா…. நீ என் கியூட் ஓகே வா…

வினிதா : ஆமாம் டா… அவ இல்லைனதும் என்கிட்ட வந்து கொஞ்சரையா….

அருண் : ஐயோ…. நீயும் ஐஸ் போலதானா… உன்னபோல தான் அவளும் என்ன வம்பிழுத்துக்கிட்டே இருப்பா…. பிளீஸ் மா… என் கியூட்டில்ல….

பின் இருவரும் ஜாலியாக சிறிது நேரம் பேசிக் கொண்டு, இருட்டானதும், குமாரின் வீட்டிற்கு சென்றனர்.. போகும் போது,

அருண் : போனதும் முதல் வேலையா அம்மாவ கூப்பிட்டு கொண்டு வீட்டிற்கு போகனும்..

வினிதா : டேய் சாப்பிடர டைம் ஆச்சு டா.. சாப்பிடாம அனுப்ப மாட்டாங்க..

அருண் : வினி அதெல்லாம் தெரியாது, சாப்பாடெல்லாம் வேண்டாம், உடனே கிளம்பனும் நு சொல்லீட்டு கிளம்பலாம். அதற்கு நீ தான் சப்போர்ட் பண்ணனும் சரியா.. என்று சொல்லிக் கொண்டே வீட்டை அடைந்தனர்…..

வீட்டிற்குள் சென்றதும், ஒரு அங்கில் அவர்களை சந்தோஷமாக அழைத்தார்.. அருண் அவரை பார்த்து விழிக்க..

குமார் : என்ன டா… அடையாளம் தெரியலையா.. நான் தான் உன் அப்பா பிரெண்ட் குமார் டா…

அருண் : (சிறிது வழிந்தவனாக) அங்கிள்…

குமார் : (சிரித்துக் கொண்டு) ம்ம்… வாங்க வந்து உட்காருங்க…

அருண் : அங்கில் அம்மா எங்க?

குமார் : அம்மா உள்ள இருக்கிறார்கள்.. ஏன் என்கூட பேச மாட்டீயா?

அருண் : அப்படியெல்லாம் இல்ல அங்கிள்.. டைம் ஆச்சு, கிளம்பனும் அது தான்….

குமார் : என்ன வந்ததுமா…. ஒழுங்கா சாப்பிட்டுட்டு தான் போகனும்…

அருண் : அதெல்லாம் வேண்டாங்க அங்கிள்.. இன்னொரு நாள் வரோம்.. வினிதா கொஞ்சம் அவசரமா கிளம்பனுமாம…

குமார் வினிதாவை பார்க்க…

வினிதா : யெஸ் அங்கிள்.. வீட்டில சின்ன வேலை அது தான்… (என்று இழுக்க)

மாலதியும், விஜியும் சமையலறையிலிருந்து வெளியே வந்தனர்.

விஜி : ம்ம்… இவ்வளவு நேரமா… வாங்க வாங்க சாப்பிடலாம்..

அருண் : இல்ல ஆண்டி… இன்னொரு நாள்….

என்று சொல்லியபடி அவர்களுக்கு பின்னால் யாரோ வருவதை பார்த்து, சிறிது திகைப்புடன் பார்க்க…

விஜி : ஹோ.. தமிழ் பா… என்னுடைய பெண்…..

என்று இன்ட்ரோ பண்ண.. நன்றாக பார்த்தான். அங்கு ரோட்டில் பார்த்த அதே பெண். திரும்பவும் அருண் வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை. இப்பொழுது தான் வினிதாவும் அந்த பெண்னை பார்த்தாள். பார்த்துக் கொண்டே அருண் அருகில் வந்து..

வினிதா : சரிடா.. அங்கிள் கிட்ட சொல்லீட்டேன்.. வா கிளம்பலாம்… (என்று நக்கலாக சிறித்துக் கொண்டே சொல்ல)

அருண் : (வலிந்த படியே) அது வந்து… அங்கிள்…… சாப்பிட……

வினிதா : ஆமாம், சாப்பிடலைனா பரவால கிளம்புங்கனு சொல்லீட்டாரு.. ம்ம்… கிளம்பலாம் வா…

அருண் : அது அம்…..மா…..

வினிதா : ம்ம்ம்… பெரியம்மா வந்து தானே ஆகனும்…

அருண் : இல்….ல…… அ….. து…..

வினிதா : (நக்கலாக சிரித்துக் கொண்டே) டேய் நீ எதுக்கு பம்பரேனு தெரியும் டா….

அருண் அவள் தலையில் லேசாக கொட்டிவிட்டு, அவளுடைய கையை பிடித்து வேகமாக கூப்பிட்டு வந்து அவளை ஷோபாவில் அமர்த்தி, அவள் அருகில் அமர்ந்து,

அருண் : அங்கிள் வினிதாவை கண்வீனியன்ஸ் பண்ணீட்டேன்.. நாங்க சாப்பிட்டு தான் போறோம்.. சரிங்கலா அங்கிள்…

அங்கிள் : உங்கல யாரு சாப்பிடாம அனுப்பரோம் நு சொன்னா….

அருண் தன் ஓரக்கண்ணால் வினிதாவை பார்க்க, வினிதா நக்கலாக சிரித்துக் கொண்டே “பல்பு” என்று கையால் சைகை காட்டிக் கொண்டே திரும்பிக் கொண்டாள்…

தமிழும், விஜியின் மகன் விஜய்யும் வந்தமர, குமார் எழுந்து சென்றான். தமிழ் ஏதோ சொல்ல வாய் திரக்க…

அருண் : இதுக்கெல்லாம் எதுக்கு சாரி.. ஏதோ தெரியாம நடந்திடுச்சு.. விடுங்க நான் அப்பவே மறந்துட்டேன்…

தமிழ் : (புரியாமல் யோசித்துவிட்டு) நான் சாரியே கேட்கலையே… எதுக்கு இப்படி பேசரீங்க….

வினிதா : ஆமாம், சாய்ங்காலத்திலிருந்து இவனுக்கு மண்ட குழம்பி போச்சு, இப்படி தான் சம்பந்தம் சம்பந்தமே இல்லாம பேசி எல்லோர்கிட்டையும் பல்ப் வாங்கிக்குவான். இவன் பேச்ச பெருசா நினைக்காத..

தமிழ் : பை த பை.. உன் பெயர் என்ன?

வினிதா : நான் வினிதா, என்ன வினினு கூப்பிடுவாங்க, நீ தமிழ் தானே?

தமிழ் : எஸ்… நீ எந்த கிளாஸ்?

வினிதா : நானும் உன்னபோல 12 ரிசல்ட்க்கு வைய்ட்டீங்…

தமிழ் : இது அன்னாவா….

அருண் உடனே அலர்ட்டாகி அவளை பார்த்தான். நாம் வாய் கொடுத்து திரும்பவும் பல்ப் வாங்க கூடாது என்பதில் ஜாக்கிரதையாகவே இருந்தான்.

வினிதா : ஆமாம்.. இவன பத்தி பெருசா சொல்ல ஒன்னும் இல்ல.. நாம்ப வா நம்ப மேட்டருக்கு போகலாம்…

என்று சொன்னதும் அருணிற்கு பொக்கு என்று போனது. என்ன என்னமோ சொல்லுவாள் என்று எதிர்பார்த்து காத்திருந்தான். வினிதா இதனை தெரிந்தே தான் அவனை ஓட்ட, இப்படி பேசி கட் பண்ணினாள். அருண் இதனை எதிர்பார்க்காமல், உடனே…

அருண் : வினி என்ன என்ன பத்தி சொல்ல வேண்டியது தானே.. நான்…

வினிதா : உன்கிட்ட ஏதாவது கேட்டாங்கலா… தமிழ் அவன்கிட்ட ஏதாவது கேட்டீங்க?

தமிழ் : இல்லையே….

வினிதா : அதுக்குள்ள என்னடா முந்திரிக் கொட்டை தனமா… நாங்க பேசிகிட்டு இருக்கோம் ல….

அருண் அமைதியாக கன்னத்தில் கையை வைத்துவிட்டு, இருவரையும் பேந்த பேந்த பார்த்துக் கொண்டிருந்தான். இதுவரை, இவன் தான் எல்லோருக்கும் பல்ப் கொடுப்பான், இவனிடம் வாய் கொடுத்து மீள்வது கடினம். அப்படிபட்டவன் இன்று மாலையிலிருந்து என்ன பேசினாலும், ஒரே பல்பாக வாங்கிக் கொண்டிருக்கிறான். ஏன் இப்படி என்று இவனிற்கே தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான். வினிதாவும், தமிழும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். விஜய் டிவியில் கார்ட்டூன் போட்டு பார்த்துக் கொண்டிருந்தான். அருணிற்கு தமிழுடன் பேச அவன் மனது துடியாய் துடித்தது. இருந்தாலும், என்ன பேசினாலும் ஏதாவது பல்ப் கொடுத்து வாயடைத்து விடுகிறார்கள். இப்படி பேசி தமிழ் முன்னாடி கேவலப்படுவதற்கு, இப்படியே இருந்து கொண்டு, இப்போ இருக்கிற பேருடன் இருந்து கொள்வதே சரி என பட்டது. அப்பொழுதே, அம்மா என்ன மட்டும் கூப்பிட்டார்கள். தேவை இல்லாமல், துணைக்குனு ஒரு குரங்க கூப்பிட்டுவிட்டு வந்துவிட்டோமே என தன்னை தானே நொந்து கொண்டான்.

குமார் ஹாலிற்கு வந்து அனைவரையும் சாப்பிட கூப்பிட்டான். அனைவரும் எழுந்து சென்று சாப்பிட்டனர். சாப்பிடும் போது கூட, அருண் தன் உணவில் நியாபகம் வைக்காமல், அப்போ அப்போ தமிழை பார்த்துக் கொண்டான். இதனை சரியாக கவனித்த வினிதா அவனை இன்னும் சைகையிலேயே ஓட்ட ஆரம்பித்தாள். அவளின் ஓட்டுதலால், பேசாமல் வேகமாக சாப்பிட்டுவிட்டு ஹாலிற்கு போனான்.

124830cookie-checkகாதல் சடுகுடு – Part 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *