சரஸ்வதி உடல் எடை குறைந்து எலும்பு குட்டின்மேல் தோல் போர்த்தியவள் போல் கட்சி அளித்தால் முகத்தின் பொலிவு மட்டும் மாறாமல் இருந்தது. சரஸ்வதி பார்க்க ஹிந்தி சினிமா நடிகை மாதுரி தீட்சித் போல இருப்பாள் முகம் மட்டும் சற்று மெலிந்து இருக்கும் ஒரு உயர் சமுதாய பெண் என்பது அவளை பார்த்தாலே நன்கு தெரியும். அப்படி இருந்த சரஸ்வதி பொலிவிழந்து காண பட்டாள். சரியான தூக்கம் இல்லாமல் கண்கள் உள்வாங்கி இருந்தன. அவள் கடும் அவதியில் இருப்பது நன்கு தெரிந்தது. அவளுடைய இந்த நிலையை பார்த்த வருண் மிகவும் மனமுடைந்து போனான் . காயத்ரி சரஸ்வதியோடு பேசிக்கொண்டு இருந்தாலும் அவ கவனம் மட்டும் வருண் மிதே இருந்தது. பத்மாவதி அம்மா காபி பரிமாற வர வருண் இருக்கையை விட்டு எழுந்து அதை வாங்க முற்பட
பத்மாவதி புன்னகையுடன் : உட்காரு வருண் நோ போர்மாலிட்டீஸ்..
வருண்: பரவாயில்லை ஆன்டி கொடுங்கள் நான் பரிமாறுகிறேன்
வருண் பத்மாவதி கையில் இருந்த தட்டை வாங்கி அனைவருக்கும் காபி பரிமாற அனைவரும் காபி அருந்தினர்.
பத்மாவதி: வருண் உங்க அப்பா என்ன பண்ணுறாரு?
சரஸ்வதி : அம்மா அவங்களும் நம்மைப்போல தான். நம்ம அப்பா இறக்குறது ஒரு சில மாதங்களுக்கு முன்பு தான் அவங்க அப்பாவும் இறந்தார்.
வருண்: சோகமாய் ஆமாம் ஆன்டி ஹார்ட் அட்டாக்கினால் தான் இறந்தார்.
பத்மாவதி: உங்க அப்பா என்ன பண்ணிட்டு இருந்தார்?
காயத்ரி: அவர் ராணுவத்திலிருந்து பனி ஓய்வு பெற்றவர் ஒர்டினன்ஸ் பாக்டரியோட செக்யூரிட்டி இன்ச்சார்ஜ் இருந்தார்.
பத்மாவதி: அங்கிள் கூட ஒர்டினன்ஸ் பாக்டரில தான் பணிபுரிஞ்சார்
வருண்: தெரியும் ஆன்டி.
பத்மாவதி: நீங்க பேசிட்டு இருங்க நான் சமையல் பண்ணனும். இன்னைக்கு எல்லாரும் இங்க தான் சாப்பிடணும்.
வருண் இல்லை ஆன்டி இன்னொரு நாள் கண்டிப்பாக சாப்பிட வரோம் இன்னைக்கு அம்மாவுக்கு நான் எதுவும் சொல்ல வில்லை. அம்மா சமைத்து விட்டு எங்களுக்காக காத்து இருப்பார்கள்.
பத்மாவதி: நீ சொல்லும் விதத்திலேயே என்னால் உன்னை வற்புறுத்த முடியாமல் போகுது.. ஸ்வீட் சில்றேன்.. உங்க அப்பா அம்மா உங்களை நன்றாக வளர்த்து இருக்கிறார்கள். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..
சரஸ்வதி காயத்ரியிடம் உன் அன்னான் கொஞ்சம் கூட மாறவில்லை..
காயத்ரி சிரித்து கொண்டு வருணை பார்த்து கிளம்பலாமா என்று கேட்க இருவரும் கிளம்ப ஆயத்தம் ஆனார்கள்..
சரஸ்வதி: இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போங்களேன்.
காயத்ரி: அம்மா காத்துகிட்டு இருப்பாங்க நான் இப்ப கிளம்பினா தான் உணவு நேரத்துக்கு சரியாக போக முடியும்
வருண்: சாயங்காலம் நான் பேருந்து மூலம் ஹைதெராபாத் புறப்படணும் எனக்கும் நெறைய வேலைகள் உள்ளன. அடுத்த விடுமுறைக்கு வரும்பொழுது சந்திக்கிறேன்.
இருவரும் விடைபெற்று வீடு திம்பினர்..
வருணும் காயத்ரியும் வழில் ஏதும் பேசிக்கொள்ளாமல் வீட்டை அடைந்தனர். மதிய உணவுக்கு பின் வருண் தனது பிரயாணத்துக்கு தயார் ஆகும் நிலையில் காயத்ரி அவன் அறைக்குள் வந்தால்.
காயத்ரி: அண்ணா தேவைபடும் அனைத்தையும் எடுத்து கொண்டாயா எதையும் மறக்கவில்லையே?
வருண்: தேவையானது அனைத்தும் சூட்கேசில் உள்ளது அனைத்தும் பேக் ஆகி விட்டது.
காயத்ரி: அண்ணா சரஸ்வதி ரொம்ப டல் ஆகிட்டா இல்ல?
வருண்: ஹ்ம்ம் ஆமாம் பார்க்க அப்படி தான் இருந்துச்சு.
காயத்ரி: உனக்கு உணைமையில் அவளுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாதா?
வருண்: காலேஜ் 2ம் ஆண்டு முதல் அவளுடனான தொடர்புல துண்டிக்க பட அப்பாவின் மரணத்திற்கு பின் முற்றிலும் மறந்து போனேன்.
காயத்ரி:தெரியாது என்றல் விடு தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமும் இனி இல்லை. வேளையில் கவனம் செலுத்து மத்ததை நானும் அம்மாவும் பார்த்துக்கொள்கிறோம்.
வருண்: என்ன சொல்ல வர? அவளுக்கும் எனக்கும் நடுவே எதுவும் இப்போதைக்கு இல்லை. அப்படி ஒரு எண்ணம் எனக்கு வரவும் வராது ஏனென்றால் அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சு.
காயத்ரி: அதுனால தான் சொல்லுறேன் அவளோட நிலைய பார்த்து நீ வேற எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது.
வருண்: எனக்கு தெரியும் நான் பார்த்து கொள்கிறேன்.
வருண் ஹைதெராபாத் புறப்பட்டான்..